இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரிடம் இருந்து மெசூல் நகரை மீண்டும் கைபற்றுவதற்காக, தாக்குதல் ஒன்றை இராக் படைப்பிரிவுகள் தொடங்கியுள்ளன.
இந்த தாக்குதலை அறிவித்தபோது, வெற்றிக்கான நேரம் வந்துவிட்டது என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறியிருக்கிறார்.
அது முதல் பீரங்கி குண்டு தாக்குதல் ஒலி கேட்ட வண்ணம் இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு குழுவினர் மெசூல் நகரை கைப்பற்றினர். இப்போது இந்த குழுவினரின் கடைசி வலுவிடமாக இது விளங்குகிறது.
இராக் மற்றும் அமெரிக்காவால் விமானத் தாக்குதல் நடத்தப்படும் இந்த நகரை சுற்றி, 3 லட்சம் படைப்பிரிவுகளும், ஆயுதக்குழுவினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மெசூல் நகரில் 4 முதல் 8 ஆயிரம் வரை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அங்கு வாழும் 15 லட்சம் பேரின் பாதுகாப்பு பற்றி ஐக்கிய நாடுகள் அவை கவலை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை தோல்வியடைய செய்கின்ற இந்த முக்கியமான நேரத்தில் இராக்கிற்கு உதவ சர்வதேச கூட்டணி படை தயாராக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் தெரிவித்திருக்கிறார்.