,இராக்கின் வடபுல நகரான மொசூலில் ஐ.எஸ் போராளிகளை விரட்டி அடிக்கும் போர் ஆறாவது நாளை நோக்கி நகர்ந்துள்ளது. இன்னும் இராக் படையினர் ஐ.எஸ் போராளிகளிடம் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் பல தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடுத்து வருவதாகவும், ஒவ்வொரு வரும் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் வேகமாக அரசு படையினரை நோக்கி வருவதாகவும் நகரின் தெற்கே இராக் படையினருடன் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு இராக் அரசு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மொசூலின் கிழக்கில் பாஷிக்கா அருகே குர்தீஷ் போராளிகளும் தீவிர துப்பாக்கிச்சூடு சண்டையை எதிர் கொண்டுள்ளனர்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மொசூல் நகருக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த மோதல் நகரின் மையப்பகுதியை அடையும் போது பெரிய எண்ணிக்கையிலான மக்கள் வெளியேற்றம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.