இறந்தவர்களை தகனம் செய்வது குறித்து ஒரு புதிய வழிகாட்டுதலை வத்திக்கான் அளித்துள்ளது.
வத்திக்கான்.
ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள், தாங்கள் மிகவும் நேசித்தவர்களை தகனம் செய்த பிறகு அந்தச் சாம்பலை தூவுவதோ அல்லது வீட்டில் வைத்துக்கொள்ளுவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
அந்த வழிகாட்டுதலில், தகனம் செய்யப் பட்டவர்களின் சாம்பலை ஒரு தேவாலயம் அல்லது கல்லறையில் செலுத்துமாறு கூறியுள்ளது.
அவை தான் அவர்களின் சேமிப்பை அர்ப்பணிக்க ஒரு புனிதமான இடமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை அடக்கம் செய்வதைத் தான் விரும்புகிறது என்றாலும் , அது 1960களில் இருந்து தகனம் செய்வதற்கும் அனுமதி அளித்துள்ளது.
ரோமன் கத்தோலிக்கர்களிடம் பிரபலமாக உள்ள தகனம் செய்யும் நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மற்றும் மக்கள் இறந்தவர்களின் சாம்பலை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவரவர்களே பெரும்பாலும் மிகவும் தனிப்பட்ட வகையில் தேர்வுகளைச் செய்யும் சூழலுக்கு பதில் நடவடிக்கையாக வத்திக்கானின் இந்த புதிய வழிகாட்டுதல் வருகிறது.