உலகம்
கியூபா புரட்சியின் தந்தை பிடல் காஸ்ரோ மறைந்தார்
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் கம்பியூனி] புரட்சித் தலைவருமான பிடல் கஸ்ட்ரோ தனது 90ஆவது வயதில் காலமானார். ’’கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார்.ஃபிடல் காஸ்ட்ரோ கியுபாவை சுமார் 50 ஆண்டுகளுக்கு ஒரு கட்சி அரசாக ஆண்டு வந்தார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008ல்தான் அவருக்கு அடுத்த அதிபராகப் பதவியேற்றார்.மிகவும் சோகமான முகத்துடன் கியுபா அரச தொலைக்காட்சியில்…
மிகப்பெரும் தாக்குதலை முன்கூட்டியே முறியடித்த பிரான்ஸ்
அடுத்த வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான சிறார்கள் கொல்லப்பட்டிருப்பர், அதிஸ்டவசமாக பிரான்ஸ் படைகள் தடுத்துள்ளனர். பிரான்ஸ் தலைநகருக்குள் அல்லது அதனை ஒட்டிய பகுதியில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டிருந்தனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு பேரும் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவரும் இராக்கில் உள்ள ஐ.எஸ் தளபதி ஒருவரிடமிருந்து சங்கேத மொபைல் செயலி வழியாக உத்தரவுகளை பெற்றுக்க்கொண்டிருந்ததாக அரச வழக்குரைஞர் பிரான்சுவா மோலின்ஸ் தெரிவித்துள்ளார்.ஸ்ட்ராஸ்பர்க் மற்றும் மார்ஸெய் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் தானியங்கி ஆயுதங்களின் குவியல் ஒன்றையும், அதனுடன் கூடுதலாக மதத்தின்…
சீனாவில் தொழிற்சாலை விபத்து 40 பேர் பலி
சீனாவில் ஜி யாங்ஷி மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் நடைபெற்ற விபத்தில் நாற்பதுக்கும் மேலான மக்கள் இறந்துள்ளனர்.இந்த விபத்தினால் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை தெரியாத நிலை உள்ளதாக சீன செய்தி முகமையான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.ஊழல், தொழிற்சாலைகளில் உள்ள பாதுகாப்பு தர குறைபாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதால் உற்பத்தியை அதிகரிக்க தொழிலாளர்களுக்கு தரப்படும் அழுத்தம் ஆகிய பல கூட்டு காரணங்களால் பெரும் தொழிற்சாலை விபத்துக்கள் சீனாவில் நடப்பது வழக்கமானது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
ட்ரும்ப் அவர்களை ரஷ்யா பக்கம் சாயாமல் இருக்கு ஒபா முயற்சி
பிரியாவிடை பயணமாக ஜெர்மனியில் பராக் ஒபாமா,பெர்லினில் நடைபெற்ற ஐரோப்பிய தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றார்.இந்த கூட்டத்தில் உக்ரேனில் ரஷ்ய தலையீட்டை அடுத்து, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை டிரம்ப் தளர்த்தக் கூடாது என்பதில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஒபாமா தெரிவித்திருக்கிறார்.முன்னதாக, முஸ்லிம்கள் பற்றிய பயம் நியாயமானதே என்று சமீபத்தில் டுவிட்டர் பதிவிட்ட ஓய்வு பெற்ற தளபதி மைக்கேல் ஃபிளின்னை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் நியமித்திருக்கிறார்.இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதக் குழுவை எதிர்த்து போராடும் ஒபாமாவின் அணுகுமுறை குறித்தும்…
கனவை சாட்சியாக வைத்து 28 ஆண்டுகள் தண்டனையா?
சட்டம் பல குற்றமற்றவர்களை தண்டித்தாலும் ஒரு குற்றவாளியும் தப்பிக்க கூடாது என்பதில் கவனமாக உள்ளது, ஆனால் அமெரிக்க நீதிபதிகள் குற்றவாளியையும் தப்பிக்கவிட்டு குற்றம் செய்யாதவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது. ஒரு சிலவ ஆண்டுகள் அல்ல 28 ஆண்டுகள் குற்றம் செய்யாது சிறையில் இருந்துள்ளார்.அதுவும் எப்படி நீதிபதிகள் குறித்த நபர் குற்றம் செய்துள்ளார் என கண்டு பிடித்தமை வேடிக்கையானது.தன்னை பாலியல் வல்லுறவு செய்த நபரை தனது கனவில் அடையாளம் கண்டதாக ஒரு பெண் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபருக்கு 28 ஆண்டுகள் நீதிபதிகள் தண்டனை கொடுத்துள்ளனர்.…
நியூசிலாந்தில் பாரிய பூகம்பமும் சுனாமியும் பலர் பலி
நியுஸிலாந்தின் தெற்கு தீவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கி உள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது. அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் 7.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து, இரு மணி நேரங்கள் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியது.கடுமையான நில நடுக்கத்தை அடுத்து இரண்டு பேர் உயிரிழந்தனர். கூடுதல் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று பிரதமர் ஜான் கே தெரிவித்துள்ளார்.தலைநகர் வெலிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலோரப்…