கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் கம்பியூனி] புரட்சித் தலைவருமான பிடல் கஸ்ட்ரோ தனது 90ஆவது வயதில் காலமானார்.
’’கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார்.
ஃபிடல் காஸ்ட்ரோ கியுபாவை சுமார் 50 ஆண்டுகளுக்கு ஒரு கட்சி அரசாக ஆண்டு வந்தார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008ல்தான் அவருக்கு அடுத்த அதிபராகப் பதவியேற்றார்.
மிகவும் சோகமான முகத்துடன் கியுபா அரச தொலைக்காட்சியில் எதிர்பார்க்கப்படாத பின்னிரவு ஒளிபரப்பில் இந்த அறிவிப்பை ரவுல் காஸ்ட்ரோ செய்தார்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
ஃபிடலின் மறைவையொட்டி கியூபாவில் பல நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்.
அவ்வப்போது அவர் எழுதி வந்த பத்திரிகை கட்டுரைள் தவிர, ஃபிடல் காஸ்ட்ரோ அரசியல் வாழ்விலி்ருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்ற நிலையிலேயே இருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் , நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸின் கடைசி நாளன்று, ஃபிடல் , அபூர்வமாகத் தோன்றி உரையாற்றினார்.
உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 07 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மிக நீண்ட காலம் அந்த நாட்டு ஜனாதிபதியாக பதவி வகித்த பிடல் கஸ்ட்ரோ, கடந்த 2008ஆம் ஆண்டு ஆட்சியை தனது சகோதரனான ராவுல் கெஸ்ட்ரோவிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு பெற்றார்.
1920ஆம் ஆண்டு தென் கிழக்கு கியூபாவின் ஒரியன்டே மாகாணத்தில் பிறந்த பிடெல் கஸ்ட்ரோ, 1976ஆம் ஆண்டு அந்த நாட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.