ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராஸிக்குக்கு பிணை வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் அவரது விளக்கமறியலை எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மேலதிக நீதிவான் சந்தன கலங்சூரிய உத்தரவிட்டுள்ளார்.
பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையின் கருத்துக்களை வெளியிட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக கொழும்பு பிரதான் நீதிவான் மன்றிலும் வழக்கு ஒன்று பதிவு செய்யட்டுள்ள நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அந்த வழக்கில் அவரைப் பிணையில் விடுத்த போது எந்தவொரு மதத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேய குறித்த பிணை நிபந்தனையை அவர் மீறினார் என கொழும்பு மேலதிக நீதிவான் சுட்டிக்காட்டி பிணை வழங்க மறுத்துள்ளார்.
இவருக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.