அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தாக்கல் செய்துள்ள பிணை மனு எதிர்வரும் ஐந்தாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
கருணா அம்மான் சார்பில் அவரது சட்டத்தரணி நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனு தாக்கல்செய்யப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் மீள்குடியேற்ற பிரதி அமை ச்சராக இருந்த கருணா அம்மான் அரச வசாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதால் அரசாங்க த்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுசெய்யப்பட்டதற்கு அமைய அதனை விசாரித்த பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர் கருணாவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்..
இதற்கமைய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கருணாவை டிசெம்பர் ஏழாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள கருணாவிற்கு சிறைச்சாலையில் பாது காப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி அதனால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை குண்டு துளைக்காத வாகனத்தை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு கடிதம் மூலம் ஜனாதிபதி செயலகத்திற்கு ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும் ஜனாதிபதி செயலகம் குறித்த கடிதத்திற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கருணாவால் அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தை ஆராய்ந்து உறுதிப்படுத்து மாறு பொலிஸ் நிதி மோசடிப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.