இந்தியா ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கூடங்குளம் புதிய அணு உலை உள்ளிட்ட 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 8வது மாநாடு நேற்று கோவாவில் தொடங்கியது. கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கடும் பனி காரணமாக 9 மணி நேரம் காலதாமதமாக இந்தியா வந்து சேர்ந்த புடினை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் மற்றும் கோவா துணை முதல்வர் பிரன்சிஸ் டிசோசா ஆகியோர் வரவேற்றனர். பின்னர், ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி இடையே இந்தியா, ரஷ்யா நாடுகள் இடையேயான 17ம் ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் ஆகியோர் கலந்து கொண்டு, காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் பற்றியும் அதில் உயிரிழந்த 19 இந்திய வீரர்கள் பற்றியும் விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து, இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தான பேச்சுவார்த்தையிலும் அவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, இந்திய ரஷ்ய நாடுகளுக்கிடையேயான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவை: