முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் அளிக்காமல் உள்ளது. இதுவரை 10 அறிக்கைகளை வெளியிட்டுள்ள அப்பல்லோ கடந்த 6 நாட்களாக அறிக்கை எதையும் வெளியிடாமல் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது முதல் அவ்வப்போது அப்பல்லோவிலிருந்து அறிக்கைகள் வெளியாகிக் கொண்டுள்ளன. இதுவரை 10 அறிக்கைகள் வந்துள்ளன. அதில் ஒரே ஒரு முறை மட்டுமே மிக விரிவான அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் வரவில்லை. கடைசியாக 10ம் தேதிதான் அறிக்கை வெளியானது. அதற்குப் பிறகு எந்த அறிக்கையும் வரவில்லை.
செப்டம்பர் 22ல் அனுமதி செப்டம்பர் 22ம் தேதி இரவு முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பானது. முதல்வர் உடல் நலனுக்கு என்ன என்ற பெரும் கவலை அதிமுகவினர் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியலும் நிலவியது.
23ம் தேதி முதல் அறிக்கை அடுத்த நாள் அப்பல்லோ வெளியிட்ட முதல் அறிக்கையில் முதல்வர் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை மூலம் சாதாரண காய்ச்சல் காரணமாக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவே அனைவரும் நினைத்தனர்.