கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப் பகுதிக்குள் 60 கோடிக்கு “சில் ஆடைகள்” விநியோகித்ததாக குற்றம்சாட்டப்ப ட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சாட்சி அளித்தார்.;.
பௌத்த பக்தர்களுக்கான சில் ஆடை விநியோகிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றது. அதனை நிறுத்துமாறு 2014 நவம்பர் 21 ஆம் திகதி சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்தேன். அனுராதபுரத்தில் சில் ஆடையை நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டதை தான் நேரடியாக கண்டதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார அட்டை அந்த ஆடைக்குள் வைக்கப்ப ட்டிருந்தாகவும் மஹிந்த தேசப்பிரிய நீதிமன்றத்தில் நேற்று சாட்சியம் அளித்துள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது