இந்தியா
தாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்
நியுஸிலாந்து அணிக்கெதிரான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 190 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.இந்த போட்டியில் சுவாரஷ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.டோனி மற்றும் கோஹ்லி தங்களது அணி ஜேர்சியில் பெயர்களை மாற்றியவாறு போட்டியில் பங்குகொண்டனர்.இந்த போட்டியில் டோனியின் ஜேர்சியில் “தேவகி” எனவும்,கோஹ்லியின் ஜேர்சியில் “சரோஜ்” எனவும் பெயரிடப்பட்டிருந்தது.இதுபற்றி மேலும் தெரியவருவதாவது தங்களது தாயாரின் பெயர்களை ஜேர்சியில் அச்சிட்டவாறு நேற்று போட்டியில் கலந்துக்கொண்டுள்ளனர்.
புனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி
இந்தியாவின் கிழக்கில் உள்ள ஒதிஷா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர் என்று உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.திங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.திங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.எஸ்.யு.எம். (SUM) மருத்துவமனையில், டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுமார் 120 தீயணைப்புப் படையினர்…
மோடி-புட்டின் ஒப்பங்கள் கைச்சாத்து
இந்தியா ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கூடங்குளம் புதிய அணு உலை உள்ளிட்ட 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 8வது மாநாடு நேற்று கோவாவில் தொடங்கியது. கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.கடும் பனி காரணமாக 9 மணி நேரம் காலதாமதமாக இந்தியா வந்து சேர்ந்த புடினை…
ஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக அறிக்கை இல்லை
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் அளிக்காமல் உள்ளது. இதுவரை 10 அறிக்கைகளை வெளியிட்டுள்ள அப்பல்லோ கடந்த 6 நாட்களாக அறிக்கை எதையும் வெளியிடாமல் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது முதல் அவ்வப்போது அப்பல்லோவிலிருந்து அறிக்கைகள் வெளியாகிக் கொண்டுள்ளன. இதுவரை 10 அறிக்கைகள் வந்துள்ளன. அதில் ஒரே ஒரு முறை மட்டுமே மிக விரிவான அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் வரவில்லை. கடைசியாக 10ம்…
பனீர்ச்செல்வம் பதில்முதல்வர்
முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளார். ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரிடமிருந்த காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும், கடந்த செவ்வாய்க்கிழமை முதல், பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா பதவி வகிக்கிறார். ஜெயலலிதா பரிந்துரைப்படிதான், பன்னீர்செல்வத்திற்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தகவலை முறைப்படி…
கோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்
கோவாவில் இன்று நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரதமர் மோடி, தீவிரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் 2 நாள் மாநாடு இன்று பனாஜி நகரில் தொடங்குகிறது. இதில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் விதமாக ரஷிய, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட அமைப்பு 'பிரிக்ஸ்' ஆகும். இதன் உச்சி மாநாடு ஆண்டுதோறும்…