இந்தியா
நான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை இரவு அறிக்கை ஒன்றை விட்டுள்ளார், இந்த அறிக்கையில் அனைவரது பிரார்த்தனைகளால் தான் மறுபிறவி எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.வெகு விரைவில் முழு உடல் நலன் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.வரும் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.அதேபோல், தனது கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில், தொண்டர்கள் அனைவரும் அதிமுக வெற்றிக்காகப்…
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு
பாகிஸ்தானில் வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடித்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு கூறியுள்ளனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் லஸ்பெல்லா மாவட்டத்தில் தர்கா ஷா நூரணி என்ற பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலம் உள்ளது. இங்கு தினமும் மாலை நேரத்தில் ‘தாமல்’ என்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நேற்று மாலை வழக்கம் போல நடன நிகழ்ச்சி நடந்தது. இதனை பார்ப்பதற்காக பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் வந்து இருந்தனர். அப்போது திடீரென பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில்…
பழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட் பாதுகாப்பு
புதிதாக வெளியிட உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் அதிநவீன தொழில்நுட்பம் இருக்கும் என்றும், இதன்மூலம், செயற்கைக்கோள் மூலமாகவும், பணம் பதுக்கப்படும் இடத்தை கண்டறியலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செவ்வாய்க்கிழமை நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லாத காசாகிவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இந்த பணத்திற்கு பதிலாக நாளை மறுநாள், முதல் வங்கிகளிலும், போஸ்ட் ஆபீஸ்களிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 500 மற்றும் 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட உள்ளன. இந்த ரூபாய்…
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி விதித்த தந்தை: கேரளாவில் சம்பவம்
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி விதித்த தந்தையின் மீது கேரள அரசு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.பிறந்த குழந்தை ஐந்து முறை தொழுகையை கேட்ட பிறகுதான் அதற்குத் தாய் பால் கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு முன் பால் கொடுத்தால், தாயை 'தலாக்' என்று கூறி, இஸ்லாம் முறைப்படி விவாகரத்து செய்யவேண்டிவரும் என்று தந்தை அபூபக்கர் அச்சுறுத்தியதால், மருத்துவர்கள் அறிவுறுத்திய போதும் அந்தத் தாய் அதற்குச் செவிமடுக்கவில்லை என கேரள மாநில குழந்தைகள் உரிமை நல ஆணைய தலைவர் தெரிவித்தார். கடந்த புதனன்று நடந்த இந்தச்…
மிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு
வடக்கு இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய போதைப்பொருள் கைப்பற்றுதல் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள குளிர்பான தொழிற்சாலை ஒன்றில் இருபது மில்லியனிற்கும் அதிகமான மாண்ட்ராக்ஸ் என்று அழைக்கப்படும் போதைப்பொருள் மருந்தான "மெத்தாக்குவாலோன்" மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.சோதனை தொடர்பாக, இந்திப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தென் ஆப்ரிக்கா மற்றும் மொசாம்பிக்கிற்கு இந்த போதைப்பொருட்கள் கடத்தப்படவிருந்தன என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.ஆப்ரிக்கா மற்றும் ஆசியா பகுதிகளில் நடத்தப்படும் இரவுநேர ஆட்ட நிகழ்ச்சிகளில்…
சிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை
இஸ்லாமியவாதக் குழுவான, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை சேர்ந்த எட்டு சிறைக்கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்பா.போபால் நகர மத்திய சிறையிலிருந்து, சிறைக்காவலர் ஒருவரைக் கொன்றுவிட்டு, படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி சிறைச் சுவர்களில் ஏறித் தப்பிய 8 சிறைக் கைதிகளே இவ்வாறு சுட்டுக் கொல்லபப்ட்டனர்.இவர்கள் சிறைக்காவலரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.தப்பியோடிய இவர்கள் அனைவரும் போபாலின் புற நகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போபாலின் தலைமை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் சௌத்ரி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.அவர்களை சரணடையச் சொன்னோம், ஆனால் அவர்கள் போலிஸ் முற்றுகை…