புதிய வகை தொழிநுட்பம் மற்றும் நவீன கதிர்வீச்சு தாக்குதல்கள் திட்டத்தை பலப்படுத்தும் வகையிலான நவீன ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியை ரஷ்யா தொடங்கியுள்ளது.
வளர்ந்துள்ள தொழிநுட்ப விருத்தியிற்கேற்ப எதிர்கால சந்ததியினர் பயண்படுத்தும் வகையிலான, ஆயுத உற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புதுறை பிரதி அமைச்சர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தின் மூலம் மின்காந்த சக்தி (electromagnetic), கதிரலைசக்தி (plasma) மற்றும் அதிவேக ஏவுகனைகள் (hypersonic missiles) என்பவற்றை மையப்படுத்தியதான ஆயுதங்களை உற்பத்தி செய்வதே அந்நாட்டின் திட்டமாக போரிசோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த ஆயுதங்கள் யாவும் எதிர்கால பயண்பாட்டிற்கு ஏற்புடைய ஆயுதங்கள் என்பதோடு, அவற்றின் அழிவு சக்திகளும் மிக அதிகமானதாகும். அத்தோடு அதிவேக ஏவுகனைகளான (Mach 5) ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு வேகமுடையனவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
புதிய வகை ஆயுதங்கள் யாவும் நவீன கட்டுபாட்டு விதிகளுடன் உருவாக்கப்படுகின்றன. மேலும் இதுவரைகாலமும் ஆயுத தாக்குதல்களுக்கு பிரயோகிக்கப்படாத, இயற்பியல் விதிகளுடன் இயங்ககூடிய ஆயுதங்களை, உலகிற்கு அறிமுகப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.