இலங்கை
ராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்?
ராஜபக்ஸ குடும்பத்தின் தவறுகளுக்கு எதிராக ஆதாரம் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொலைக்காட்சி நிக ழ்ச்சிகளுக்கு தெரிவிப்பதாக குற்றம் சுமத்தினார்.ராஜபக்ஸாக்களின் செல்வங்கள் டுபாயில் உள்ள வங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருப்ப தாகவும், டுபாய் அரசாங்கம் தகவல்களை வெளியிட மறுக்கின்றது என்றும் ஐ.தே.கட்சியின் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் நான் கூறுவது ஒன்று மட்டுமே, டுபாய்க்கு செல்வதற்கு பதிலாக ஹம்பாந்தோட்டை மற்றும் கல்கிஸ்ஸ சென்று ராஜபக்ஸர்களின் சொத்து தொடர்பில் தகவல் திரட்டுங்கள் என்றே என அனுர தெரிவித்துள்ளார்.ஷிரந்தி…
கோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு : அரசாங்கம்
ஆவா குழுவிற்கும் – கோட்டாபயவிற்கும் இருக்கும் தொடர்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ராஜித்த குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆவா குழு என்பது கோட்டாபயவின் ஒரு படைப்பென கூறியிருந்தார். எனினும், அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை கோட்டாபய முழுமையாக மறுத்திருந்தார். ஆவா குழு ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் தனக்குத் தெரியாது என கோட்டாபய ராஜபக்ஸ கூறியிருந்தாலும், அவருடைய முழுமையான ஆசீர்வாதத்துடனேயே அந்தக் குழு ஆரம்பிக்க ப்பட்டதாகவும்,…
எழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை
தமிழ் மக்களின் தன்னியல்பான மக்கள் எழுச்சி நிகழ்வான எழுக தமிழ் எழுச்சிக்கு எதிர்ப்புணர்வினை நேரடியாக காட்ட இயலாத சிங்கள அரசு மாணவர்களை படுகொலை செய்து பதிலடி கொடுத்துள்ளது. அரசியல் ஆய்வாளர் திரு மு திருனாவுக்கரசு அவர்கள் கூறியுள்ளார். பிரித்தானியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்வானொலியான உயிரோடையில் இடம்பெற்ற கலந்துரயாடல் நிகழ்ச்சியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள பொலிசாரினால் கொல்லபப்ட்டது ஒரு சாதாரண விடயம் அல்ல இது ஒரு திட்டமிட்ட பதிலடித் தாக்குதல். சிங்கள அரசு காலங்காலமாக தமிழர் எழுச்சி நிகழ்வுகளை ஆயுதமுனையில் அடக்கிய…
லசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம் கசிந்தது
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்னதாக, அவரது கைத்தொலை பேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என்பது, அரச புலனாய்வுச் சேவை இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவை தலைவராக இருந்த, கீர்த்தி கஜநாயக்கவின் கையொப்பத்துடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கொழும்பு ரெலிகிராப் வெளியிட்டுள்ளது.இந்த ஆவணத்தில், லசந்த விக்கிரமதுங்கவின் கைத்தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட சில கைத்தொலைபேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு, பாதுகாப்புச் செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கீர்த்தி கஜநாயக்க, தமது…
மாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா?
கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நள்ளிரவு , கொக்குவில், குளப்பிட்டி பகுதியில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. தொடர்ந்து, நேற்று முன்தினம் திங்கட்கிழமை (31), பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் முடக்கும் நடவடிக்கையில், மாணவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும் பல்கலைக்கழக…
விசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில் மைத்திரி
மாணவர்கள் படுகொலை தொடர்பிலான விசாரணை பக்கசார்பற்ற முறையில் நடத்தப்படும் என மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியுள்ளார்.மாணவர்கள் கொல்லப்பட்டபோது வடபகுதி மக்கள் அமைதியாக செயற்பட்டதாகவும் அதற்காக தான் நன்றி தெரிவித்துக் கொள்வ தாகவும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் வைத்து ஆற்றிய உரையில் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கிலுள்ள இடம்பெயர் முகாம் மக்களுக்காக கீரிமலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது.இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, யாழ் பல்கலைக்கழக மாணவர்களது படுகொலை குறித்து தனது…