இலங்கை
மாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்
சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.. மேற்படி சம்பவத்தைக் கண்டித்தும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த போராட்டம் இன்று…
மாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள்
சிங்கள காவல்துறையினரால் யாழ். பல்கலைக்கழக மாண வர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சூடுபிடித்ததுடன், தான் தயாராக வரவில்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க, பதில் கேள்வியைக் கேட்டபோது, தனது ஆசனத்திலிருந்து எழுந்து நடந்து, நழுவிச்சென்றுவிட்டார்.வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 11.45க்கு ஆரம்பமானது. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு அமைச்சர்களான கயந்த கருணாதிலக, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோர்…
மோசடி! அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு
மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருகனும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட ஏனைய பணிப்பாளர்களைக் கைதுசெய்யுமாறு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பரிந்துரை செய்துள்ளது. இந்த நிறுவனம், முறைகேடான முறையில் இலாபமீட்டியுள்ளதாகவும் அதன் மூலமாக நிறுவனத்தில் பணிப்பாளர்கள், குற்றமிழைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களைக் கைதுசெய்து, குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், கோப் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கோப் குழுவின் தலைவரும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான…
விரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ
மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களை கூட்டணியாக்கும் நடவடிக்கை நாடு முழுவதும் வெற்றிகரமாக முன்னெ டுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக புதிய அரசியல் சக்தி அல்லது புதிய கட்சி அல்லது புதிய கூட்டணி என்பவற்றில் ஒன்றாக மிக விரைவில் கூட்டு எதிர்க் கட்சி வெளிவரும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜக்ஷ தெரிவித்தார்.அரச தலைவர்களுக்கு இன்று நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனமில்லை. வெளிநாட்டுக்கு செல்லும் ஒரு தலைவர் அங்கு சொக்லட் சாப்பிட்டு விட்டு தனது மனைவிக்கும் ஒன்றை சேப்பில் போட்டுக்…
மட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது
மட்டக்களைப்பில் பல்வேறு இடங்களில் விபச்சாரவிடுதிகள் இயங்குகின்றன, இவை சிகை அலங்காரன், முக அலங்காரம் என்று பல்வேறு பெயர்களில் இயங்குகின்றன. இந்த விபச்சார நிலையங்களில் பள்ளி மாணவிகளும் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.இது தொடர்பாக காவல்துறையினர் தேடுதல்களை நடத்துவந்துள்ளனர்.இன்று காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் சிவகீதா கைது செய்யப்பட்டுள்ளார்.பிள்ளையான் முதலைமைச்சராக இருந்த காலகட்டத்தில் மட்டக்களைப்பில் மேயராக இருந்தவர் சிவகீதா இவருடன் இவரது கணவர் உட்பட ஏழு பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
மாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும் போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்க ளிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,உயிரிழந்த சுலக்சன் சகோதரர் மரணமானது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதுஉத்தரவினை மீறி வண்டியை நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.இவ்வாறு…