இலங்கை

தெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளருக்கு பிணை வழங்க மறுப்பு

ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளர் அப்துர் ராஸிக்குக்கு பிணை வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் அவரது விளக்கமறியலை எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மேலதிக நீதிவான் சந்தன கலங்சூரிய உத்தரவிட்டுள்ளார். பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையின் கருத்துக்களை வெளியிட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக கொழும்பு பிரதான் நீதிவான் மன்றிலும் வழக்கு ஒன்று பதிவு செய்யட்டுள்ள நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கில் அவரைப் பிணையில் விடுத்த போது எந்தவொரு…

கருணா எனப்படும் முரளிதரன் கைது

சிங்கள அரசுடன் சேர்ந்து ஒஒட்டுக்குழுவாக இஇயங்கிவந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்றையதினம் ஆஜராகியநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியின்போது பிரதி அமைச்சராக பதவி வகித்தகாலத்தில் அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பிலும் ஆட்சி மாறிய நிலையில் அவர் பயன்படுத்திய வாகனங்களை மீளவும் அரசிடம் ஒப்படைக்க தவறியமை குறித்து வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்றையதினம் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசார ணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டநிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அமெரிக்க ராணுவம் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி

அமெரிக்க இராணுவத்தின் கண்ணிவெடி எதிர்ப்பு பயிற்சி அணியினர்,இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவுக்கு பயிற்சிகளை அளித்துவருகின்றனர்.பூஓயாவில் உள்ள பொறியியல் படைப்பிரிவுத் தளத்தில், இலங்கை படையினருக்கு முன்னாயத்தமற்ற வெடிபொருட்களை கண்டுபிடித்து, அழிக்கும் பயிற்சிகளை அமெரிக்க இராணுவ நிபுணர்கள் அளித்துள்ளனர்.முன்னாயத்தமற்ற வெடிபொருட்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சிநெறியாக இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.கடந்த 14ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வார காலப் பயிற்சி, கடந்த 20ஆம் நாள் நிறைவடைந்தது.இதில் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த, 4 அதிகாரிகள் மற்றும் 65 படையினர் பங்கேற்றிருந்தனர்.இவர்களுக்கு அமெரிக்காவின் ஆசிய பசுபிக் முன்னாயத்தமற்ற வெடிபொருள்…

ராணுவ புரட்சி ஏற்படும் - மஹிந்த அணி மிரட்டல்

மைத்ரிபால சிறிசேன நேற்றையதினம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருந்த போது உரையாற்றிக்கொண்டிருந்த மஹிந்த தரப்பு உறுப்பினர் இராணுவ சதிப் புரட்சியொன்று ஏற்படுவதற்கான சாத்தி யக்கூறுகள் ஏற்படுமென எச்சரித்துள்ளார். அவருடைய இந்தக் கருத்தைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பிய துடன், எதிர்த்தரப்பிலிருந்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதிலுக்குக் குரல் எழுப்பியதால் சிறிது நேரம் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. மஹிந்த விசுவாசியான தினேஷ் குணவர்த்தன உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் குரல் எழுப்பி…

மாலைதீவுகு விபச்சாரத்திற்காக பெண்களை அனுப்பியவர்கள் கைது

மாலைதீவில் உள்ள பிரபல செல்வந்தர்களுக்கு விபசாரத்திற்காக இலங்கையில் இருந்துபெண்களை அனுப்பி வந்த கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை விபசாரத்திற்காக மாலைதீவிற்கு இவர்கள் அனுப்பிவைத்துள்ளனர்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய பத்தரமுல்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்ததுள்ளது.இரு சந்தேகநபர்களும் நூற்றுக்கும் அதிகமான பெண்களை விபசாரத்திற்காக மாலைத்தீவிற்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சுற்றுலா வீசாவில் பெண்களை மாலைத்தீவிற்கு அனுப்பிவந்துள்ளமை விசாரணைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும்…

போராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள அமைச்சர்

போரில் இறந்தவர்களையும் நினைவு கூர்வதற்கும் ஊனமுற்ற புலிப்போராளிகளுக்கு உதவவும் அரசாங்கம் முன்வரவேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.ஜே.வி.பி கலவரத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி இறந்தவர்களை நினைவுகூர இடமளித்துள்ள தை சுட்டிக்காட்டி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அங்கவீனமுற்ற படையினருக்கு வாழ்வதற்கு அரசாங்கம் உதவிவருகிறது. இதேபோன்று யுத்தத்தினால் அங்கவீனமுற்ற விடுதலைப்புலி இளைஞர்களும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். வரவு- செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள்…

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…