இலங்கை
வடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு
நேற்று முன்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டது. குறித்த சம்பவத்தின் போது ஒரு மோட்டார் கார், 3 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வள்ளம் இரண்டு மற்றும் அதிவலு கொண்ட இயந்திரம் இரண்டும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சந்தேக நபர்களை 7 நாட்களிற்கு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் விசாரணை…
பிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு
பிள்ளையான் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி, இவர் குறித்த மனுவை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு…
மைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன்
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர் எனினும் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் ஊழல்வாதிகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊழல் பற்றி நீங்கள் பேசி வருகின்றீர்கள். அவ்வாறு பேசிப் பேசியே நீங்கள் மக்களை முட்டாளாக்குகின்றீர்களா? ஊழல் பற்றி பேசுகின்றீர்கள் அப்படி இடம்பெற்றிருந்தால் ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட நபர் யார்? அவ்வாறு ஒரு நபர் இருக்கிறாரா? என்றும், சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற…
ட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் அரசாங்கத்துடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் 45 ஆம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள டொனல்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.இதற்கான வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.டுவிட்டர் ஊடாக ஜனாதிபதி இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
மைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு
அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள, மைக் பென்ஸ் நேற்றிரவு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருப்பதுடன், அமெரி க்காவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.இதன்போது, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதி பதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து வரவேற்புத் தெரிவித்த மைக் பென்ஸ், இலங்கைக்கு எந்த உதவிகளையும் அமெரிக்கா வழங்கத் தயாராக இருக்கும் என்ற உறுதி மொழி யையும் கொடுத்தார்.இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்த…
கருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு
அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தாக்கல் செய்துள்ள பிணை மனு எதிர்வரும் ஐந்தாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது கருணா அம்மான் சார்பில் அவரது சட்டத்தரணி நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனு தாக்கல்செய்யப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதுமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் மீள்குடியேற்ற பிரதி அமை ச்சராக இருந்த கருணா அம்மான் அரச வசாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதால் அரசாங்க த்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுசெய்யப்பட்டதற்கு…