இலங்கை
இலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில் மாற்றம் இல்லை
கனடா நாட்டுக்கு செல்லும் இலங்கையர்கள் குறித்த நாட்டில் 90 நாட்கள் வரையில் விசா இன்றி சுற்றுலா அடிப்படையில் பிரவேசிக்க முடியும் என வெளியாகியிருந்த தகவல்களை நிராகரித்து கொழும்புக்கான கனேடிய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்காகவோ அல்லது சுற்றுலா பயணிகளாகவோ கனடாவுக்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்ந்தும் விசா அனுமதியைப் பெற வேண்டியது அவசியம். சட்டரீதியான விசா அனுமதியை பெற்ற நபர்களுக்கே கனடா நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.மேலும் இலங்கையிலிருந்து கனடாவுக்கு செல்லும் இலங்கையர்கள் குறித்த நாட்டில் 90 நாட்கள் வரையில்…
ஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12 நாடுகள் ஆதரவு
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவுக்கு இதுவரை 12 நாடுகள் தமது இணை அனுசரணையை வழங்கியிருக்கின்றன. அந்தவகையில் இன்னும் சில தினங்களில் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ள நிலை யில் அதிகமான நாடுகள் இந்த வரைவுக்கு இணை அனுசரணை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஒருசில உறுப்பு நாடுகளும் உறுப்புரிமையற்ற சில நாடுகளும் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருக்கின்றன. அந்தவகையில் அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, இஸ்ரேல், ஜப்பான், மொன்ட்னேகுரோ, நோர்வே, மெஸடோனியா, பிரிட்டன்,…
உள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்
உள்ளகப் பொறிமுறை இலங்கையில் தோல்வியடைந்து விட்டது. பன்னாட்டுப் பிரசன்னத் தையேமக்களும் கோருகின்றனர். உலகின் எந்த நிலைமாற்றுக்கால பொறிமுறையும் வெற்றியடைவதற்கு பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவு அவசியம். அவர்கள் அதனைப் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யஸ்மின் சூகா தெரிவித்தார். பன்னாட்டு ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீமூனால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவில் சூகாவும் ஒருவராவார். பன்னாட்டு மனித உரிமைகள்…
ஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் உரையுடன் ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுடள்ளது. அத்துடன் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய…
சினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல் பலர் பலி
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் சமயான் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று திங்கள்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான பாதள உலக குழு தலைவர் என கூறப்படும் அருண உதயசாந்த என்ற விளக்கமறியல் கைதியை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.வாகனமொன்றில் வந்த…
கேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையாக்கப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 27 நாட்களாக வீதியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் 27ஆவது நாளான இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கேப்பாபுலவு மக்களின் போராட்டக்களத்துக்கு வருகைதந்து தமது ஆதரவினை வெளியிட்டிருந்ததோடு மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவி பொருட்களையும் வழங்கி வைத்தனர்.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் மற்றும் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ உள்ளிட்ட அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பிரதேங்களை…