இலங்கை
இளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை: சிராந்தி
எனது ஆண் பிள்ளைகளுக்கு நிறைய பெண்தோழிகள் இருப்பதை நினைத்து பெருமைப்படுகின்றேன். இளவயதில் அப்படி இருப்பது அவசியம் என கூறியுள்ளார் சிங்களத்தின் முன்னாள் முதற்பெண்மணி,அண்மையில் சமகால அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாத யாத்திரையின்போது நாம லுடன், நடிகைகள் தொடர்ந்து பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஷிரந்தி, குறி த்த நடிகைகளை தொலைபேசி ஊடாக எச்சரித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.இந்த விடயம் குறித்து ஊடகம் எழுப்பிய கேள்விக்கு ஷிரந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.நான் என்றும் யாரையும் திட்டியதில்லை. வேண்டுமானால் எனது பிள்ளைகளை கேட்டுப் பாருங்கள். இந்த வயதில் பெண்…
ஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது! மங்கள
இலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் மோசமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மிக வும் மோசமானது என பொது அமைப்புக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தெரிவிக்கும் குற்ற ச்சாட்டுக்கள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமையவே புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார். பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை மேற்பார்வை செய்யும் பணியில் தாம் ஈடு பட்டுள்ளதால், இதனை உறுதியாகக் கூற முடியும் என்றும்…
மஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை
கடந்தவாரம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய சீனத் தூதுவர், யி ஷியாங்லியாங், முன்னைய ஆட்சிக்காலத்தில் அதிக வட்டிக்கு சீனா கடன் வழங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார்.2 வீத வட்டிக்கே கடன் வழங்கப்பட்டதாகவும்,நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதுதொடர்பான தவறான தகவல்களை தெரி வித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.அதிக வட்டிக்கு கடன் வழங்கப்பட்டது என்றால், எதற்காக மீண்டும் சீனாவிடம் நிதி உதவி கேட்கிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.அவரது இந்தக் கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சீனத் தூதுவரின் கருத்துக்களுக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க…
பீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்
மஹிந்தவின் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ்ஸின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவுடன், அவரது அணியால் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவா க்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் பொதுக் குழுக் கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு அதன் ஊடாக கட்சிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவர் என பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.அதேவேளை புதிய அரசியல் கட்சியை உருவாக்கினால், வீதியில் இறக்குவோம் என தமக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியி லுள்ளவர்கள், புதிய கட்சி தொடர்பான தகவல் அறிவிக்கப்பட்ட நாளே அவர்கள் வீதியில் இருந்ததை காணக் கிடைத்ததாகவும் காலி அம்பலங்கொடை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற…
தமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா?
இலங்கை மற்றும் இந்திய அரசுகள் தமிழர் தேசிய விடுதலைப்போராட்டத்தின் அடையாளமான தேசியம் தன்னாட்சி என்றவறை அழிப்பதுடன் அதற்கு மாற்றீட்டு அரசியல்கலாச்சாரத்தை உருவாக்க முயற்சி செய்கின்றன. இலங்கை அரசு தமிழர்களின் அரசியல் போராட்டத்தை அடியோடு அழிக்க திட்டம் தீட்டி செயற்படுகின்றது. இந்திய அரசும் அதற்கு துணைபோகின்றது இதுதான் இந்தியாவின் ஈழ மக்கள் தொடர்பான வெளியுறவுக்கொள்கையாகும். இவ்வறு அரசியல் ஆய்வாளர் எழுத்தாளர் கலையழகன் அவர்கள் கூறியுளார். உயிரோடை வானொலியில் ஒலிபரப்பாகும் மெய்ப்பொருள் நிகழ்ச்சிவழியாக தனது ஆய்வினைப் பகிர்ந்துகொண்ட அவர் மேலும் கூறுகையில்;ஈழத்தில் சிவசேனா கட்சி தொடங்கபப்ட்டமை இலங்கை…