இலங்கை
படையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.
முன்னாள் சிங்கள இராணுவ தளபதிகள் ஐந்து பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையில் மஹிந்த மைத்திரி ஆகியோரின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இந்த சூழலில் இதுவரை நடைபெற்ற விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் வழங்கப்படவுள்ளது.இந்த தளபதிகள் மீது பெருமளவான போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருந்தபோதும் அவற்றை புறந்தள்ளிவிட்டு நிதிக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே விசாரணைப் பிரிவு மற்றும் இரகசியப் பொலிஸ் திணை க்களம் என்பன விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.முன்னாள் கடற்படைத் தளபதிகளான திசர சமரசிங்க, வசந்த கரன்னாகொட, ஜயநாத் கொலம்பகே, ஜயந்த பெரேரா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க…
மஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி
ஜனாதிபதியின் கருத்தை காரணம் காட்டி பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு திசை திருப்பப்படுவதாக சந்தியா எக்னலிகொட குற்றம் சுமத்தினார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.81 மாதகாலமாக தீர்வுக்காக போராடுகின்றோம் ஆனால் அண்மையில் ஜனாதிபதி இராணுவ தளபதிகள் பற்றி கூறிய கருத்தை அடிப்படையாக கொண்டு எக்னலிகொட வழக்கு திசை திருப்பப்படுகின்றது.மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொருவராலும் இழைக்கப்படும் குற்றம் நாட்டுக்கே இழைக்கப்படும் குற்றமாகும் இவ்வாறானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதே நியதி.ஆனால் எக்னலிகொடவின் விடயத்தில் அரசாங்கம் பக்கசார்பாக நடந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றிக் கொண்டு வருகின்றது…
எனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா?
மஹிந்த மற்றும் அவர்கள் சார்பானவர்களின் மோசடிகள் பற்றி விசாரிக்க முன்பாகவே மஹிந்தவுக்கு அந்த செய்திகள் காதில் எட்டிவிடுகின்றது.ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும் உள்ளனர் அமைச்சர் ராஜித சேனாரட்னா கூறியுள்ளார். அமைச்ரவை தீர்மானங்களை தெரிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி இரகசியமாக எடுக்கும் நடவடிக்கைகள், ஒரு சிலரது தனிப்பட்ட விபரங்கள் தொடர்பில்…
அரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை
தமிழர் பிரச்சினையை இந்த நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஆட்சியைக் கைப்பற்றவே கயில் எடுத்தனரே தவிர தீர்வொன்றைப் பெறுவதற்காக பயன்படுத்தவில்லை என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆட்சிசெய்த தலைவர்கள் இனப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்றை வழங்காததினால் தான் 30 வருடகால யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.கண்டி – விகாரமஹாதேவி கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நேற்று அந்த கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடை பெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இனங்களுக்கு இடையே…
மைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்
மைத்திரிபால சிறிசேனாவின் கோத்தபாயமற்றும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு சார்பான அதீத நடவடிக்கைகள் பலருக்கும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.இதன் ஒரு அங்கமாகஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஊழல் விசாரணை ஆணைக்குழு மீது மைத்ரிபால விமர்சனம்அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட மூன்று கடற்படை தளபதிகளுக்கு எதிராக வழக்கு…
சீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்
இலங்கை –சீன உறவுகள் சாதகமான நிலையில் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைந்து வருவதாகவும், தலைமுறைகளைக் கடந்து நிற்கும் இலங்கையுடனான பாரம்பரிய நட்புறவை முன்ன கர்த்துவதற்கு சீனா பணியாற்றும் என்று சீன பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.இருநாடுகளும் உயர்மட்ட தொடர்புகள் மற்றும் அரசியல் தொடர்பாடல்களை பேணி வருவதாகவும், பரஸ்பரம் கரிசனைக்குரிய விவகாரங்களில் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருவதாகவும் சீன அதிபர் கூறினார்.அணை மற்றும் சாலை கட்டுமானத் திட்டத்துக்கு இலங்கை ஆதரவளிப்பதற்கு சீனாவின் சார்பில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.வர்த்தகம், துறைமுக இயக்கம், உட்கட்டமைப்பு கட்டுமானங்கள். துறைமுகங்களை அண்டிய கைத்தொழில்…