×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 984

சுவிற்சர்லாந்தில் குழுமோதல் தமிழர் பலி

சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம்.

சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் இருவரது விசாரணையினை நியாயமாக நடத்தக்கோரி பல்கலைக்கழக மாணவர்களால் வடமா காண ஆளுநருக்கூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மஜரினை தான் ஜனாதிபதிக்கு அனுப்பியதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அதன் பிரதியை ஆளுநர் றெஜினோல்ட் கூரே பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றிய தலைவருக்கு சிங்களத்தில் முன்னர் அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால் இந்த சிங்கள மொழியிலான அறிக்கையினை மாணவர் ஒன்றியம் நிராகரித்த நிலையில் இன்றையதினம் தமிழில் அந்த அறிக்கையினை அனுப்பி வைத்துள்ளதாக கலைப்பீட மாணவ ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு

ஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறக்கப்படவுள்ளது. உதவியினால் கட்டி எழுப்பப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைப் பாட சாலை மாணவ மாணவர்களின் சேமிப்பு மற்றும் அர்ப்பணிப்பும் நன்கொடையாக வழங்க ப்பட்ட நிதியும் அவர்களினால் மேற்கொள்ளப்படும் தேசிய நற் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் ஆசிரியர்களினால் வழங்கப்பட்ட நன்கொடையினையும் சேர்த்து கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் அன்பின் தரிப்பிடம் என கட்டி எழுப்பப்பட்ட ஆனையி றவு புகையிரதநிலையம் நாளையதினம் திறந்து வைக்கப்பட்வுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வி .எஸ் .இராதாகிருஸணன் மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பங்கேற்புடன் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் அவர்களினால் நாளை காலை பத்துமணிக்கு புகையிரதநிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.

போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள்

தமிழ் நாடு:  முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக கருத்து தெரிவித்தால், பேசினால், பதிவிட்டால் கைது என்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு விரோதமானதாகும். இதற்கு எதிராக தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மாநிலம் முழுவதும் கொந்தளித்துப் போராட்டம் நடத்த வேண்டும்.

இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு, கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கைது என்று தமிழக போலீஸார் களம் குதித்துள்ளனர். அதிமுகவினர் கொடுக்கும் புகார்களை வாங்கிக் கொண்டு சரமாரியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் மிகக் கொடுமையானது கோவையில் 2 வங்கி ஊழியர்கள் கைது தான். ஜெயலலிதா குறித்து பேசிய ஒரே குற்றத்திற்காக அதிமுக பெண்மணி ஒருவர் புகார் கொடுத்தார் என்று கூறி இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவும் பாய்ந்துள்ளது. அதாவது அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கக் கூடிய அளவுக்கு கடுமையான சட்டப் பிரிவை போலீஸார் பிரயோகித்து வருகின்றனர். இதற்கு தமிழக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தக் கைதுகளைக் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவும் இதைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விரிவான பதிவை தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்னொரு பதிவையும் அவர் போட்டுள்ளார். அதில், உடனடியாக தமிழகம் முழுவதும் இந்த சட்டவிரோத கைதுகளைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும்.

குறிப்பாக இளைஞர்கள் போராட வேண்டும். மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு. கோழைகள். அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை சிவில் உரிமையைக் கூட காக்கத் தெரியாத கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும். இந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடக் கூட முடியாத கோழைகள் என்றுதான் நான் சொல்ல வேண்டி வரும் என்று கூறியுள்ளார் கட்ஜு.

ஈராக்-மெசுல் நகரைக் கைப்பற்ற படை நடவடிக்கை

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரிடம் இருந்து மெசூல் நகரை மீண்டும் கைபற்றுவதற்காக, தாக்குதல் ஒன்றை இராக் படைப்பிரிவுகள் தொடங்கியுள்ளன.

இந்த தாக்குதலை அறிவித்தபோது, வெற்றிக்கான நேரம் வந்துவிட்டது என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறியிருக்கிறார்.
அது முதல் பீரங்கி குண்டு தாக்குதல் ஒலி கேட்ட வண்ணம் இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு குழுவினர் மெசூல் நகரை கைப்பற்றினர். இப்போது இந்த குழுவினரின் கடைசி வலுவிடமாக இது விளங்குகிறது.

இராக் மற்றும் அமெரிக்காவால் விமானத் தாக்குதல் நடத்தப்படும் இந்த நகரை சுற்றி, 3 லட்சம் படைப்பிரிவுகளும், ஆயுதக்குழுவினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மெசூல் நகரில் 4 முதல் 8 ஆயிரம் வரை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அங்கு வாழும் 15 லட்சம் பேரின் பாதுகாப்பு பற்றி ஐக்கிய நாடுகள் அவை கவலை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை தோல்வியடைய செய்கின்ற இந்த முக்கியமான நேரத்தில் இராக்கிற்கு உதவ சர்வதேச கூட்டணி படை தயாராக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் தெரிவித்திருக்கிறார்.

ஹைட்ரோஃபுளூரோகார்பன்களை ஒழிக்க ஒப்பந்தம்

சுமார் இருநூறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், உலக வெப்பமயமாதலுக்கு அதிக பங்களிப்பைச் செய்யும் ஹைட்ரோஃபுளூரோகார்பன்களை அகற்றுவதற்கான ஓர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளனர்.
உலக வெப்பமயமாதல் குறித்து ரூவாண்டாவில் நடைபெற்ற மாநாட்டின் ஒரு பகுதிImage copyrightGETTY IMAGES

உலக வெப்பமயமாதல் குறித்து ரூவாண்டாவில் நடைபெற்ற மாநாட்டின் ஒரு பகுதி
ருவண்டா தலைநகர் கிகாலியில் கூடியிருந்த பிரதிநிதிகள் இரவு முழுவதும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், ஹைட்ரோஃபுளூரோகார்பன் பயன்பாட்டைப் படிப்படியாக நிறுத்துவது என்ற ஒப்பந்தத்தை ஆரவாரங்களுடன் அறிவித்தனர்.
ஹைட்ரோஃபுளூரோகார்பன் என்பவை தான், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் ஆகிய சாதனங்கள் செயல்படத் தேவையான ஒரு முக்கியமான அம்சமாகும்.
கரியமிலவாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை( carbon dioxide)பசுமை வாயுக்கள் என்று அறியப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களை(greenhouse gases) போன்று
ஹைட்ரோஃபுளூரோகார்பன்கள் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், பணக்கார நாடுகளில் ஹைட்ரோஃபுளூரோகார்பன் பயன்பாடு, மூன்று ஆண்டுகளில், நிறுத்தப்படும்.
குறைவான வளர்ச்சியை உடைய நாடுகளில், இந்த முயற்சி பல ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கும்.

மீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா

மஹிந்தவிடம் இருந்து நாட்டைமிட்ட சந்திரிக்கா சிலகாலம் ஒதுங்கி இருந்தார் ஆனால் இப்போ மீண்டும் மஹிந்தவின் அடாவடிகள் அதிகரித்துள்ள நிலையில்  சந்திரிக்கா களம் இறங்கவுள்ளார்.முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி காரசாரமான முறையில் கருத்து வெளியிட்டதால், நல்லாட்சியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

மைத்திரி- ரணில் ஆட்சியில் ஏற்கனவே சுதந்திரக் கட்சி -ஐ.தே.க வின் சில உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், கோட்டா குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தானது இருதரப்பு முரண்பாட்டின் உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, நிதிக்குற்ற விசாரணை பிரிவு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை குழுக்கள் அரசியல் நோக்கம் கருதி செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதன் வெளிப்பாடாக, தற்போது அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் கீழுள்ள பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், விடுமுறையின் நிமித்தம் தற்போது லண்டனில் தங்கியுள்ள சந்திரிகா தேசிய அரசிற்குள் எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோத்தா கைதினை தடுக்க முயற்சி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக, அவரது விசுவாசியான இராணு வப் புலனாய்வுப் பிரிவின் தற்போதைய தலைமை அதிகாரி, ஜனாதிபதி ஊடாக சதித்திட்டங்களை அரங்கேற்றி இருப்பதாக மாதுலு வாவே சோபித்த தேரர் உருவாக்கிய நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இராணுப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியான பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலி, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கால த்திலும் எட்டு வருடங்களாக இந்தப் பதவியை வகித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ள நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்க த்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய, குறித்த இராணுவ அதிகாரி இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்படுவதற்கு உள்ள நிலையிலேயே ஜனாதிபதிக்கு பிழையான தகவல்களைக் கொண்டு விசாரணைகளை முடக்க முயற்சி ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தாஜூடீன் படுகொலை, பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் மற்றும் ரவிராஜ் படு கொலை உட்பட கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் உட்பட பாரதூரமான குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் இரகசியப் பொலிசார், குழிதோண்டி புதைக்கப்பட்ட ஆவணங்களைத் தோண்டி எடுத்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ள விதம், ஒட்டுமொத்த நாடும் பாராட்டத் தக்கது என்றும் நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த விசாரணைகள் 95 வீதமானவை பூர்த்தியடைந்துவிட்டதாகவும், இன்னமும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டியது மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் கூறிய பேராசிரியர் சரத் விஜேசூரிய, இதற்கமைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு இந்த குற்றங்களில் நேரடி தொடர்பிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார்.

இந்த விசாரணைகளை தடுக்க ஆரம்பம் முதல் முயன்றுவந்த இராணுவப் புலானாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி, இராணுவம் உட்பட முப்படையினரும் ஜனாதிபதி தொடர்பில் கடும் ஆத்திரத்துடன் இருப்பதாக பொய்யான தகவல்களை ஜனாதிபதிக்கு கூறி அவரை தனது ஆளுகைக்குள் எடுத்து அவரைக் கொண்டு இரகசிய பொலிசாரின் விசாரணைகளை கடுமையாக விமர்சித்து அதன் ஊடாக விசாரணையை முடக்க எத்தனித்துள்ளதாகவும் நியாயமான சமூகத்திற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்தார்.

அத்துடன் இந்த இராணுவப் புலனாய்வு அதிகாரியின் பிழையான தகவல்கள் காரணமாகவே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்ந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையின் போது ஊழல், மோசடிகள் மற்றும் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரகசிய பொலிசார், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிர்களுக்கு அமைய செயற்படுவதாக குற்றம்சாட்டியிருந்ததாகவும் பேராசிரியர் விஜேசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்

கொழும்பை அண்மித்த புறநகர் பிரதேசமான வெலிவேரிய ரத்துபஸ்வெல பகுதியில் தமக்கான குடிநீரைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு அடக்கிய சம்பவம் பாரதூரமான குற்றச்செயலென கம்பஹா நீதவான் தீர்ப்பளி த்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தமக்கான குடிநீரைக் கேட்டு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கியதுடன், அதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியதால் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.

சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இளைஞர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், மூன்றாவது இளைஞரின் தலையில் கூரிய ஆயுதமொன்று தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகவும் கம்பஹா நீதவான் காவிந்தியா நாணயக்கார தனது தீர்ப்பில்
குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ரி 56 ரக 98 இயந்திரத் துப்பாக்கிகள் நீதிமன்றம் கையகப்படுத்தியிருந்த நிலையில் அவை இரசாயன பகுப்பாய்வாளரின் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு அமைய அதில் மூன்று துப்பாக்கிகள் ரத்துபஸ்வெல இளைஞர்களின்
படுகொலையுடன் தொடர்புடையமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்

பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்

சென்னையில் வியாழக்கிழமையன்று தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விபத்துகள் நடக்கும்போது ஓட்டுனரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறை சரியாகப் பின்பற்றப்படாத காரணத்தால்தான் இம்மாதிரி விபத்துகள் தொடர்ந்து நடப்பதாக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை குடிநீர் வடிகால் வாரியம், காவல்துறை, போக்குவரத்துத் துறையின் அலட்சியமே இதற்குக் காரணம் என செய்திகளிலிருந்து அறிய வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆகவே இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டுமென கோருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

தண்ணீர் லாரிகளுக்கான விதிகள், ஒரு நாளைக்கு எத்தனை முறை அவை தண்ணீர் ஏற்றிச் செல்லலாம், தண்ணீர் லாரி தொடர்பான விபத்துகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்தவர்கள் குறித்த விவரம், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இம்மாதிரியான விபத்துகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.

மாநில போக்குவரத்துத் துறை, காவல்துறை, பிற நிர்வாக அதிகாரிகள் விதிமுறைகளைச் சரியாக பின்பற்றாத காரணத்தினாலேயே சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் பெரும் அபாயத்தை எதிர்கொள்வதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • support@eelanatham.net
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…