அமெரிக்காவிற்கும், உலகிற்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல் என்று அதிபர் ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமா
ஆதரவு ஊசலாடும் மாநிலம் என்று கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான, வட கரோலினாவில் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, அடுத்த அமெரிக்க அதிபராக ஹிலரி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், கடந்த எட்டு ஆண்டுகளில் தான் அதிபராக இருந்த போது அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பின் தள்ளப்படும் என்றார்.
சிறுபான்மை குழுக்களின் சிவில் உரிமைகளை ட்ரம்ப் பலவீனமாக்குவார் என்றும், அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதி பொறுப்பை வகிக்க ட்ரம்ப் தகுதியற்றவர் என்றும் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
ஃபுளோரிடாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தன் ஆதரவாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அடுத்த வாரம் நடைபெறக்கூடிய அதிபர் தேர்தலில் ஹிலரி வெற்றி பெற்றுவிட்டால் அரசியலமைப்பு நெருக்கடிக்கு அமெரிக்கா தள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
குற்றவியல் விசாரணைகளால் பாதிக்கப்படும் அதிபராக ஹிலரி இருப்பார் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.