Super User

Super User

வடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும் குவிக்கப்படவேண்டும்- மஹிந்த‌

வட மாகாணத்தில் இராணுவ புலனாய்வு செயற்பாடுகளை அதிகரிக்க‌ வேண்டும் என போர்க்குற்றவாளி மஹிந்த‌ ராஜபக்ஷ தெரிவி த்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதி பதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த மஹிந்த‌, ‘வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமானது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறு த்தலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாம் ஏற்கனவே பலமுறை சுட்டி க்காட்டி உள்ளோம். ஆனால் நமது கருத்துக்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற யாழ். சம்பவம் இதனை உறுதிபடுத்தியுள்ளது. எனவே நாட்டின் தேசிய பாதுகாப்பை கரு த்திற்கொண்டு வடக்கில் புலனாய்வு செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அத்துடன் வடக்கில் பொலிஸ் நிலையங்களை அதிகரிப்பதுடன், இராணுவ முகாம்களை தொடர்ந்து பேண வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.

கிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு

முற்றாக சிதைந்த நிலையில் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உருக்குலைந்த நிலையில் கிளிநொச்சி – உருத்திரபுரம் வடக்கு நீவில் பிரதேச காட்டுப்பகுதியில், சடலமொன்று இன்று (வியாழக்கிழமை) மீட்கப்ப ட்டுள்ளது.

சடலத்தை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் பார்வையிட்டுள்ளதோடு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வை க்கப்படவுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம்

மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறி பத்திர முறைகேடு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.12 மணியளவில் சிங்கப்பூர் செல்லும் ஈ.கே.348 விமா னத்தில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கோப் குழு தலைவரும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கைக்கு மாற்றீடாக மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய கட்சி முன்னர் திட்டமிட்டிருந்தது.

எனினும் பிணை முறிப் பத்திர மோசடியில் இருந்து அர்ஜுன மகேந்திரனை பாதுகாக்கும் வகையிலேயே ஐக்கிய தேசிய கட்சி, வேறு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க முயல்வதாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் ஏகமனதான கோப் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கோப் குழுவிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பின்னர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. அர்ஜுன மகேந்திரன் சிங்கபூர் பிரஜை என்பதும் குறிப்பிடத்தக்கது

மாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்

சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்..

மேற்படி சம்பவத்தைக் கண்டித்தும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த போராட்டம் இன்று பொது மக்களாலும், சிவில் அமைப்பினராலும் தோட்டத்தின் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து, உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எமது உணர்வுபூர்வமான அஞ்சலிகள், அப்பாவி மக்களை துன்புறுத்தும் பொலிஸாரின் அடாவடி தனத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும், அஞ்சலிக்காக மெழுகுவர்த்தியை வைத்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை!

ராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவை தேடி கண்டு பிடிக்க விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனராம்.

சுன்னாகத்தில் காவல்துறை புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ஆவா குழு, துண்டுப் பிரசுரம் மூலம் உரிமை கோரியுள்ளதையடுத்து, வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா நகரப் பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளும், காவல்துறைக் குழுக்களும் நிறுத்த ப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் சம்பவத்தை அடுத்து, வடக்கின் பிரதான நகரங்களில் சிறப்பு அதிரடிப்படை அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆவா குழுவைக் கண்டறிவதில் மாத்திரமன்றி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியிலும் சிறப்பு அதிரடிப்படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஆவா குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சன்னா, தேவா, பிரகாஸ் ஆகிய அடையாளம் காணப்பட்ட ஏனைய உறுப்பினர்களைத் தேடி சிறப்பு அதிரடிப்படையினர் வேட்டையில் இறங்கி யுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது

ராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது

விடுதலைப் புலிகள் இருந்த போது, யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான குற்றச்செயல்களும் இருக்கவில்லை அதனை செய்யும் குழுக்களும் இருக்கவில்லை என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அனால் தற்போது ஆபத்தான பல குழுக்கள் இயங்குகின்றன அவற்றில் ஒனறுதான் .குடாநாட்டில் ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு ஆகும். இந்த குழுவை முன்னைய ஆட்சி க்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுதெரிவித்துள்ளது.

மூத்த பொலிஸ்அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட விசார ணைகளிலேயே பொலிஸ் இதனைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக ஊடகங்களிடம் எதையும் கூற வேண்டாம் என்று அரசியல் அதிகாரமட்டத்தில் இருந்து பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குறித்த ஆங்கில ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர், போருக்குப் பின்னர் வடக்கில் பல குழுக்கள் செயற்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்படப் பாணியில் இந்தக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் வாள்கள், கத்திகளுடன், உந்துருளிகளில் திரிந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“2013ஆம் ஆண்டு இத்தகைய குழுவொன்றினால், பொலிஸைச் சேர்ந்த ஒருவரின் கை வெட்டப்பட்டது.

மாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள்

சிங்கள காவல்துறையினரால் யாழ். பல்கலைக்கழக மாண வர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட‌ விவகாரம், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சூடுபிடித்ததுடன், தான் தயாராக வரவில்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க, பதில் கேள்வியைக் கேட்டபோது, தனது ஆசனத்திலிருந்து எழுந்து நடந்து, நழுவிச்சென்றுவிட்டார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 11.45க்கு ஆரம்பமானது. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு அமைச்சர்களான கயந்த கருணாதிலக, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சவை முடிவுகளை அறிவித்ததன் பின்னர், கேள்வி நேரம் ஆரம்பமானது. கேள்விநேரத்தின் போது, யாழ்ப்பாணத்தில், துப்பாக்கிச்சூட்டில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் தொடர்பிலும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைககள் குறித்து, உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவ இடத்துக்கு பொலிஸ் அதிகாரிகள் சென்றிருக்கவேண்டிய நிலையில், கடமையிலிருந்த சாதாரண பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்தும், ஊடகவியலாளர்கள் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தனர்.

அந்தச் சம்பவம் தொடர்பில், தற்போது எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமைகளை தெளிவுபடுத்திய அமைச்சர் சாகல ரத்நாயக்க, ஒரு சந்தர்ப்பத்தில், இந்த விவகாரம் தொடர்பில் தான், பூரண தெளிவின்றியே இவ்விடத்துக்கு வந்துவிட்டதாகவும் கூறிவிட்டார். எனினும், ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்விகளைக் கேட்டுத் துருவியெடுத்துவிட்டனர்.

நிலைமைகளைச் சமாளிப்பதற்காக மூன்று கேள்விகளுக்கு மட்டுமே இடமளிக்கப்படும் என்று, அமைச்சர் சாகல கூறியிருந்த போதிலும், ஊடகவியலாளர்கள் விடுவதாய் இல்லை.

கேள்வி நேரத்துக்கு முன்னதாக, சம்பவத்தை தெளிவுபடுத்திக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க,
யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில், கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக, பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயரிழக்கக் காரணமாக இருந்த சம்பவத்தை அடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டுமல்லாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், யாழ்ப்பாண சிவில் சமூகம், எம்.பி.க்கள் பலர், பொதுமக்கள் எனப் பலரும், நிலைமையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு பெரிதும் ஒத்துழைத்து செயற்பட்டிருந்தனர்.

“அதற்கான சகல தரப்பினருக்கு நன்றியை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அவ்வாறு இல்லாத பட்சத்தில், பெரும் குழப்பமான நிலைமையொன்று ஏற்பட்டிருக்கக்கூடும்” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினர், மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்திவரும் நிலையில், அந்தக் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பொலிஸார், அங்கு உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற அன்றும், இவ்வாறானதொரு உஷார் நிலையிலேயே பொலிஸார் இருந்தனர். அப்போது, வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு, பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். இரண்டு தடவைகள் சமிக்ஞை செய்துள்ளனர். அவ்விருதடவைகளையும் மீறி, மேற்படி மாணவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றதையடுத்தே, பொலிஸாரினால் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து அறியமுடிந்துள்ளது என்று விளக்கமளித்தார்.

குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள், இந்தச் சம்பவம் தொடர்பிலான உங்களது அர்த்தப்படுத்தலுக்கு அமைய, அது எந்த வகையில் இன ஒற்றுமைக்குப் பாதிப்பதாக அமைந்திருக்கக்கூடும் என்று அமைச்சரிடம் வினவினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சாகல, பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் இரு தமிழ் மாணவர்களின் உயிரிழப்பு என்பவற்றை, சம்பவத்தின் பாரதூரமான விடயங்களாக சுட்டிக்காட்டியதுடன், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி, சிலர் தூண்டுதல்களில் ஈடுபடுவதற்குக் காத்திருந்திருக்கலாம் என்றார்.

எவ்வாறிருப்பினும், யாழ். குடாநாட்டில் குற்றங்களில் ஈடுபடும் மோட்டார் சைக்கிள் குழுவினர், இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் சம்பந்தப்பட்டவர்களாகவே இருப்பதாக தமிழ் மக்களால் தெரிவிக்கப்படுகிறதே என்றும் வினவினர்.
இக்கேள்விக்கு எவ்விதமான பதிலையும் அளிக்காமல், ஆசனத்திலிருந்து எழுந்து கதவை நோக்கி நடந்தார் அமைச்சர். எனினும், கேள்வி கேட்ட ஊடகவியலாளர் விடவில்லை.

“நீங்கள் அமைதியாகச் செல்வதை, நான் ஆம் என்ற பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?” என மீண்டும் வினவினார், கேள்வியை எழுப்பிய அந்த ஊடகவியலாளர். அப்போது கதவுக்கு அருகில் சென்றுவிட்ட அமைச்சர் சாகல, “இல்லை, நான் எதுவும் சொல்லவில்லை” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

எனினும், கோப் குழு தொடர்பில், ஊடகவியலாளர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கும் இடையில், அதற்கு பின்னர் கடும் வாக்குவாதங்களும் தெளிவுபடுத்தல்களும் இடம்பெற்றன.

ஒரு கணத்தில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ, மருமகன் தவறிழைத்திருக்கின்றார் என்பதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் தவறிழைத்தார் என்று அர்த்தப்படாது. அதேபோல, முன்னாள் ஜனாதிபதியின் உறவினர் தவறிழைத்தார் என்பதற்கான முன்னாள் ஜனாதிபதி தவறிழைத்துள்ளார் என்று அர்த்தப்படாது என்று சுட்டிக்காட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்

மன்னார் மாவட்டம் முத்தரிப்புத்துறை பிரதேசத்தில் மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களின் படகு மற்றும் இயங்திரங்களை சிங்கள கடற்படை அபகரித்துள்ளது.

போர் காலங்கள் போல சிங்களப்படைகளின் ரோந்து நடவடிக்கைகள் மன்னார் கடற்பரப்பில் காணப்படுகின்றன. போர்க் கப்பல்கள் கரையிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் தரித்து நிற்பதாகவும் இதன் காரணத்தால் மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதற்கு மீனவர்கள் அச்சம் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மீனவக் குடும்பங்களிடையே பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் இருவர் முத்தரிப்புத்துறை பிரதேச வாசிகளால் அண்மையில் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த இருவரில் ஒருவர் பொது மக்களின் பிடியிலிருந்து தப்பிச்சென்று அருகிலுள்ள பாதுகாப்பு முகாமில் தஞ்சமடைந்த சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த பொலிஸ் உயரதிகாரிகள், இனியும் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறாது என்றும், பாஸ் நடைமுறையின்றி கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதற்கான வசதி செய்துகொடுப்பதாகவும் உறுதியளித்திருந்தனர்.

எனினும் சில நாட்களுக்குப் பின்னர் நேற்று இரவு தொழிலுக்குத் திரும்பிய மீனவர்களை வழிமறித்த கடற்படையினர் அவர்களது நான்கு மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவியின் ககுறிப்பிடுகையில்,

இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றிருப்பது குறித்து தனக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் இதுகுறித்து தான் ஆராய்வதாகவும் கூறினார். இந்தியாவிலிருந்து கேரளா கஞ்சா உட்பட பல்வேறு பொருட்கள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்படும் முயற்சிகளை முறியடிக்கவே கரையிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ரோந்து படகுகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இறந்தவர்களின் சாம்பலை என்ன செய்யவேண்டும் - வத்திக்கான் விளக்கம்

இறந்தவர்களை தகனம் செய்வது குறித்து ஒரு புதிய வழிகாட்டுதலை வத்திக்கான் அளித்துள்ளது.
வத்திக்கான்.

ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள், தாங்கள் மிகவும் நேசித்தவர்களை தகனம் செய்த பிறகு அந்தச் சாம்பலை தூவுவதோ அல்லது வீட்டில் வைத்துக்கொள்ளுவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

அந்த வழிகாட்டுதலில், தகனம் செய்யப் பட்டவர்களின் சாம்பலை ஒரு தேவாலயம் அல்லது கல்லறையில் செலுத்துமாறு கூறியுள்ளது.

அவை தான் அவர்களின் சேமிப்பை அர்ப்பணிக்க ஒரு புனிதமான இடமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை அடக்கம் செய்வதைத் தான் விரும்புகிறது என்றாலும் , அது 1960களில் இருந்து தகனம் செய்வதற்கும் அனுமதி அளித்துள்ளது.

ரோமன் கத்தோலிக்கர்களிடம் பிரபலமாக உள்ள தகனம் செய்யும் நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மற்றும் மக்கள் இறந்தவர்களின் சாம்பலை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவரவர்களே பெரும்பாலும் மிகவும் தனிப்பட்ட வகையில் தேர்வுகளைச் செய்யும் சூழலுக்கு பதில் நடவடிக்கையாக வத்திக்கானின் இந்த புதிய வழிகாட்டுதல் வருகிறது.

பொக்ஸ்வேகன் கார் கம்பனி 15 பில்லியன் டொலர் நட்டவீடு செலுத்த பணிப்பு

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான, ஃபோக்ஸ்வாகன், மாசு வெளியீடு சோதனைகளை ஏமாற்றிய மோசடி தொடர்பாக, சுமார் 15 பில்லியன் டாலர் பணத்தை தீர்வுத் தொகையாகத் தர வேண்டும் என்ற ஏற்பாட்டுக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த தீர்ப்பின் மூலம், சுமார் அரை மில்லியன் ஃபோக்ஸ்வாகன் உரிமையாளர்கள் தங்களது கார்களை மீண்டும் விற்க முடியும் அல்லது தங்களது கார்களை சரி செய்து கொள்ள முடியும் .
அவர்கள் இழப்பீடாக 10,000 டாலர் வரை பெற முடியும்.

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வண்டிகள் தூய்மையானதாக இருப்பதாக காட்டிக் கொள்ள, மாசு வெளியீடு சோதனைகளை ஏமாற்றி மோசடி செய்ததை கடந்த ஆண்டு அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.
அமெரிக்க மோட்டார் தொழில் வரலாற்றில் இந்தத் தீர்வு தொகையானது ஒரு சாதனையாகும். ஆனால் ஃபோக்ஸ்வாகன் மேலும் பல செலவுகளை எதிர்நோக்கியுள்ளது. அதில் அபராதம், 16 அமெரிக்க மாநிலங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பிற நாடுகளில் உள்ள வழக்குகள் ஆகியவை அடங்கும்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…