Super User
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று இரண்டு பெண் டாக்டர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவிற்கு இயந்திரத்தின் மூலம் பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கவே இந்த சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல் ஆகியோரோடு அப்பல்லோ மருத்துவக் குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார் - பொன்.ராதாகிருஷ்ணன் Powered by சிங்கப்பூர் டாக்டர்கள் இந்நிலையில் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து இரண்டு பெண் டாக்டர்கள் நேற்று சென்னை வந்துள்ளனர். இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த இதுவரையிலான சிகிச்சைகளின் விவரங்களை அறிந்துகொண்டு அடுத்தக்கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளனர்
பிசியோதெரபி பயிற்சி ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை தரப்படுகிறது. அதனுடன் பேசிவ் பிசியோதெரப்பி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை கருதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் இந்த பயிற்சிகள் முழுமையாக அளிக்க முடியவில்லை.
கிருமி தொற்று ஜெயலலிதாவிற்கு கிருமி தோற்று ஏற்படாமல் இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இதுவரை பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் அடிக்கடி சென்று பயிற்சிகள் அளிக்கும் போது, நோய் தொற்று அதிகரிக்கக் கூடிய சூழலும் உருவாகும்.
எனவே ஜெயலலிதாவிற்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிப்பதற்காக நிர்வாகம் ஒரு புதிய எந்திரத்தை வாங்கியுள்ளது. அதன் மூலம் மனிதர்கள் உதவி இல்லாமல் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இயந்திரம் மூலம் சிகிச்சை இந்த எந்திரத்தை இயக்குவதற்கு ஒரே ஒரு டாக்டர் மட்டும் போதும்.
அந்த எந்திரத்தை எப்படி இயக்குவது என சொல்லிக்கொடுப்பதற்கு சிங்கப்பூரில் இருந்து எந்திரத்தை தயாரித்த கம்பெனி, டாக்டர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. இது தான் சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னைக்கு வந்ததன் ரகசியம் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

டைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை
அமெரிக்க ஓட்ட பந்தயவீரர் டைசன் கேயின் 15 வயது மகள் கென்டகி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிக்சூட்டில் டிரினிட்டி கே சுடப்பட்டு இறந்தார்
லெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்ல் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.
100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின் போல்ட்டிற்கு அடுத்த நிலையில் உள்ளவர் தான் டைசன் கே.
ரியோ ஒலிம்பிக்கில் டைசன் கே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றார்
தசை மற்றும் எலும்பு வளர்ச்சியை தூண்டுகின்ற அனபோலிக் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ஊக்க மருந்து சோதனையின் முடிவுகள் வந்ததால் இரண்டு ஆண்டுகள் விளையாட்டு போட்டிகளில் இருந்து டைசன் கே தடைசெய்யப்பட்டார். அதனால், 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது..
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர்,ஓட்டம் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் டைசன் கே தங்கப்பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

தலைக்கவசம் அணியாமலேயே பயணிக்கலாம்
பி.எம்.டப்ளியூ புதிய வகை உந்திருளி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த உந்துருளியினை ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணியத் தேவை இல்லை அந்தளவு பாதுகாப்பானது. சரிவுகள், பள்ளங்கள் , விபத்துக்களின்போது தானாக சரிசெய்துகொண்டு பயணிப்பவர்களை விளாது பாதுகாத்துக்கொள்ளும்.
கூடவே சமிக்கைகள் மற்றும் வேககட்டுப்பாட்டு என்பன என்பவற்றுக்கு எல்லாம் பொத்தான்களை அழுத்த தேவை இல்லை வெறும் விரல் அசைவுகளாலேயே செய்யமுடியும்.

மோடி-புட்டின் ஒப்பங்கள் கைச்சாத்து
இந்தியா ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கூடங்குளம் புதிய அணு உலை உள்ளிட்ட 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 8வது மாநாடு நேற்று கோவாவில் தொடங்கியது. கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கடும் பனி காரணமாக 9 மணி நேரம் காலதாமதமாக இந்தியா வந்து சேர்ந்த புடினை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் மற்றும் கோவா துணை முதல்வர் பிரன்சிஸ் டிசோசா ஆகியோர் வரவேற்றனர். பின்னர், ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி இடையே இந்தியா, ரஷ்யா நாடுகள் இடையேயான 17ம் ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் ஆகியோர் கலந்து கொண்டு, காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் பற்றியும் அதில் உயிரிழந்த 19 இந்திய வீரர்கள் பற்றியும் விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து, இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தான பேச்சுவார்த்தையிலும் அவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, இந்திய ரஷ்ய நாடுகளுக்கிடையேயான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவை:

ஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக அறிக்கை இல்லை
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் அளிக்காமல் உள்ளது. இதுவரை 10 அறிக்கைகளை வெளியிட்டுள்ள அப்பல்லோ கடந்த 6 நாட்களாக அறிக்கை எதையும் வெளியிடாமல் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது முதல் அவ்வப்போது அப்பல்லோவிலிருந்து அறிக்கைகள் வெளியாகிக் கொண்டுள்ளன. இதுவரை 10 அறிக்கைகள் வந்துள்ளன. அதில் ஒரே ஒரு முறை மட்டுமே மிக விரிவான அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் வரவில்லை. கடைசியாக 10ம் தேதிதான் அறிக்கை வெளியானது. அதற்குப் பிறகு எந்த அறிக்கையும் வரவில்லை.
செப்டம்பர் 22ல் அனுமதி செப்டம்பர் 22ம் தேதி இரவு முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பானது. முதல்வர் உடல் நலனுக்கு என்ன என்ற பெரும் கவலை அதிமுகவினர் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியலும் நிலவியது.
23ம் தேதி முதல் அறிக்கை அடுத்த நாள் அப்பல்லோ வெளியிட்ட முதல் அறிக்கையில் முதல்வர் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை மூலம் சாதாரண காய்ச்சல் காரணமாக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவே அனைவரும் நினைத்தனர்.

டொனால்-ட்ரும்ப் ஒரு பெண்பித்து பிடித்தவர்; முன்னாள் அழகி
அமெரிக்க குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது பெண்கள் பலரும் அடுக்கடுக்காக பாலியல் புகார்களை கூறி அவை ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மற்றொரு முன்னாள் மாடல் அழகி, தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி இங்கிலாந்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார், டொனால்டு டிரம்ப் (70). இவர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். டொனால்டு டிரம்ப் கடந்த 2005ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அப்போது அவர், தான், பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது ஒருவர் எதையும் செய்யலாம் என கூறி உள்ளார். இது தொடர்பாக கடந்த வாரம், ஒரு வீடியோ வெளியானது அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. அவர் மன்னிப்பு கேட்டபோதும், அவரது சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிராக புயல் வீசுகிறது.
[டொனால்ட் ட்ரம்ப் ஒரு பிளே பாய்.. பாலியல் சில்மிஷங்களை அம்பலப்படுத்திய பெண்கள்!] இந்நிலையில், தற்போது 49 வயதாகும், கிர்சேபோம் என்ற முன்னாள் மாடல் அழகி, ஒரு பேட்டியில், டொனால்ட் ட்ரம்ப் எப்போதுமே காம எண்ணத்தில் இருக்க கூடியவர் என்பதை போட்டு உடைத்துள்ளார். ஒரே மேஜையில் 1993ல் வேனிட்டி ஃபேர் நிகழ்ச்சியின்போது, வெள்ளை மாளிகை ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில், கோடீஸ்வரர் டொனால்ட் டிரம்ப்புடன் ஒரே வட்ட மேசையில் அமர நேரிட்டது வாழ்க்கையில் மறக்க முடியாத அவதி என்கிறார் இவர்.
மார்பக பேச்சு பெண்களின் மார்பகங்கள் பற்றிதான் முழுக்க பேசியபடியே இருந்தாராம், டிரம்ப். சிறு மார்பகங்கள் மற்றும் பெரிய மார்பகங்களின் வேறுபாடுகள் குறித்தும், அதில் எந்த வகை மார்பகங்கள் எப்படியெல்லாம் ஆண்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது குறித்தும், ஹஸ்கி குரலில், 'விளக்கம்' கொடுத்தாராம் டிரம்ப். உடல்தான் எல்லாமுமே மேலும், குண்டான பெண்களை பெண்கள் என்றே கூறக்கூடாது என்றும், ஒல்லியாக, செக்சியாக இல்லாத பெண்கள் பெண்களாக பிறக்க தகுதியில்லாதவர்கள் என்றும் டிரம்ப் வர்ணித்துள்ளார். சுமார் 45 நிமிட நேரம், டிரம்பின் போதை ததும்பும் வார்த்தைகளை கேட்டு அங்கே உட்கார முடியாமல் கண்ணீருடன் வேறு மேஜைக்கு ஓடியுள்ளார்,
இப்போது, இரு பெண் குழந்தைகளுக்கு தாயாக உள்ள கிர்ஸ்போம். அமெரிக்கா அவ்வளவுதான் டொனால்ட் ட்ரம்ப் அதிபரானால், அமெரிக்கா நாசமாக போய்விடும் என்றும் கிர்ஸ்போம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அவரது வெளியுறவு கொள்கைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிவரும் நிலையில், பெண்களின் எதிர்ப்பும் டிரம்புக்கு எதிராக புயலாக வீசுகிறது. பெண் பாவம் பொல்லாதது என்பார்கள். டிரம்ப் நிலைமையை நவம்பர் மாத தேர்தல் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

டொனால் ட்ரம்பின் செல்வாகு வீழ்ச்சி
2005ம் ஆண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவின் போது, செட்டுக்கு வெளியே பேசிய ட்ரம்பின் கொச்சைப் பேச்சு வீடியோ, அமெரிக்க அதிபர் தேர்தலைப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீடியோ வெளியானது முதல் படு மோசமான தோல்வியை நோக்கி ட்ரம்ப் போய்க்கொண்டிருக்கிறார்.
இதற்கெல்லாம் மூல காரணம் புஷ் குடும்பமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.ட்ரம்பும் புஷ் குடும்பமும் குடியரசுக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ்ஷும் களத்தில் இருந்தார். அவரை 'சக்தி இல்லாதவர்' என்று மிகக் கடுமையாக விமரிசித்தார் ட்ரம்ப். மேலும் அவரது அண்ணன் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கையாலகாதனத்தால்தான் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது.
அமெரிக்கர்களுக்கு புஷ் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினார். அதிபர் வேட்பாளர் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட ஜெப் புஷ், ட்ரம்பின் அதிரடிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் சீக்கிரமாகவே போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.
குடும்பத்தில் தந்தை மகன் என இரண்டு முன்னாள் அதிபர்கள் இருந்தும், ட்ரம்புக்கு ஆதரவு தர மறுத்து விட்டனர். சீனியர் புஷ் ட்ரம்புக்கு எதிராக வாக்களிப்பேன் என்று சொன்னதாக தகவல் உலவுகிறது. தற்போது வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய வீடியோவில் உடன் இருந்து ட்ரம்புடன் பேசுபவர் டிவி தொகுப்பாளர் பில்லி புஷ்.
இவர் ஜெப் புஷ், ஜார்ஷ் புஷ் சகோதரர்களின் சித்தப்பா மகன், சீனியர் புஷ்ஷின் தம்பி பையன் ஆவார். வீடியோ குறித்து கூறுகையில், 'அப்போது நான் வயதில் சிறியவன், முதிர்ச்சியற்ற நிலையில் இருந்தேன் மன்னிப்புக் கோருகிறேன்," என்று பில்லி அறிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ இப்போது ஏன் எப்படி வெளியானது? வீடியோ வெளியான நேரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. என்பிசி தொலைக்காட்சியின் பழைய பதிவுகளில் இருந்து சிறப்பு நிகழ்ச்சிக்காக இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள். அவர்கள் நிகழ்ச்சி வெளியாகும் முன்னதாகவே வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டு சர்சையை கிளப்பிவிட்டது. வாஷிங்டன் போஸ்ட்க்காக செய்தி வெளியிட்ட டேவிட் ஃபேரன்தோல்ட், 'வீடியோவை கசியவிட்டவர் யாரென்று தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன்' என்று கூறியுள்ளார்.
புஷ் குடும்பத்திற்கும் இந்த வீடியோ வெளியானதற்கும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை. அதே சமயத்தில் எதிர்கட்சியின் ஹிலரி புஷ் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஹிலரி தங்கள் வீட்டு மருமகள் போன்றவர் என்று ஜார்ஜ் புஷ் முன்னர் தெரிவித்திருந்தார். சீனியர் புஷ்ஷை தோற்கடித்த பில் க்ளிண்டனை தன்னுடைய மகன் போன்றவர் என்று அவர் கூறியிருக்கிறார். இரு குடும்பதிற்கிடையேயும் உள்ள நெருங்கிய நட்பு இன்றும் தொடர்கிறது. இருவருக்கும் பொது எதிரி ட்ரம்ப் என்ற நிலையும் உருவாகிவிட்டது. இந்த வீடியோ வெளியீட்டில் ஒருவேளை புஷ் குடும்பத்தின் பின்னணி இருக்குமோ என்ற கேள்வியும் எழுகின்றது.
அடுத்தடுத்த சரிவு.. ஞாயிற்றுக்கிழமை நடந்த.இரண்டாம் விவாதத்தில், பில் க்ளிண்டனுக்கும் பெண்களுக்கும் உள்ள பழைய பிரச்சனைகளை கிளப்பி திசை திருப்பப் பார்த்தார் ட்ரம்ப். அதை சட்டை செய்யாமல், 'அவர்கள் தாழ்ந்து போனால் நீங்கள் உயரே போங்கள்' என்ற மிஷல் ஒபாமாவின் முழக்கத்தைக் கூறி, தனது அரசின் திட்டங்கள் பற்றி பேசினார் ஹிலரி. விவாதத்தில் ஹிலரி வெற்றி பெற்றார் என்று அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன.
அடுத்தடுத்த நாட்களில் பெண்கள் பற்றிய ட்ரம்பின் அருவருக்கத்தக்க முந்தைய ரேடியோ பேச்சுக்கள் வெளியானது. இரண்டு பெண்கள், ட்ரம்ப், தங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்று குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். இந்த செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மீது வழக்குத் தொடரப் போவதாக ட்ரம்ப் அறிவித்தார். வழக்கை எதிர் கொள்ளத் தயார் என்று நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
மிஷல் ஒபாமாவின் உணர்ச்சிமயமான பேச்சு, நாடெங்கிலும் கட்சி பாகுபாடுன்றி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிபர் ஒபாமாவும் தேர்தல் களத்தில் இறங்கி ட்ரம்பை வெளுத்துக் கட்டுகிறார். வழக்கமான குடியரசுக் கட்சி மாநிலங்களில் கூட ஹிலரியும் ட்ரம்பும் சம நிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நாடு தழுவிய கருத்துக் கணிப்பில் ஹிலரி பெரும் வித்தியாசத்துடன் முன்னணியில் இருக்கிறார். பால் ரயன், ஜான் மெக்கய்ய்ன், மிட்ச் மெக்கனல் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் ட்ரம்புக்கு ஆதரவை விலக்கிக் கொண்டனர். செனட் வேட்பாளர்கள் ட்ரம்பிடம் இருந்து விலகியே பிரச்சாரம் செய்கிறார்கள். ட்ரம்புக்கு இன்னும் வாய்ப்புள்ளதா? பெண்கள், லத்தீன் இனத்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்கு வங்கியை இழந்து, சொந்த கட்சித் தலைவர்களும் கைவிட்டு விட்ட நிலையில், மொத்த வாக்குப்பதிவு குறைந்தால் ட்ரம்புக்கு ஒரு வேளை வெற்றி வாய்ப்பு இருக்கலாம்.
ட்ரம்பின் தற்போதைய நடவடிக்கை அதை நோக்கித் தான் இருப்பதாக தெரிகிறது. மூர்க்கத்தனமாக ஊடகங்கள், கட்சித்தலைவர்களை தாக்கிப் பேசி வருகிறார். நடுநிலை வாக்காளர்களை வெறுப்பின் உச்சத்திற்கு தள்ளி, வாக்களிக்க வரவிடாமல் தடுக்கலாம் என்ற உத்தி போல் தெரிகிறது. விக்கிலீக்ஸ்-ம் ஹிலரி தரப்பு பற்றி தினம் தோறும் தகவல்களை வெளியிட்டு வருகிறது.அவற்றில் ஏதாவது பெரிய விவகாரம் வெடித்தாலும், ட்ரம்ப் பக்கம் காற்று திரும்பலாம். கட்சி ஓட்டுகளை சிதறாமல் வைத்து, எதிர்தரப்புக்கு வாக்கு பதிவாகமல் தடுப்பது ஒன்று தான் ட்ரம்புக்கு இருக்கும் ஒரே வழி. அது கொக்குக்கு வெண்ணை வைத்து பிடிப்பது போன்ற கதைதான். விரைவில் அமெரிககாவின் முதல் பெண் அதிபராக ஹிலரி க்ளிண்டன் வெற்றி பெற்றார் என்ற செய்தி வரும் என்று நம்பலாம்.

பனீர்ச்செல்வம் பதில்முதல்வர்
முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரிடமிருந்த காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும், கடந்த செவ்வாய்க்கிழமை முதல், பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா பதவி வகிக்கிறார்.
ஜெயலலிதா பரிந்துரைப்படிதான், பன்னீர்செல்வத்திற்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தகவலை முறைப்படி அறிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன. இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்
கோவாவில் இன்று நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரதமர் மோடி, தீவிரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் 2 நாள் மாநாடு இன்று பனாஜி நகரில் தொடங்குகிறது. இதில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் விதமாக ரஷிய, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட அமைப்பு 'பிரிக்ஸ்' ஆகும். இதன் உச்சி மாநாடு ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மாநாடு ரஷியாவின் உபா நகரில் நடந்தது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் கோவா மாநிலத் தலைநகரான பனாஜி நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது. முதல் நாளில் பிரிக்ஸ் மற்றும் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய வங்கக் கடல் பகுதியில் பல்துறை தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான 'பிம்ஸ்டெக்' அமைப்பு மாநாடு நடக்கிறது.
இதில் இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதைத்தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்தியத் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் தெமர், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரிக்ஸ் மாநாட்டின் இடையே புதின், ஷின்பிங் ஆகியோரை மோடி சந்தித்து இருநாடுகள் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அப்போது காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது பற்றி மோடி எடுத்துக் கூறி பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கும் முயற்சி மேற்கொள்கிறார். மேலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அவர் வற்புறுத்துவார். பாகிஸ்தான் சேட்டைகள் செய்தால், இந்தியா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது, பதிலடி கொடுத்தே தீரும் என்று ஜின்பிங்கிடம், மோடி தெரிவிக்க உள்ளார்.
இவ்விரு தலைவர்களும் மாலை 5.40 மணியளவில் சந்திக்க உள்ளதாகவும், சீன அதிபர் மதியம் 1.10 மணிக்கு இந்தியா வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்
பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.இதில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்கின்றார்
8ஆவது தடவையாக நடைபெறும் இந்த பிரிக்ஸ் மாநாட்டின் தலைமைப் பொறுப்பும் உபசரிப்பு பொறுப்பும் இந்தியாவுக்கு கிடை த்துள்ளதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநா ட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்தியாவின் கோவாவில் இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
இந்தியா. சீனா ரஷ்யா, பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகிய வளர்ச்சியடைந்து வரும் ஐம்பெரும் பொருளாதார நாடுகளும் பங்களா தேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் ஆப்கானிஸ்தான் மாலைதீவு ஆகிய நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.
இந்த மாநாட்டிற்கு இடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.