Super User
கிளியில் காணிகள் சில விடுவிப்பு
சட்டவிரோதை மருத்துவமனை சுற்றிவளைப்பு
காணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் இரு சட்டத்தரணிகள் மற்றும் இரு அருட்தந்தையர்களும் இணைந்தே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று மாலை 4 மணிக்கு, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டி ருந்தபோதும், திடீரென அது மாலை 4 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு திடீர்ப் பயணமாக இன்று வருகை தரும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளார்.
இந்தச் சந்திப்புக்கு வடக்கு - கிழக்கின் 8 மாவட்டங்களையும் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். வவுனியா மாவட்டத்தின் சார்பில் பாலேஸ்வரி, கிளிநொச்சி மாவட்டத்தின் சார்பில் கனகரஞ்சினி, லீலாதேவி, யசோதரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சார்பில் ஈஸ்வரி, யாழ்ப்பாண மாவட்டத்தின் சார்பில் சித்திராதேவி, மன்னார் மாவட்டத்தின் சார்பில் உதயசந்திரா, மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் அமலி, திருகோணமலை மாவட்டத்தின் சார்பில் ஜெயலக்சுமிபிள்ளை, அம்பாறை மாவட்டத்தின் சார்பில் செல்வராணி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவர்களுடன் சட்டத்தரணியான இரத்தினவேல், அருட்தந்தை செபமாலை ஆகியோரும் மேலும் மூவரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
வடக்கு கல்வியமைச்சர் இராஜினாமா
தனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில், தான் அப்பதவியை இராஜினாமா செய்யப்போவதாக, அவரது இராஜினாமாக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவிக்கின்றது.
வடமாகாண அமைச்சர்களான தம்பிராஜா குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை, வடமாகாண சபையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பான விவாதம், நாளை மறுதினம் புதன்கிழமை (14) இடம்பெறவுள்ள நிலையிலேயே, குருகுலராசா, தனது பதவியைத் தற்காலிகமாக இராஜினாமா செய்துள்ளார்.
கிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்
குறித்த கொள்ளைச் சம்பவம் கல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கல்லாறு பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற கொள்ளைக் குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்தியவாறு அழைத்து சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் அலறல் கேட்டு வீட்டார் கதவை திறக்கும் முன்னர் வீட்டின் பின் கதவை உடைத்து உட்சென்ற குழுவினர் அங்கிருந்த பெண்கள் சிறுவர்களை அச்சுறுத்தி காதில் இருந்த தோடு உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளனர்.
அயலவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் வருகை தந்திருந்த குழுவினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 40 பவுணுக்கு அதிக பெறுமதியான தங்க ஆபரணங்கள், நான்கு இலட்சம் ரூபா பணம் என்பவை அந்த குழுவால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்
குறித்த கொள்ளைச் சம்பவம் கல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கல்லாறு பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற கொள்ளைக் குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்தியவாறு அழைத்து சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் அலறல் கேட்டு வீட்டார் கதவை திறக்கும் முன்னர் வீட்டின் பின் கதவை உடைத்து உட்சென்ற குழுவினர் அங்கிருந்த பெண்கள் சிறுவர்களை அச்சுறுத்தி காதில் இருந்த தோடு உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளனர்.
அயலவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் வருகை தந்திருந்த குழுவினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 40 பவுணுக்கு அதிக பெறுமதியான தங்க ஆபரணங்கள், நான்கு இலட்சம் ரூபா பணம் என்பவை அந்த குழுவால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
போர்க்குற்றச்சாட்டு: சிங்கள படைகளுக்கு அனுமதிமறுப்பு
மாலியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக 212 இராணுவத்தினரைக் கவச வாகனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் தருமாறு ஐ.நா. கோரியிருந்தது. இதற்கா கத் தெரிவு செய்யப்பட்ட 400 படையினரைக் கொண்ட பட்டியல் ஐ.நாவுக்கு அனுப்பப்பட்டது.
இதில் 40 பேரை மட்டுமே ஐ.நா அங்கீகரித்துள்ளது. ஏனையவர்கள் இறுதிக்கட்டப் போரில் பங்கேற்றவர்கள் என்ற அடிப்படையில், நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
மாலியில் இராணுவத்தினருக்கான கட்டளை அதிகாரியாகப் பணியாற்றத் தெரிவு செய்யப்பட்ட கேணல் சமந்த விக்கிரமசேனவின் பெயரும் ஐ.நாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள், வாகனங்களுடன் படையினர் தர நியமனங்களுக்கேற்ப உள்ளனரா என்பதை, ஆய்வு செய்ய ஐ.நா குழுவொன்று எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது
யாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று மாலையில் திடீரென வீசிய சுழல் காற்றால் பொம்மைவெளி , புதிய சோனகத் தெருப் பகுதிகளில் 21 வீடுகளின் கூரைகள் முழுமையாகத் தூக்கி வீசப்பட்டன. மேலும் பல குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளனர்.
இதேவேளை ஓர் வீட்டின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டவேளையில் அதன் அருகில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தின்மீது வீழ்ந்தமையால் அதன் கண்ணாடி சேதமடைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்றுகாலையிலிருந்து பல இடங்களில் மின் தடைப்பட்டது. சாவகச்சேரி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மின் கம்பிகள் அறுந்தன. வடமராட்சிக்கான மின் விநியோகம் இன்று காலைக்குள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்சார சபையினர் கூறினர்.
வட்டுக்கோட்டையில் மின் மாற்றியில் ஏற்பட்ட பெரு வெடிப்புக் காரணமாக மின் தடைப்பட்டது. அதனால் அந்தப் பிரதேசத்தில் மின் விநியோகம் தடைப்பட்டது. மின்சார சபை ஊழியர்கள் அவற்றைச் சீரமைப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மின்சார சபையினர் தெரிவித்தனர்.
நேற்று இரவு திடீரெனப் பல இடங்களிலும் மின் தடைப்பட்டதனால் பெரும் அசளகரியங்களை எதிர்கொண்டதாகப் பலரும் தெரிவித்தனர்.
திருமலை சிறார் வன்புணர்வு- அடையாள அணிவகுப்பில் குளறுபடியா?
மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஜ.றிஸ்வான், முன்னிலையில், இந்த அடையாள அணிவகுப்பு, நேற்றுக் காலை 8:30 மணியிலிருந்து சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் இடம்பெற்றது.
இந்த அடையாள அணிவகுப்பில், 35 பேர் நிறுத்தப்பட்டனர். அவர்களை, ஒவ்வொரு சிறுமியரும் நான்கு தடவைகள் பார்த்தனர். எனினும், அச்சிறுமியர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு, கடந்த 31ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, குற்றவாளியைக் கண்டறிவதற்காக அடையாள அணிவகுப்பை, 5ஆம் திகதியன்று (நேற்று) நடத்துவதற்கு அன்றையதினம் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டது.
அதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் என்றுமில்லாதவாறு, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத்துக்குள் சென்றவர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆள் அடையாள அட்டையும் பரிசோதிக்கப்பட்டது. அத்துடன், அலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் எவையும், மன்றுக்குள் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், திருகோணமலை விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டிருந்த, இந்த வன்புணர்வுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் ஐவரையும் ஏற்றிக்கொண்டு, சிறைச்சாலைகள் பஸ், காலை 8:15 மணியளவில் வந்தது.
மூதூர் நீதவான் நீதிமன்றத்துக்கு, கைதிகள் அழைத்துவரப்படும் போது, சிறைச்சாலை வாசலில் வைத்தே, அவர்கள் இறக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்குள் அழைத்துச்செல்லப்படுவர்.
எனினும், சிறைச்சாலை பஸ்ஸானது நேற்றையதினம், வளாகத்துக்குள்ளேயே சென்றுவிட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்கு அண்மையில், பெருந்திரளானோர் குவிந்திருந்தனர். அங்கு அமைதியைக் காக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அரச தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சைவ சமய வகுப்புக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 4.00 மணியளில் சென்றிருந்த, 7 மற்றும் எட்டு வயதுகளுடைய மூன்று மாணவியரே, இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.
இம்மாணவிகளை, மல்லிகைத்தீவு பாடசாலை கட்டுமாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களில் சிலர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் என, அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் இருவரை அப்பிரதேச மக்கள் கட்டிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் வழங்கிய உறுதிமொழியை அடுத்து பதற்றம் தணிந்தது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும், மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதன்பின்னர், அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அடையாள அணிவகுப்பு, நேற்று (05) நடத்தப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஐவருடன், மேலும் 30 பேர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகள் சார்பில், பெண் சட்டத்தரணிகள் இருவர் அடங்கலாக ஐந்து சட்டத்தரணிகள், முன்னிலையாகியிருந்தனர்.
முகங்களை மூடியிருந்த அந்தச் சிறுமிகள் மூவரும், தலா நான்கு தடவைகள் என்ற வீதத்தில் 12 தடவைகள், 35 பேரையும் தனித்தனியாகப் பார்த்தனர். எனினும், அச்சிறுமியர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.
இதனையடுத்து, அந்த ஐவரும், முகங்களை மூடி அழைத்துவரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கையும் அன்றைய தினத்துக்கே ஒத்தவைத்தார்.
இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து பெற்ற மரபணு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணித்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் இவ்வழக்கு விசாரணை புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு மன்றில் கோரியிருந்தனர்.
டொனால்ட் ட்ரம்ப், கானுடன் மீண்டும் வம்பு
லண்டன் தெருக்களில் அதிக போலீஸார் காவல் பணியில் ஈடுபடுவர். அதனை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மேயர் சாதிக் கான் தெரிவித்திருந்தார்.
ஆனால், தாக்குதல் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடுவதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், லண்டன் மேயரின் விளக்கம் "பரிதாபமான சாக்குப்போக்கு" என்று திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறார்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர்.
இந்த சோக நிகழ்வுக்கு பின்னர், "இன்றும், இன்னும் சில நாட்களும் அதிக போலீஸார் காவல் பணிபுரிவதை லண்டன் மக்கள் காணலாம். அதைக் கண்டு பீதி அடைய வேண்டாம்" என்று சாதிக் கான் தெரிவித்தார்.
இவ்வாறு தெரிவித்திருப்பதற்கு சாதிக் கானை விமர்சித்துள்ள அதிபர் டிரம்ப், அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின்னணியை எழுத தவறி, "குறைந்தது 7 பேர் பலி. 48 பேர் காயம். லண்டன் மேயர் பீதியடைய வேண்டாம்! என்கிறார்" என டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.
மேயர் மீதான டிரம்பின் இந்த தாக்குதலுக்கு பதிலளித்துள்ள அவருடைய செய்தி தொடர்பாளர், "தவறான டிவிட்டர் தகவலுக்கு பதில் அளிப்பதைவிட முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் சாதிக் கானுக்கு இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.