Super User

Super User

மகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்

மகன் அடையவிருக்கும் வெற்றிக்கான பயணச் செலவாக, வெறும் பத்து ரூபாயை மட்டும் தர முடிந்த சரோஜா தனித்து வாழும் ஒரு சாதனைப் பெண். அவர்தான் கனவுக்காக வாழ்க்கையில் போராடிய ஏழைத்தாய் சரோஜா.

''திருமண வாழ்க்கையில் சந்தித்த தோல்வி என்னைத் தனித்து வாழும் பெண்ணாக மாற்றியது. ஒலிம்பிக்ஸ் போட்டி பற்றி எனக்கு தெரியாது. ஆனால் என் மகன் உலக அளவில் பாராட்டு பெற வேண்டும் என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்ததில்லை. எனது மகன் பாரலிம்பிக்ஸ் போட்டிக்காகச் சென்றது எங்கள் ஊரில் பலருக்கும் தெரியாது.தொலைக்காட்சியில் மாரியப்பன் தங்கம் வென்றதைப் பார்த்த பலருக்கு அதை நம்ப முடியவில்லை,''' என்றார்.

ஆரம்பத்தில் ஒரு மாற்றுத் திறனாளி குழந்தை இருந்ததால் வாடகை வீடு கிடைப்பதில் கூடச் சிரமப்பட்டதாக அவர் கூறுகின்றார். ''உறவினர்கள் பலரும் ஒதுக்கி வைத்தனர். செங்கல் சுமக்கும் வேலை, விவசாய கூலி வேலையில் கிடைத்த காசு, எனக்கும் எனது மூன்று மகன்களுக்கும் ஒரு வேளை உணவை உறுதி செய்தது. அவர்கள் என்னிடம் எதையும் வாங்கித் தர கேட்டதில்லை,'' என்றார் சரோஜா.

மாரியப்பனின் ஐந்து வயதில் ஒரு விபத்தில் அவரது வலது கால் பாதத்தின் பெரும்பகுதி சிதைந்தது. விளையாட்டில் ஆர்வம் கொண்ட தனது மகனுக்கு உற்சாகம் மட்டுமே அளிக்கமுடிந்தது என்றார் சரோஜா. ''மாரியப்பன் மற்றும் அவனது தம்பிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை நான் அனுமதித்தேன். அவர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் மட்டும் தான் என்னால் தர கூடிய ஒன்றாக இருந்தது. வளரும் போது, அவன் பரிசு வாங்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல கூட எனக்கு நேரம் இருந்ததில்லை,'' என்கிறார்.

கடந்த சில மாதங்களில் தனது உடல் பலம் முழுவதையும் இழந்து, மன வலிமையையும் இழந்த சரோஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். ''தற்கொலை தான் தீர்வு என நினைத்தேன். எனது மகன் மாநில அளவு மற்றும் தேசிய அளவில் பரிசுகளை குவித்திருந்தாலும், எங்கள் குடும்பத்திற்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த ஒலிம்பிக் பரிசு எங்களுக்கு புதிய பாதையை அமைத்துக் கொடுத்துவிட்டது,'' என்றார் சரோஜா.

தமிழக அரசு கொடுத்த இரண்டு கோடி ரூபாய், மத்திய அரசு வழங்கியுள்ள 75 லட்சம், பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த நிதி எனப் பல பரிசுகள் சரோஜாவின் இல்லத்தில் குவிந்துள்ளன. ஆனால் சரோஜாவுக்கு, அடுத்தமுறை தனது மகன் விளையாட்டு போட்டிக்கு செல்லும் போது, கை நிறைய பணம் தர முடியும் என்பது பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

மிகப்பெரும் தாக்குதலை முன்கூட்டியே முறியடித்த பிரான்ஸ்

அடுத்த வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான சிறார்கள் கொல்லப்பட்டிருப்பர், அதிஸ்டவசமாக பிரான்ஸ் படைகள் தடுத்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகருக்குள் அல்லது அதனை ஒட்டிய பகுதியில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டிருந்தனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு பேரும் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவரும் இராக்கில் உள்ள ஐ.எஸ் தளபதி ஒருவரிடமிருந்து சங்கேத மொபைல் செயலி வழியாக உத்தரவுகளை பெற்றுக்க்கொண்டிருந்ததாக அரச வழக்குரைஞர் பிரான்சுவா மோலின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ட்ராஸ்பர்க் மற்றும் மார்ஸெய் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் தானியங்கி ஆயுதங்களின் குவியல் ஒன்றையும், அதனுடன் கூடுதலாக மதத்தின் பெயரால் உயிரை மாய்த்து கொள்வது மற்றும் வீரமரணத்தை தழுவுவது உட்பட ஐ.எஸ் குழுவினருக்கு விசுவாசம் காட்டும் ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக மோலின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவானது இணையத்தில் டஜன் கணக்கான இடங்களை ஆய்வு செய்ததாகவும், அதில் ஷாம்ப்ஸ் எலிசீஸ் கிறித்துமஸ் சந்தை மற்றும் பாரீஸ் டிஸ்னிலேண்டும் அடங்கும் என்று ஒரு போலிஸ் வட்டார தகவல் கூறுகிறது.
இன்று காலை ஐந்து சந்தேக நபர்களும் பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதிகள் முன்னிலையில் ஆஜரானார்கள் என்று மோலின்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இன்று ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவரகள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர், மாவீரர்களை நினைவுகூர்ந்து மெழுகுதிரிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

தாயக விடுதலைப்போரில் ஆகுதியாகிய மாவீரர்களை வழமையாக நவம்பர் மாதம் 27 ஆம் தேதியே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அனுட்டித்து வந்துள்ளது.


இந்த மாவீரர் தினத்தை அனுட்டிப்பது சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்து, முந்தைய அரசாங்கம் அதற்குத் தடைவிதித்திருந்தது.


இந்த நிலையில் நேற்றிரவு யாழ் பல்கலைக்கழகத்தின் பல இடங்களிலும் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு அமைதியான முறையில் நடந்தேறியிருக்கின்றது.


சீனாவில் தொழிற்சாலை விபத்து 40 பேர் பலி

சீனாவில் ஜி யாங்ஷி மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் நடைபெற்ற விபத்தில் நாற்பதுக்கும் மேலான மக்கள் இறந்துள்ளனர்.

இந்த விபத்தினால் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை தெரியாத நிலை உள்ளதாக சீன செய்தி முகமையான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.

ஊழல், தொழிற்சாலைகளில் உள்ள பாதுகாப்பு தர குறைபாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதால் உற்பத்தியை அதிகரிக்க தொழிலாளர்களுக்கு தரப்படும் அழுத்தம் ஆகிய பல கூட்டு காரணங்களால் பெரும் தொழிற்சாலை விபத்துக்கள் சீனாவில் நடப்பது வழக்கமானது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

மீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடற்கரை பகுதியில் இம்மீனவர்கள் பயணம் செய்த கப்பல் தனது நங்கூரத்தை இழந்து விட்டது. மேலும், அவர்களின் படகின் எந்திரமும் வேலை செய்யவில்லை. மிகவும் ஆபத்தான கடல் பகுதியில் அவர்கள் தவித்தபடி இருந்தனர்.

இந்த மீனவர்களை மீட்க வங்கக்கடலில் ஒரு வாரமாக எந்த உதவியுமின்றி அவர்கள் சிக்கித் தவித்த சூழலில், இந்திய கப்பற்படை கேப்டன் ராதிகா மேனனின் உத்தரவின் பேரில் ஒரு எண்ணெய் டேங்கர் இவர்களின் மீட்பு உதவிக்கு வந்தது.

கடலில் சிறப்பான வீரதீரச் செயல் புரிந்த ராதிகா மேனனின் செயல்பாடுகளை அங்கீகரித்த சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐஎம்ஓ) விருது லண்டனில் கடந்த திங்கள்கிழமையன்று அவருக்கு அளிக்கப்பட்டது.

இந்திய வணிக கப்பலில் முதல் பெண் கேப்டன் ராதிகா என்பது மட்டுமல்ல, கடலில் சிக்கித் தவிப்பவர்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிவாக செயல்படுபவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்த விருதை வென்ற ஒரே பெண் இவர் தான்.

கடந்த ஜூன் மாதத்தில், மீனவர்கள் பயணம் செய்த சிறிய படகிலிருந்து அவர்களை மிகப் பெரிய டேங்கருக்கு ஏணி மூலமாக கொண்டுவர மூன்று முயற்சிகள் தேவைப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கைக்கு ராதிகா மேனன் தலைமையேற்றார்.

அப்போது கடலலைகள் 9 மீட்டர் உயரத்துக்கு எழும்பியது. காற்றின் வேகம் 60-70 கிலோ மீட்டர் அளவுக்கு இருந்தது.
முன்னதாக, ஒடிசாவில் கோபால்பூர் கடற்கரைக்கு 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் ஒரு மீன்பிடி படகை சம்பூர்ணா ஸ்ரவ்ராஜ்யா டேங்கரின் இரண்டாவது அதிகாரி கண்டுள்ளார்.

தங்கள் படகில் இருந்த உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை கடலலைகள் அடித்துச் சென்ற பிறகு, படகில் இருந்த ஐஸ் கட்டிகளைக் கொண்டே அவர்கள் உயிர் வாழ்ந்தனர்.

மீனவர்களை காப்பாற்றிய அனுபவம் குறித்து ராதிகா மேனன் தனது செவ்வியில் , ''அப்போது கடல் மிகவும் மிகவும் கொந்தளிப்பாக இருந்தது. பின்னர் கடலில் ஒரு தாழ்வழுத்தம் உண்டானது. அது இரண்டு அல்லது மூன்று நாட்கள் தேங்கியிருந்தது. பின்னர், அது ஒரு ஆழ் கடல் தாழ்வழுத்தமாக உருவானது'' என்று ராதிகா மேனன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், '' அது மிகவும் சவாலான பணியாக இருந்தது. ஆனால், நாங்கள் அதனை செய்தாக வேண்டும். நாங்கள் அச்செயலில் இறங்காவிட்டால் அந்த மீனவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பே இருக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்'' என்று நிலையை விவரித்தார்.

பெண் கப்பல் கேப்டன்களுக்கு முன்னோடியாக விளங்கும் ராதிகா மேனன், தனது சாதனைகளை மற்றும் தான் ஒரு வழிகாட்டியாக விளங்குவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தான் பணியாற்றும் கப்பல்களிலும், கப்பல் பணிகளிலும் பாலினம் என்பது முக்கியமானது அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

கப்பல் பணி இருபாலருக்கும் சம வாய்ப்புகளை தருகிறது. நீங்கள் பெண்ணாக இருந்தாலும் , உங்கள் பணியை செய்வது எப்படி என்ற புரிதல் இருந்தால் போதும். உங்களுடன் வேலை செய்பவர்கள் உங்களை பாராட்டுவர். உங்களுக்கு மதிப்பு, கிடைக்கும். உங்களுக்கு கீழே பணிபுரிபர்கள் உங்களின் உத்தரவை ஏற்று செயல்படுவார்கள்'' என்று நம்பிக்கையுடன் ராதிகா மேனன் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவம் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி

அமெரிக்க இராணுவத்தின் கண்ணிவெடி எதிர்ப்பு பயிற்சி அணியினர்,இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவுக்கு பயிற்சிகளை அளித்துவருகின்றனர்.

பூஓயாவில் உள்ள பொறியியல் படைப்பிரிவுத் தளத்தில், இலங்கை படையினருக்கு முன்னாயத்தமற்ற வெடிபொருட்களை கண்டுபிடித்து, அழிக்கும் பயிற்சிகளை அமெரிக்க இராணுவ நிபுணர்கள் அளித்துள்ளனர்.

முன்னாயத்தமற்ற வெடிபொருட்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சிநெறியாக இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வார காலப் பயிற்சி, கடந்த 20ஆம் நாள் நிறைவடைந்தது.

இதில் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த, 4 அதிகாரிகள் மற்றும் 65 படையினர் பங்கேற்றிருந்தனர்.

இவர்களுக்கு அமெரிக்காவின் ஆசிய பசுபிக் முன்னாயத்தமற்ற வெடிபொருள் முறியடிப்புக்கான புல்டன் நிலையத்தைச் சேர்ந்த 4 வெடிபொருள் நிபுணர்களும், ஒரு இலத்திரனியல் முறியடிப்பு நிபுணரும் பயிற்சிகளை அளித்தனர்.

ஐஈடி எனப்படும் முன்னாயத்தமற்ற வெடிபொருள்கள், அவற்றின் அச்சுறுத்தல்கள், முன்னாயத்தமற்ற வெடிபொருட்கள் பொருத்த ப்பட்டுள்ள பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுதல், நடைமுறைப் பயிற்சிகள், இலத்திரனியல் போர் முறை, புதிய கருவிகள் அறி முகம், வெடிபொருட்களை செயலிழக்கச் செய்தல், தடயவியல் சான்றுகள், வெடிப்புக்குப் பிந்திய ஆய்வு, சிறப்பு வெடிபொருட்கள் தொடர்பான பயிற்சி, வெடிபொருட்களை அகற்றுவதற்காக நுட்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தப் பயிற்சி அளிக்க ப்பட்டுள்ளது.

மஹிந்தவுக்கு எதிராக மஹிந்த சாட்சியம்

க‌டந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப் பகுதிக்குள் 60 கோடிக்கு “சில் ஆடைகள்” விநியோகித்ததாக குற்றம்சாட்டப்ப ட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சாட்சி அளித்தார்.;.

பௌத்த பக்தர்களுக்கான சில் ஆடை விநியோகிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றது. அதனை நிறுத்துமாறு 2014 நவம்பர் 21 ஆம் திகதி சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்தேன். அனுராதபுரத்தில் சில் ஆடையை நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டதை தான் நேரடியாக கண்டதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார அட்டை அந்த ஆடைக்குள் வைக்கப்ப ட்டிருந்தாகவும் மஹிந்த தேசப்பிரிய நீதிமன்றத்தில் நேற்று சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ராணுவ புரட்சி ஏற்படும் - மஹிந்த அணி மிரட்டல்

மைத்ரிபால சிறிசேன நேற்றையதினம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருந்த போது உரையாற்றிக்கொண்டிருந்த மஹிந்த தரப்பு உறுப்பினர் இராணுவ சதிப் புரட்சியொன்று ஏற்படுவதற்கான சாத்தி யக்கூறுகள் ஏற்படுமென எச்சரித்துள்ளார்.

அவருடைய இந்தக் கருத்தைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பிய துடன், எதிர்த்தரப்பிலிருந்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதிலுக்குக் குரல் எழுப்பியதால் சிறிது நேரம் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

மஹிந்த விசுவாசியான தினேஷ் குணவர்த்தன உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் குரல் எழுப்பி வந்தனர்.

பொது எதிரணியினராகிய தமது உரிமைகள் நாடாளுமன்றத்தில் மறுக்கப்படுவதாகவும், உரிய நேரம் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா, பண்டாரநாயக்கவை கொலை செய்தவர்கள் சுதந்திரக் கட்சியினர் எனக் கூறியதை சுட்டிக்காட்டிய தினேஸ் குணவர்தன, தமது உரிமைகள் தொடந்தும் மறு க்கப்படுமானால், இராணுவ சூழ்ச்சிக்கான அச்சுறுத்தலொன்றை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்ச ரித்ததுடன், இந்த நிலைமையை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சபையில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பார்த்து தினேஸ் குணவர்தன கூறியதால் கொதித்தெழுந்த ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினேஸ் குணவர்தனவிற்கு எதிராக கோச மிட்டனர்.

இதேவேளை, ஜனாதிபதி முன்னிலையில் இராணுவ சூழ்ச்சி ஏற்படப் போவதாகக் கூறுவது அவரை அகௌ ரவப்படுத்துவதாக அமைந்திருப்பதாக தினேஷ் குணவர்த்தனவின் பின்னர் உரையாற்றிய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

2015ஜனவரி8ஆம் திகதி இரவு இராணுவப் சூழ்ச்சியொன்று மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டி ருந்ததாகவும், அதில் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட பலர் தொடர்புபட்டிருந்தனர் என்றும் அவர் குற்ற ம்சாட்டினார்.

எனினும், இராணுவத்தினர் அதற்கு அடிபணியவில்லை என்று தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, இராணுவ த்தினர் ஒருபோதும் இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு இணங்கப்போவதில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்

தென் இந்தியா ராமெஸ்வரம் கடற்பகுதியில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் 11 பேரை சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று கடலுக்குச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என கரைக்கு திரும்பியுள்ளனர்.அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனு Breaking News : அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனுPolitics Powered by அப்போது படகுகளில் நுழைந்த சிங்கள கடற்படையினர் அதிலிருந்த மீனவர்களை தாக்கியோடு மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். மேலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்த அவர்கள், கரமலையான், வீரணன், ராஜகோபால், ஜோதி உள்ளிட்ட 11 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர்.

காங்கேசம் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இலங்கை கடற்படையின் தாக்குதலால் கொந்தளித்துள்ள சக மீனவர்கள் , வாழ்வாதாரத்தை காக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை

வேலூர்: நளினியின் சுயசரிதை அதற்குள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தனது சுயசரிதையில் நளினி என்ன சொல்லியுள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நளினியின் சுயசரிதை நிச்சயம் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. காரணம், அவரது கடந்த 25 ஆண்டு கால சிறை வாழ்க்கை. இத்தனை காலமாக சிறைக்குள்ளேயே அடைபட்டு தனது விடியலுக்குத் தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வரும் நளினி நிச்சயம் தனது மனக் குமுறல்களை இந்த நூலில் கொட்டியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னல்கள் இந்த நூலில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது தான் சந்தித்த பல்வேறு இன்னல்கள், கர்ப்பிணியாக சிறையில் பட்ட அவஸ்தைகளை அவர் விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்காவின் சந்திப்பு மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா காந்தி சந்திப்பு குறித்துத்தான் மிக முக்கிய எதிர்பார்ப்பு உள்ளது.

நூலின் பெயரிலும் கூட பிரியங்கா காந்தி பெயர் வருவதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நளினியை மிரட்டினாரா பிரியங்கா பிரியங்காவுடனான சந்திப்பு குறித்து அவர் விவரித்திருக்கலாம் என்று தெரிகிறது. வேலூர் சிறைக்கு வந்து நளினியைச் சந்தித்தபோது பிரியங்கா, நளினியை மிரட்டிச் சென்றதாக ஒரு பரபரப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். வழக்கறிஞர் பேட்டி நளினியின் சுயசரிதை குறித்து அவருடை வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினி ராஜீவ்காந்தி கொலை பின்னணியும், பிரியங்கா காந்தி சந்திப்பும் என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் எழுதி உள்ளார். 600 பக்கம் 600 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் வருகிற 24ம் தேதி சென்னை வடபழனியில் வெளியிடப்படுகிறது. இதில் நளினி கலந்து கொள்ள மாட்டார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் சினிமா இயக்குனர்கள், எழுத்தாளர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். பிறப்பு முதல் பிரியங்கா வரை... பிறந்து வளர்ந்தது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானது, போலீசாரால் விசாரிக்கப்பட்ட விதம், அவர் அனுபவித்த இன்னல்களை நளினி இந்த சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் வெளியானால் பெரிய மாற்றம் ஏற்படும் என்றார் புகழேந்தி.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…