Super User

Super User

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் உரை­யுடன் ஆரம்­ப­மா­கின்­றது.

எதிர்­வரும் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி ­வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து ஆரா­யப்­ப­ட­வு­டள்­ளது.

அத்­துடன் இலங்கை தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் இலங்கை தொடர்­பான பிரே­ரணை ஒன்றும் பிரிட்டன் உள்­ளிட்ட ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இன்று திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள முத­லா­வது அமர்வில் ஐக்­கிய நாடு­களின் பொதுச் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

மேலும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர எதிர்­வரும் 28 ஆம் திகதி ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­ற­வுள்ளார்.

இம்­முறை கூட்டத் தொடர் இலங்­கைக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக அமை­ய­வுள்­ளது. விசே­ட­மாக கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான ஜெனிவா பிரே­ர­ணையை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் எழுத்­து­மூல அறிக்­கையை எதிர்­வரும் 22 ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

அது­மட்­டு­மன்றி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களும் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களும் இலங்கை தொடர்­பாக உரை­யாற்­ற­வுள்­ளனர்.

எதிர்­வரும் இரண்டாம் திக­தியும் 15 ஆம் திக­தியும் ஐ.நா. விசேட நிபு­ணர்­களின் இலங்கை தொடர்­பான அறிக்­கைகள் குறித்த விவா­தமும் 23 ஆம் திகதி இலங்கை தொடர்­பான பிரே­ரணை குறித்த விவா­தங்­களும் நடை­பெ­ற­வுள்­ளன. மேலும் 22 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை மீதான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.

சிறு­பான்மை மக்­களின் விட­யங்­களை ஆராயும் ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடி­யாவின் இலங்கை தொடர்­பான அறிக்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பான விவாதம் எதிர்­வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இதன்­போது தனது இலங்கை தொடர்­பான அறிக்­கையின் சுருக்­கத்தை ஐ.நா. விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் மனித உரிமை பேர­வையில் முன்­மொ­ழிவார். தொடர்ந்து உறுப்பு நாடுகள் தமது நிலைப்­பா­டு­களை முன்­வைக்கும்.

சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்­வைத்த அறிக்கை தொடர்­பான விவாதம் எதிர்­வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த விவா­தத்­திலும் இலங்கை தொடர்­பாக சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்­வைத்த அறிக்­கையின் பரிந்­து­ரை­களை மேற்­கோள்­காட்டி உறுப்பு நாடுகள் உரை­யாற்­ற­வுள்­ளன.

இம்­முறை கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வினர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட உயர் மட்ட அதி­கா­ரிகள் இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­டு­கி­றது. ஜெனி­வா­வி­லுள்ள ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இலங்கை அலு­வ­ல­கத்தின் பிர­தி­நி­தி­களும் இலங்கை தூதுக்­கு­ழு­வுடன் இணைந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இம்­முறை இலங்­கையின் சார்பில் முன்­னேற்­றங்­களை வெ ளிப்­ப­டுத்த 18 மாத கால அக­வாசம் கோரப்­ப­ட­வுள்­ளது. அதா­வது பேர­வையில் நாளை உரை­யாற்­ற­வுள்ள அமைச்சர் மங்­கள சம­ர­வீர கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்கள் மற்றும் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்­துதல் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­துதல் உள்­ளிட்­டவை தொடர்பில் விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.

அத்­துடன் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் அவ­காசம் வேண்டும் என்றும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர கோரிக்கை விடுக்­க­வுள்ளார்.

இதே­வேளை 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் வகை­யி­லான பிரே­ரணை ஒன்று பிரிட்டன் உள்­ளிட்ட ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதா­வது இலங்­கைக்கு நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் நோக்­கி­லேயே இவ்­வாறு பிரே­ர­ணை­யொன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த பிரே­ரணை குறித்த வாக்­கெ­டுப்பு மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடை­பெறும். இலங்கை அதற்கு இணை அனு­ச­ரணை வழங்­கினால் ஒரு­வேளை வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டாமல் கடந்த 2015 ஆம் ஆண்டில் நடை­பெற்­றதைப் போன்று ஏக­ம­ன­தாக பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டலாம்.

மேலும் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை தொடர்­பான அறிக்­கை­யிலும் நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க இலங்­கைக்கு கால அவ­கா­சத்­தையும் பிரே­ரிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதனை அடி­யொட்­டி­ய­தா­கவே பிரிட்டன் கொண்­டு­வ­ர­வுள்ள பிரே­ரணை அமையும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. "

பல்­வேறு நாடுகள் பங்­கேற்பு

கூட்டத் தொடரில் பிரிட்டன், அவுஸ்­தி­ரே­லியா, சுவிடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர்­லாந்து, கனடா, பெல்­ஜியம் உள்­ளிட்ட நாடு­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ள நிலையில் அவர்கள் இலங்கை விக­வாரம் தொடர்­பிலும் பிரஸ்­தா­பிப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

டென்­மார்க்கின் வெளி­வி­வ­கார அமைச்சர் அன்டஸ் சாமுவேல் சென், நெதர்­லாந்தின் வெளி­வி­வ­கார அமைச்சர் பேர்ட் கொன்டஸ், கன­டாவின் வெளி­வி­வ­கார அமைச்சர் கிரிஸ்­டியா பீரிலன், பிரான்ஸின் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீன் மார்க், பிரிட்­டனின் உள்­ளிட்­டோரும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

சுவீ­டனின் வெளி­வி­வ­கார அமைச்சர் மாகட் வோல்ஸ்ட்ரோம், பொது­ந­ல­வாய அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் பற்றீசியா ஸ்கொட்லன்ட், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பீட்டர் மோரேர் ஆகியோரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஆரம்ப அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித கண்காணிப்பகம் என்பன இம்முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் பல யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணை பொறிமுறையை இந்த அமைப்புக்கள் முன்வைக்கும் என கூறப்படுகின்றது. எனினும் அரசாங்கம் கால அவகாசத்தையே கோரும் என கூறப்படுகின்றது.

சினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல் பலர் பலி

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் சமயான் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று திங்கள்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான பாதள உலக குழு தலைவர் என கூறப்படும் அருண உதயசாந்த என்ற விளக்கமறியல் கைதியை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனமொன்றில் வந்த குழுவொன்று இந்த துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌

ஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் பூதவுலுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று மாங்குளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் தனது 57 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது பூதவுடல் நேற்று மாலை முதல் இன்று காலை வரை யாழ்ப்பாணம் – ஓட்டுமடத்திலுள்ள மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இன்று மாங்குளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இன்றையதினம் மாங்குளத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று பின்னர் பூதவுடல் இன்று மாலை கிளிநொச்சி விவேகானந்தாநகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதுடன் நாளை செவ்வாய்க்கிழமை இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!

2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி.

பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாக, இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.

வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள், இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் ‘குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.

மூத்த மகன் மனோகரன், அடுத்த மகள் ஜெகதீஸ்வரி, இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாட, கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார்.

எல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும், அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல… கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு… பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்!
பார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் இராசம்மா. சிங்கள இனவாதக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த இராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை, சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் இராசம்மா சொல்ல… அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.

பத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார்.

வேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள இராணுவம் இப்போது இடித்து நொறுக்கியது. இந்த வீட்டுக்கு இவர்கள் குடிவந்தபோது, ஏதும் அறியாத சிறுவன்தான் பிரபாகரன்.
ஆனால், 14 வயதில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை முதலில் கண்டுபிடித்தது பார்வதியே. சிறுசிறு போத்தல்களை எடுத்து வருவதும், பால்பேணிகளைக் கொண்டுவந்து காயவைப்பதும், பின்னர் அதை எடுத்துச் செல்வதையும் பார்வதி பார்த்தார்.
சின்னச்சோதி, நடேசுதாசன் ஆகிய நண்பர்கள் வந்து போவதும், பிரபாகரனைவிட மூத்த குட்டிமணியின் நட்பும் அன்னையை யோசிக்க வைத்தது. மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல் போயிருந்தது. மகனின் போக்கு பற்றி மெதுவாகச் சொன்னார் பார்வதி.
”நாலு மொட்டையர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று வேலுப்பிள்ளை கேட்டார். ”நாலு மொட்டை நாளைக்கு நாற்பது மொட்டை ஆகும். அது நானூறு மொட்டை ஆகும்” என்று சொல்லிவிட்டுப் போன பிரபாகரனை இருவரும் அவரது வழியில் விட்டுவிட்டார்கள்.

அதன் பிறகு வந்த பொலிஸ் நெருக்கடிகள் அனைத்தையும் மனதார ஏற்றுக்கொண்டார் பார்வதி. 1975-ல் தொடங்கி 2010 வரை ஒரு நிமிடம்கூட மனதால் வருந்தியிருக்கவே மாட்டார். மாறாக, பெருமையாகக் கழித்தார். 2000-ம் ஆண்டில் பார்வதியின் கால்கள் பாரிசவாதம் காரணமாக நகர மறுத்தன.
இலங்கையிலும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கியதால் மகனுடன் இருக்கவே நினைத்தார் பார்வதி. 2003-ல் தாயகம் வந்தார்கள் இருவரும். சில வருடங்களில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சி வலையில் சின்னஞ்சிறு தமிழர் தேசம் சிக்கிக்கொண்டது.

மக்களைப் பிரியா மன்னவனும்… மன்னனைப் பிரியா அன்னை அவளும் இருக்க… சொற்களால் சொல்ல முடியாத சோகம் அது!
புலியை வளர்த்த குயில் பறந்துவிட்டது. குயில் பாட்டும் புலிச் சீற்றமும் கேட்டுக்கொண்டே இருக்கும்!

கேணல் ரூபன்,லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் 8ஆம் ஆண்டு வீர வணக்க நாள்

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 8ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வந்தமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர்கள் வான் புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன்.அவர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “நீலப்புலிகள்” என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்களது வரலாறு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்க்கும்.

பகை வாழும் குகை தேடி – வான்
கருவேங்கை பாய்ந்தது..
காற்றோடு வந்த சேதி உலக
மெங்கும் புது வரலாறெழுதியது..
நமனை அஞ்சிடா வீரம் வெல்ல
தலைவன் அணியின் வீரர் போயினர்..
விண்ணைச்சாடிக் காற்றில் கலந்த
ரூபன் அண்ணா சிரித்திரன் அண்ணா..
உங்கள் தாகம் வெல்லும் நாளில்
எங்கள் தேசம் விடியும் விடியும்!!

கேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையாக்கப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 27 நாட்களாக வீதியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் 27ஆவது நாளான இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கேப்பாபுலவு மக்களின் போராட்டக்களத்துக்கு வருகைதந்து தமது ஆதரவினை வெளியிட்டிருந்ததோடு மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவி பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் மற்றும் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ உள்ளிட்ட அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பிரதேங்களை சேர்ந்த சிங்கள தமிழ் முஸ்லீம் ஆசிரியர்கள் இன்று கேப்பாபுலவுக்கு வருகைதந்திருந்தனர்.

அத்தோடு இன்று கேப்பாபுலவு போராட்டக்களத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளையும் விசேட உளவள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கத்தில் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் கேப்பாபுலவு மக்களின் நியாயமான தமது சொந்த நிலங்களில் வாழ வேண்டும் என்ற கோரிக்கை தீர்த்து வைக்கப்படவேண்டியது.
இதுவரை நாள் இந்த மக்கள் வீதியில் கிடந்தது படும் அவலத்தை கண்டு கொள்ளாத நல்லாட்சி என சொல்லும் அரசு இவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இவர்கள் தமது சொந்த நிலங்களில் வாழ வழி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

புரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார்

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.

தொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.

எண்பதுகளின் இறுதியில் "இந்த மண் எங்களின் சொந்த மண்" என்ற பாடலில் ஆரம்பித்து "களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்....", "ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..", "கரும்புலிகள் என நாங்கள்...", "எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்" முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் "பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்" முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.

போராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.

கடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

போர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில்,வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலை வர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நேற்று புதிய நீதிமன்றத் தொகுதியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உரையாற்றியபோதே ஜனாதி பதி இவ்வாறு குறிப்பிட்டார்.

“வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க முடியாது என்ற தகவலை ஐ.நா பொதுச்செயலர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன்.

நாட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு வரையறைகளின்படி, எந்தவொரு வழக்கிலும் வெளிநாட்டு நீதிபதிகளை எமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது.

அவ்வாறு நாம், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதானால், நாட்டின் சட்டங்களையும், அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும்.

இலங்கையில் உள்ள நீதிபதிகள், கல்வி, மதிநுட்பம், ஆற்றல், அனுபவம் ஆகியவற்றில், உலகின் வேறெந்த நீதிபதிகளையும் விட இர ண்டாம் தரமானவர்கள் அல்ல. அவர்கள் எந்த உள்நாட்டு மற்றும் அனைத்துலக விவகாரங்களையும் கையாளக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

எனவே இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் சேவையை பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா?

சசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு "சிறை" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.

இதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.

எம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.

இன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வணிகம் என்ற போர்வையில் தென்கிழக்கு ஆசியாவை ஆட்டிப்படைக்கும் சீனாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவை ஆத்திரமூட்டியுள்ளது. இதுபற்றி இந்தியாவை எச்சரித்துள்ளது அமெரிக்கா.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கையில் சீனா தமது இராணுவ மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் சீனாவின் கடற்சார் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதை இந்தியாவிற்கு எச்சரிக்கும் வகையிலான கடிதம் ஒன்றை அமெரிக்காவின் வெளியுறவு துறை நிபுணரும், ஆசிய பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் தலைவருமான ஜெப். எம். ஸ்மித் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில், இலங்கையின் பெரும்பான்மையான துறைமுகங்களுக்கு உரித்துடையவர்களாக சீனா இருப்பதோடு, தென் சீன கடலை ஆக்கிரமித்ததை போன்று தற்போது இந்திய பெருங்கடலையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை சீனா தொடங்கியுள்ளமையை, குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது தெற்காசிய வர்த்தக நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு சவால்களை ஏற்படுத்தும. இதேவேளை இந்திய எல்லை பகுதியில் இலங்கையை காரணமாக வைத்து அடிக்கடி சீனாவின் நீர்முழ்கி கப்பல்கள் இலங்கையில் நிறுத்தப்படுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு சவாலை ஏற்படுத்தும்.

இலங்கையிற்கு 75 சதவீதமான கடல் போக்குவரத்தை மேற்கொள்வது இந்தியாவே ஆகம். இந்நிலையில் சீனாவின் கடற் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்வது பாதுகாப்பான விடயமல்ல.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு துறைமுகத்தில் வெளிநாட்டு பாதுகாப்பு தரப்புகள் நடவடிக்கைகள் எதுவும் நடக்குமென்றால், அயல் நாடுகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கவேண்டுமென கூறிய சில வாரங்களிலேயே சீனாவின் நீர்முழ்கி கப்பலொன்று இலங்கையில் நிறுத்தப்பட்டது. எனவே இது தொடர்பில் இந்தியா மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு இலங்கையே காரணமாக இருக்கின்றது என்பதே இக்கடிதத்தின் மூலம் தெரியவருதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கடிதத்தால் இலங்கை இந்திய உறவில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு வித்திட்டு விடுமா என சர்வதேச ஊடகங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…