Super User

Super User

ஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி

பப்புவா நியூகினியா மற்றும் னவுறு தீவுகளில் இருக்கும் ஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதனை அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி உறுதிசெய்துள்ளார்.

இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்று அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபாமாவின் நிர்வாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அகதிகளுக்கான திட்டத்தில் பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்க தீர்மானித்தது.

இந்நிலையில் தற்போது டொனால்ட் டரம்ப இதனை ஏற்றுக்கொள்வாறா? என்ற கேள்வியெழுந்திருந்த நிலையில், குறித்த திட்டம் அமுல்படுத்தப்படும் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

நிலாவை கடந்து சென்றது பறக்கும் தட்டுக்களா?

கடந்த 12 ஆம் திகதி மிகப்பஎரிய நிலாவினைக் காண [சுப்பர் மூனை ] வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தென்பட்டுள்ளன.

இதன் போது குறுகிய இடைவெளியில் இரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் கடந்து செல்வதை குறித்த காணொளியில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி சனிக்கிழமை இரவு சுப்பர் மூனை விசேட தொலைநோக்கி பொருத்தப்பட்ட கமரா மூலம் அரிசோனாவில் படமாக்கும் போது குறித்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்

யாழில் இதுவரை ஆவா குழுவைச் செர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆவா குழுவில் 62 பேர் உள்ளடங்குவதாக சட்டம், ஒழுங்கு அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர் என்றும் சிங்கள அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
இருப்பினும்,தற்போது 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த அமைச்சரான சாகல ரத்நாய க்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா குழுவுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்?

அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விவேகா னந்தநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த விவேகானந்தனூர் சதீஸ் என அழைக்கப்படும் செல்லையா சதீஸ்கு மார் எழுதிய விடியலைத்தேடும் இரவுகள் கவிதை நூல் வெளியீட்டுவிழா நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் மாணிக்கம் ஜெகன் தலைமையில் நடைபெற்றுறது.

இதில் பங்குபற்றிய சுமந்திரன் எம்.பி. அரச உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் தூசித்த மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதிக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் தொடர்ந்தும் உண்மையாகச் செயற்பட வேண்டுமாயின், இவ்வாறான சம்பவங்களை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டு க்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி கெட்ட வார்த்தைகளால் தமிழ் அரச உத்தி யோக த்தரை திட்டித்தீர்த்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தரை துரத்தி அடித்து, செயற்பட்டமை காணொளிகள் மூலம் வெளியாகியுள்ளதாகவும் இது பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்றும் குறிப்பிட்டு ள்ளார்.

குறித்த பௌத்த பிக்குவுக்கு எதிராக அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றும் எம்.ஏ. சுமந்திரன், வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவில் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென யாராவது கூறுவார்களாயின், மங்களராமய விகாராதிபதியின் காணொளியை காண்பித்து, அதனை கேள்விக்கு உட்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


இவ்வாறான பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளுக்காகவா பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டு ம் என்று தான் கேட்கவுள்ளதாகவும் பேச வேண்டிய இடங்களில் சரியானதை பேசுவோம் என்றும் ஒத்து ழைக்க வேண்டிய இடங்களிலேயே சேர்ந்து ஒத்துழைப்போம் என்றும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்து ள்ளார்.

பணம் மாற்றுவோர்க்கு அழியாத மை

வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களிலும் அதிக நபர்கள் வரிசையில் காத்திருக்க முக்கிய காரணம் பணம் மாற்றஒரே நபர்கள் மீண்டும், மீண்டும் வெவ்வேறு வங்கிகளுக்கும்,ஏ.டி.எம்களுக்கும் சென்று வருவது தான்'' என்று கூறினார்.

சிலர் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை மாற்ற முயற்சி எடுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த சக்திகாந்த தாஸ், இப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், இனி வங்கிகளின் கவுண்டர்களில் பணம் மாற்ற வருபவர்களின் கைவிரலில் அழியாத மை வைக்கப்படும். இந்த மை வைக்கும் திட்டம், இன்று முதல் பெரிய நகரங்களில் துவங்கப்படுகிறது. என்று தெரிவித்துள்ளார்.

போதுமான ரூபாய் நோட்டுகள் வங்கிகளின் கையிருப்பில் இருப்பதாகவும், நாளுக்கு நாள் இது மேம்பட்டு வருவதால் மக்கள் பயப்படத் தேவையில்லை எனவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், சில நிதி நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்கள் உண்மையல்ல என்றும் சமூகவலைத்தளங்களில் இது தொடர்பாக வெளிவந்த படங்கள் 2015-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்று கூறிய சக்திகாந்த தாஸ், இதனை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

கனவை சாட்சியாக வைத்து 28 ஆண்டுகள் தண்டனையா?

சட்டம் பல குற்றமற்றவர்களை தண்டித்தாலும் ஒரு குற்றவாளியும் தப்பிக்க கூடாது என்பதில் கவனமாக உள்ளது, ஆனால் அமெரிக்க நீதிபதிகள் குற்றவாளியையும் தப்பிக்கவிட்டு குற்றம் செய்யாதவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது. ஒரு சிலவ ஆண்டுகள் அல்ல 28 ஆண்டுகள் குற்றம் செய்யாது சிறையில் இருந்துள்ளார்.

அதுவும் எப்படி நீதிபதிகள் குறித்த நபர் குற்றம் செய்துள்ளார் என கண்டு பிடித்தமை வேடிக்கையானது.

தன்னை பாலியல் வல்லுறவு செய்த நபரை தனது கனவில் அடையாளம் கண்டதாக ஒரு பெண் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபருக்கு 28 ஆண்டுகள் நீதிபதிகள் தண்டனை கொடுத்துள்ளனர். தற்போது கிளாரென்ஸ் மோசஸ்-இ.எல்எ னப்படும் அந்த நபரை அமெரிக்காவின் கொலராடோ மாநில ஜுரிகள் விடுதலை செய்துள்ளனர்.

தான் தவறாக அடையாளம் காணப்பட்டதாக கிளாரென்ஸ் மோசஸ்-இ.எல் என்றழைக்கப்படும் இந்நபர் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.
தான் தவறு செய்யவில்லை என்று மோசஸ் செய்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், மற்றொரு கைதி எழுதிய கடிதத்தில் அப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்தது தானே என்று தெரிவித்துள்ளார்.

கிளாரென்ஸ் மீது வழங்கப்பட்ட தண்டனையை ஒரு நீதிபதி தள்ளுபடி செய்து அவரை விடுதலை செய்தாலும், பொது மக்களின் கண்டனங்களையம் மீறி டென்வர் மாவட்ட வழக்கறிஞர் மீண்டும்
இந்த வழக்கு விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளார்.

காலத்தால் அழியாத காதல் பிரித்தானிய ஜோடி ஒன்று

பிரித்தானிய காதல் ஜோடி ஒன்று தமது எண்பதாவது வயதில் இணைந்துள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது 82 வயதாகும் டாவி மோவாகெஸூக்கும் 86 வயதான டெர்பிஷீருக்கும் 1951 ஆம் ஆண்டு திருமணம் நடக்காமல் போயிற்று.

அன்ரெவின் மகள் டெபியே வில்லியம்ஸ், மோவாக்கெஸை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்றிணைத்து வைக்கப்பட்ட இந்த ஜோடி "தீவிர காதலில்" திழைத்திருக்கிறது.
அவர் ஓவிய கலைஞராக இருந்ததால் மணமகளின் தாய் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால், அந்த ஜோடி தொடக்கத்தில் பிரிய வேண்டியதாயிற்று.

மோவாகெஸ் ஓவிய கலைஞராக இருந்தது, ஹெலன் அன்ரேவை விட்டு அவர் பிரிய காரணமாயிற்று
"1950-களில் ஓவிய கலைஞராக ஒரு மருமகன் இருப்பது மதிக்கப்படும் எதிர்கால தொழிலாக கருதப்படவில்லை" என்று டெபியே வில்லியம்ஸ் கூறியிருக்கிறார்.

"அந்நாட்களில் பெற்றோர் சொல்வதை போல நடந்து கொண்டதால், இந்த இணை மனமுடைந்து போனது".
தன்னுடைய தாய் மூன்றாவது முறையாக விதவை ஆனபோது, மோவாகெஸை தேடிக் கண்டுபிடிக்க தீர்மானித்ததாக டெபியே வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

"அவர்கள் பேசத் தொடங்கினர். உறவை புதுப்பித்து கொண்டனர். தீவிர காதலில் விழுந்தனர். அவர்களை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்று அவர் தெரிவிக்கிறார்.

ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த காதல் ஒருபோதும் குறையவில்லை என்று இந்த ஜோடி தெரிவித்திருக்கிறது
இந்த ஜோடிகள் அவர்களுக்கு இடையே 5 துணைவர்கள் வந்து போய் வாழ நேரிட்ட பிறகு, வெள்ளிக்கிழமை மதியம் ரிபிலெ பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்திருக்கின்றனர் என்று டெபியே வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் காதலிப்பது போல நீங்களும் யாரையாவது காதலித்தால், அது பயனில்லாமல் போகாது" என்று மோவாகெஸ் கூறியிருக்கிறார்.

"நான் அவரை வாழ்நாள் முழுவதும் காதலித்திருக்கிறேன். இப்போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். இறுதியில் நாங்கள் ஒன்றாகியிருக்கிறோம்" என்று மோவாகெஸின் புதிய திருமதி தெரிவித்திருக்கிறார்,

நான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை இரவு அறிக்கை ஒன்றை விட்டுள்ளார், இந்த அறிக்கையில் அனைவரது பிரார்த்தனைகளால் தான் மறுபிறவி எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெகு விரைவில் முழு உடல் நலன் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

வரும் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

அதேபோல், தனது கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில், தொண்டர்கள் அனைவரும் அதிமுக வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவரது உடல்நிலை தேறிவிட்டதாக அப்போலோ மருத்துமவனை தலைவர் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே, அவரது உடல் நிலை குறித்த தெளிவு இல்லாத நிலையில், இந்த அறிக்கை வந்திருக்கிறது.

நியூசிலாந்தில் பாரிய பூகம்பமும் சுனாமியும் பலர் பலி

நியுஸிலாந்தின் தெற்கு தீவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கி உள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது. அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் 7.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, இரு மணி நேரங்கள் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியது.
கடுமையான நில நடுக்கத்தை அடுத்து இரண்டு பேர் உயிரிழந்தனர். கூடுதல் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று பிரதமர் ஜான் கே தெரிவித்துள்ளார்.


தலைநகர் வெலிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலோரப் பகுதியான கைகெளரா, உள்நாட்டுப் பகுதிய கல்வெர்டன் போன்ற பகுதிகளில் இருந்து உரிய தகவல் தொடர்புகள் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். கைகெளரா பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முதல் அலைகள் பெரியதாக இருக்க வாய்ப்பில்லை என்றும், பல மணி நேரங்களுக்கு சுனாமி தாக்கம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு அப்பால் செல்லுமாறும் அல்லது உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் 7.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிறைஸ்ட்சர்ச்சில் 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 185 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நகரின் மையப்பகுதி அழிந்து போனது.

அதன் பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
பசிபிக் வலயத்தைச் சுற்றி நிகழும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புக்களின் நேரடி தாக்குதல் மையத்தில் நியுஸிலாந்து இருப்பதால் எப்போதும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு

பாகிஸ்தானில் வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடித்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு கூறியுள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் லஸ்பெல்லா மாவட்டத்தில் தர்கா ஷா நூரணி என்ற பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலம் உள்ளது. இங்கு தினமும் மாலை நேரத்தில் ‘தாமல்’ என்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நேற்று மாலை வழக்கம் போல நடன நிகழ்ச்சி நடந்தது. இதனை பார்ப்பதற்காக பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் வந்து இருந்தனர். அப்போது திடீரென பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 30 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.

100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கராச்சி மற்றும் அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து ஆம்புலன்ஸ்களில் காயம் அடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்ட போதும், வைத்தியசாலையில்; சிகிச்சை பலனின்றியும் சிலர் உயிரிழந்தனர். இதனையடுத்து இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது.

மாகாண உள்துறை மந்திரி சர்ப்ராஸ் புக்தி பேசுகையில், “குண்டு வெடிப்பில் 52 பேர் பலியாகினர், 105 பேர் காயம் அடைந்து உள்ளனர்,” என்றார்.

குண்டு வெடிப்பு நடந்த இடம் மலைப்பகுதியானது. இங்கிருந்து மூன்று மணிநேர பயணத்தை அடுத்தே கராச்சியை அடைய முடியும். மிகவும் பின் தங்கிய பகுதியான அங்கு எந்தஒரு மருத்துவ வசியும், அடிப்படை வசதியும் கிடையாது. இதுவும் உயிரிழப்பு அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. குண்டு வெடிப்புக்கு எந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. உயிரிழந்தவர்களில் அதிமானோர் சிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…