தற்போதைய உத்திகளை நிறுத்தினால் உலகம் பேரிடரை சந்திக்கும்
அவசரப்பட்டு சமூக இடைவெளி உத்தியையோ அல்லது ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தினால், உலகம் மீண்டும் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார தாக்கம் இருக்கும் என்றாலும், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து நிதானமாக செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றாலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய டெட்ரோஸ், சில ஐரோப்பிய நாடுகளில் இந்த பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவது நல்ல அறிகுறியாக இருப்பதாக குறிப்பிட்டார்.
ஆனால், அவசரப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கினால், பாதிப்பு எண்ணிக்கை மிக மோசமாக அதிகரிக்கும் என்று டெட்ரோஸ் எச்சரித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது எவ்வளவு ஆபத்தானதோ, அதே ஆபத்து இத்தொற்று குறையும்போதும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து ஒவ்வொரு அரசாங்கத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் தனித்திட்டம் இடும் என்று தெரிகிறது.