Super User

Super User

பெண்ணை ஆணாக மாற்றி மும்பை மருத்துவர்கள் சாதனை

மும்பை: குரோமோசோம்களின் குளறுபடியால் பாலியல் மாற்றத்திற்கு உள்ளாகும் ஆண்-பெண்கள் பிறப்புறுப்பை மாற்றிக்கொள்ள விடிவுகாலம் பிறந்துள்ளது. பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதை உலகின் பல நாடுகள் அங்கீகரித்துள்ள போதிலும், இது ஒரு ஆபத்தான அறுவை சிகிச்சையாகவே கருதுகிறது மருத்துவ உலகம்.

இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த 21 வயது இளம் பெண், தன்னை ஆணாக கருதி வாழ்ந்து வந்தார். இதனால் மூன்றாம் பாலினத்தவராக அவரை கருதிய குடும்பத்தாரும், சமூகமும் ஒதுக்கி தள்ளியது. கோபமடைந்த அந்த பெண், தன்னை முழுமையான ஆணாக மாற்றிக்கொள்ள விரும்பினார். அவரின் இந்த ஆசைக்கு ஒப்புக்கொண்ட அவரின் தாயும், மருத்துவ சிகிச்சைக்கு பச்சைக்கொடி காட்டினார். முதல்கட்டமாக, கடந்த ஜனவரியில் அந்த பெண்ணின் மார்பகங்கள் இரண்டும் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன.

பின்னர், மற்றொரு ஆபரேஷன் மூலம் கருப்பாதையும், கர்ப்பபையும் நீக்கப்பட்டன. அடுத்தகட்டமாக, ஆண்மை ஹார்மோனை தூண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. நிறைவாக ஆணுறுப்பை அமைப்பதற்கான ஆபத்தான, அதிநவீன அறுவை சிகிச்சையும் அப்பெண்ணிடம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

அவரது முழங்கையின் ஒருபகுதியில் இருந்து சதை வெட்டி எடுக்கப்பட்டு, ஆணுறுப்புடன்,சிறுநீர் பாதையும் வடிவமைக்கப்பட்டு, அடிவயிற்றில் பொருத்தப்பட்டது. பின்னர், அதே முழங்கை பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த அணுக்கள் அந்த உறுப்புக்குள் செலுத்தப்பட்டது.

இதன்மூலம் இந்த பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முழுஅளவில் வெற்றி பெற்றுள்ளது. மிகவும் சிக்கலான இந்த சிகிச்சை மும்பையில் உள்ள 'ஃபோர்டிஸ் எஸ்.எல். ரஹேஜா' மருத்துவமனையின், மாற்றுறுப்பு மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டாக்டர் பராக் டெலாங் இந்த குழுவின் தலைமை வகித்தார். சிகிச்சையின் இறுதிகட்டமாக ஆணுறுப்பின் எழுச்சிக்கு தேவையான 'செயற்கை பம்ப்' ஒன்று இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அவரது உடலில் பொருத்தப்படவுள்ளது. அதன்பிறகு பெண்களை பார்த்து இயல்பான எழுச்சியை ஆணுறுப்பு பெற வாய்ப்புள்ளது.

மஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை

கடந்தவாரம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய சீனத் தூதுவர், யி ஷியாங்லியாங், முன்னைய ஆட்சிக்காலத்தில் அதிக வட்டிக்கு சீனா கடன் வழங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார்.

2 வீத வட்டிக்கே கடன் வழங்கப்பட்டதாகவும்,நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதுதொடர்பான தவறான தகவல்களை தெரி வித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.அதிக வட்டிக்கு கடன் வழங்கப்பட்டது என்றால், எதற்காக மீண்டும் சீனாவிடம் நிதி உதவி கேட்கிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.அவரது இந்தக் கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சீனத் தூதுவரின் கருத்துக்களுக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மறுப்பு வெளியிட்டுள்ளார். எனினும், வெளிநாட்டு தூதுவர் ஒருவர் வெளியிட்ட கருத்து என்ற வகையில் வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை கவனத்தில் கொண்டுள்ளது.

புதுடெல்லி சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடு திரும்பியதும், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.சீனத் தூதுவர் வெளியிட்ட கருத்து தொடர்பாக அரசாங்கத்தின் ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட, சீனத் தூதுவருக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பாணை அனுப்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சீனத் தூதுவரின் கருத்துக்கள் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள நிதிய மைச்சர் ரவி கருணாநாயக்க, சீனத் தூதுவரின் கருத்துக்களை நட்பு நாடு ஒன்றின் தூதுவர் வெளியிட்ட கருத்துக்கள் என்று கற்ப னை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. அவர் கூறியதில் எந்த அடிப்படையும் இல்லை. நாங்கள் ஒரு இறைமையுள்ள நாடு. அவ்வாறே நடத்தப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

பீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்

மஹிந்தவின் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ்ஸின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

டொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு

அமெரிக்க அதிபர் தேர்வுக்கான வேட்பளாரான டொனால்ட் ட்ரும்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தினருக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது

கூட்டத்தினருக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டவுடன் அங்கிருந்து உடனே வெளியேற்றப்பட்டார் ட்ரம்ப்; எனினும் சிறிது நேரம் கழித்து தனது உரையை முடிப்பதற்காக திரும்ப வந்தார் ட்ரம்ப்.

தேர்தல் பிரசாரத்தில், நெவாடாவில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட பாதுகாப்பு சர்ச்சைக்கு பிறகு தனது ரகசிய சேவை பாதுகாவலர்களால் மேடையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்.

போலிஸாரால் இது குறித்து ஒருவர் சிறிது நேரம் கைது செய்யப்பட்டார்; ஆனால் அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை.
முன்னதாக ஹிலரி மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவருமே அமெரிக்க தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய ஊசலாடும் மாநிலங்கள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான ஃப்ளோரிடாவில் பேரணி நடத்தினர்.
ஃப்ளோரிடா மற்றும் நெவாடாவில் முன்னதாக நடக்கும் வாக்குப்பதிவில், பெரும் எண்ணிக்கையில் ஹிஸ்பானிய மக்கள் வாக்களிப்பது, ஹிலரிக்கு சாதமாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

குடியரசுக் கட்சியினர் கடந்த நாற்பது ஆண்டுகளாக வெற்றிப்பெற இயலாத மாநிலமான மற்றும் ஜனநாயகக் கட்சியின் வலுவான மின்னெசோட்டாவிற்கு விஜயம் மேற்கொள்ளப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் பாரிய மரக்கடத்தல்

கிளிநொச்சி – கல்மடு காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட பாலை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்மடு காட்டுப்பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட சுமார் 50,000 மேற்பட்ட பாலை மரக்குற்றிகளே இவ்வாறு மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தல் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்மடுநகர் பகுதியல் உள்ள விமானப்படை அதிகாரிகளால் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி முல்லைத் தீவிற்கான பிரதிப்பொலிஸ்மா அதிபரின் விசேட குழுவினர் குறித்த மரக்குற்றிகளை மீட்டுள்ளனர்.

இதன்போது கல்மடு காட்டுப்பகுதியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட பாலை மரங்களே இவ்வாறு சட்டவிரோமான முறையில் தறிக்கப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், மேலும் ஒரு தொகுதி பாலை மரங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குறித்த குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற குழுவினர் மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் சம்பவ இடத்தில் இருந்த 7 பேரைக் கைதுசெய்ததுடன், மரங்களை வெட்டுவதற்கு அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியதுடன் ஏற்றிச் செல்வதற்குத் தயாராக இருந்த ஒரு வாகனமும் மீட்கப்பட்டுள்ளது

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை கிளிநொச்சியில் சட்டவிரோத மரம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் கடந்த 3 ஆம் திகதி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபா் வெலிகன்னவின் உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, உதவி பொலிஸ் அத்தியட்சகர் றொசான் ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சி – அக்கராயன் காட்டுப்பகுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில், சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பதினாறு முதிரை மரக்குற்றிகளை கிளிநொச்சி நகர்பகுதிக்கு கொண்டுசெல்வதற்கு உடந்தையாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேவேளை குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சட்டவிரோதமாக மரங்களை வெட்டி கடத்தியவா்கள் கைதுசெய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் அக்கராயன், முட்கொம்பன் காட்டுப் பகுதிகளில் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் பொலிஸாரும் இதற்கு உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பரிஸ் பருவனிலை ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்றது

பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பாக கையெழுத்தான உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

தொழிற் புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக இரண்டு டிகிரி உலக வெப்பமயமாதலைக் குறைப்பதை இது இலக்காகக் கொண்டிருக்கிறது.

பலத்த புயல்கள், வறட்சிகள் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்தல் உள்பட ஆபத்தான பருவநிலை மாற்றங்களை தவிர்ப்பதற்கு இந்த இலக்கு முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தொழிற் புரட்சி மேற்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பை விட பூமியில் ஏற்கெனவே ஒரு டிகிரி வெப்பம் இப்போது அதிகரித்திருக்கிறது.

எரியாற்றல் உற்பத்தி, போக்குவரத்து, விவசாயம், குடியேற்றம் ஆகியவற்றிற்காக காடுகளை அழிப்பதால் மனிதர்கள் வெளியேற்றக்கூடிய பசுங்குடில் வாயுக்களால் முக்கியமாக பூமியின் வெப்பம் அதிகரிப்பதாக பருவநிலை அறிவியல் குற்றம் சாட்டுகிறது.

இந்த வாயுக்கள், குறிப்பாக கார்பன் டைஆக்ஸைடு வளி மண்டலத்தில் செறிவாகி, சூரியனிடம் இருந்த வருகின்ற வெப்பத்தை பூமியில் தங்கிவிட செய்கிறது.
இவ்வாறு உலகம் வெப்பமடைவதுதான் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

அதனால், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோள் பூமியின் வெப்பத்தை 2 டிகிரி குறைப்பதாக நாம் கூறுகின்றபோது, இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் நாடுகள் தங்களுடைய கார்பன் வெளியேற்றத்தை கடுமையாக குறைக்க வேண்டியிருப்பதை குறிக்கிறது.
மாசு வெளியேற்றம் குறைவான எரிபொருள் ஆதாரங்களுக்கு மாறுவது செலவு குறைவானது, நீண்டகாலம் நிலைத்திருப்பது என்று நிபுணர்கள் நம்பினாலும், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பது பொருளாதாரத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.


இந்த ஒப்பந்தம் "அமலுக்கு வருவது" எதைக் குறிக்கிறது?
இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருவது என்பது, இது சர்வதேச சட்டமாவதை குறிக்கிறது என்று ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள், தாங்கள் அளித்திருக்கும் உறுதிமொழியை நிறைவேற்ற கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு செயல்படத் தொடங்க வேண்டும்.
90-க்கு மேற்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு இசைவு தெரிவித்திருக்கின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மாநாட்டில், ஐநாவின் 197 உறுப்பு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஆனால், இந்த ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாமல் இருப்பதால், ஒவ்வொரு நாடுகளின் தன்னார்வ அர்ப்பணத்தையும் செல்பாடுகளையும் சார்ந்துதான் இது அமைகிறது.

நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை, நிகழ்வுகள் அளவிடப்பட்டு மீளாய்வு செய்யப்படும் என்று 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்த ஐக்கிய நாடுகள் அவையின் பருவநிலை மாநாட்டின் தலைமை செயலகம் கூறியிருக்கிறது.
ஆனால், அது எவ்வளவு சரியாக செய்யப்படும் என்பதற்கு விடையில்லை.

அடுத்தவாரம் மொராக்கோவில் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் பற்றிய கூட்டத்தில் ஒரு விதிமுறை புத்தகத்தை எழுதுவது பற்றி கலந்துரையாட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

"2018 ஆம் ஆண்டுக்கு முன்னதாக, இன்னும் சில ஆண்டுகளில், அரசுகளும் கட்சிகளும் இந்த விவரங்கள் அடங்கிய சட்ட புத்தகத்தை முடித்திருக்கும்..." என்று ஐக்கிய நாடுகள் அவையின் செயல் அதிகாரி பேட்ரீசியா எஸ்பினோசாவும், வரவிருக்கும் பருவநிலை மாற்றம் பற்றி கூட்டத்தை நடத்துகின்ற மொராக்கோவின் வெளியுறவு அமைச்சருமான சாலஹெதீன் மிஸௌயரும் கூட்டாக வழங்கிய அறிக்கை தெரிவிக்கிறது.

"இந்த முயற்சியில் ஈடுபடுகின்ற ஒவ்வொருவரும் அவர்களுடைய திறனுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்துவதன் மூலம் பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளை எல்லா தரப்பினரும் அதிகரிக்க தேவையான வெளிப்படை தன்மை உறுதிப்படுத்தப்படும்.

இதன் முக்கியத்துவம் என்ன?
மிக விரைவாக நடைமுறைக்கு வந்திருக்கும் முக்கிய சர்வதேச ஒப்பந்தங்களில் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தமும் அடங்குகிறது.

தொடக்கத்தில் இது, 2020 ஆம் ஆண்டு நடைமுறையாவதாக இருந்தது. அந்த நேரத்தில் கூட பல நாடுகள் இதனை ஏற்றுகொள்ளாது என்று பலரும் நம்பினர்.

இந்த ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வருவதற்கு உலகின் ஒட்டுமொத்த பசுங்குடில் வாயுக்களில் குறைந்தது 55 சதவீதத்தை வெளியேற்றுகின்ற 55 நாடுகள் இதனை ஏற்றுக்கொள்வது அவசியமாகியது.
எதிர்பாராத விதமாக அதிக மாசு வெளியேற்ற நாடுகளான சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா நாடுகள் கடந்த சில மாதங்களில் இதனை ஏற்றுகொண்டதால், கட்டாயமாக தேவைப்படுகின்ற அளவை எட்டிய இந்த ஒப்பந்தம் செயல்பட தொடங்கியிருக்கிறது.

தொடக்கத்தில் பாரிஸ் ஒப்பந்தத்தை 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனவே, 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலத்தில் வளிமண்டலத்தில் மாசு அளவு இன்னும் செறிவுறும் என்ற கவலைகள் எழுந்தன. இதனால் இயற்கையை சுத்தப்படுத்துவது மிகவும் கடினமாகும் என்று கருதப்பட்டது.

கடந்த வாரத்தில், வளி மண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 400 பிபிஎம் என்கிற அளவை கடந்து அதிக நிலையில் இருப்பதாகவும், பல தலைமுறைகளுக்கு இது குறைய போவதில்லை என்றும் உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்திருக்கிறது.

2016 ஆம் ஆண்டு முழுவதும் இந்த அதிக அளவை தாண்டியதாக இருக்கின்ற முதல் ஆண்டு என்றும் அது எச்சரித்திருக்கிறது.
பாதுகாப்பான வரையறைக்கு மேலாக கால் பகுதி அளவு உயர்வாக பசுங்குடில் வாயுக்களை உலகம் வெளியேற்றி வருவதை எச்சரித்து ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டம் பாரிஸ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டு உலக அளவில் வெப்பம் அதிகரிப்பதை 2 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்கு தேவையான கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்திற்கு அதிகமாக 12 முதல் 14கிகா டன்கள் வெளியேற்றப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டு கார்பன் வெளியேற்றம் 56 கிகா டன்களை எட்டுகின்றபோது, 2.9 முதல் 3.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் இந்த நூற்றாண்டிலேயே அதிகரிக்க காரணமாக அமையும் என்று ஐக்கிய நாடுகள் அவை சுற்றுச்சூழல் திட்டத்தின் மாசு வெளியேற்ற இடைவெளி அறிக்கை எச்சரித்திருக்கிறது.

ஒரு கிகா டன் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான துறை வெளியேற்றும் மாசு உள்பட போக்குவரத்து துறை வெளியேற்றுகின்ற மாசு அளவாகும்.

ஏழை நாடுகளுக்கு என்ன கிடைக்கும்?
கார்பன் வெளியேற்றத்தை குறைப்பது என்பது பெரும்பாலும் முக்கிய பொருளாதார நாடுகளை உள்ளடக்குகிறது.
இதனால், பாரிஸ் ஒப்பந்தம் ஏழை நாடுகளோடு செய்வதற்கு ஒன்றுமில்லை ஒன்று பொருள்படுகிறதா?
பணக்கார மற்றும் ஏழை நாடுகளும் அனைத்தும், அவை ஒவ்வொன்றும் வெளியேற்றுகின்ற கார்பன் அளவை குறைப்பதற்கு இயன்ற வகையில் செயல்பட வேண்டும்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்பாராத பாதிப்புக்களை சமாளிக்க ஏழை நாடுகள் மற்றும் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளுக்கு உதவுவதற்கும்தான் இந்த பாரிஸ் ஒப்பந்தம்.

பருவநிலை மாற்றத்திற்கான நிதி ஆதரவைதான் இது குறிக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடுகள் ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்களை வளர்முக நாடுகளுக்கு வழங்குவதையும் பாரிஸ் ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.
மாசு வெளியேற்றாத எரிபொருள்களுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் மாறுவதற்காகவும், மாறிவரும் பருவநிலைக்கும் ஏற்ப மாற்றங்களை உருவாக்க உதவுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
பருவநிலை மாறுதலுக்கு உதவ அளிக்கப்படும் நிதியானது வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கும், சிறிய தீவு நாடுகளின் நலன்களுக்கும் வழங்கப்படும்.

காடு அழித்தல்

விரைவாக வளர்ச்சி அடைகின்ற நாடுகளில் மாசு வெளியேற்றாத எரிபொருள் மாற்றத்திற்கு நிதி ஆதரவு அளிப்பது, நன்கொடை அளிக்கின்ற நாடுகளின் முதன்மை தெரிவாக இருப்பதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பணக்கார நாடுகள் ஓராண்டுக்கு 100 பில்லியன் டாலர் வழங்குவது 2020 ஆம் ஆண்டுக்குள் எட்டக்கூடிய இலக்கு என்று சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள வரைவு தெரிவிக்கிறது.

ஆனால் இந்த வரைவு தங்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை என்கிறார் ஐக்கிய நாடுகள் பேச்சுவார்த்தைகளில் வளர்ச்சி குறைந்த நாடுகள் அமைப்பின் தலைவர் தோசி மப்பனு-மப்பனு.

"ஓராண்டு எட்டக்கூடிய இலக்குகளின் தகவல்களை விவரிப்பதாகவும், மாற்றங்களை தழுவிக் கொள்வதற்கும், கருவிகளுக்கும் அவற்றை பயன்படுத்துகிற பாதைக்கும் இடையே சமநிலையை எட்டுவதற்கான பார்வையில் மாசு வெளியேற்றத்தை தணிப்பதற்கான ஒதுக்கீடுகளாலும் வளர்ச்சி குறைந்த நாடுகளின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி இந்த வரைவு இருக்கிறது".

மிகவும் ஏழையான நாடுகளுக்கு பருவநிலை மாற்றங்களை சமாளிப்பதற்கு போராடுவதற்காக ஐந்தில் ஒரு பங்கு நிதி வழங்கப்பட வேண்டும் என்று ஏழை நாடுகளில் பருவநிலை மாற்றம் பற்றிய களப்பணிகளை மேற்கொண்டு வரும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் தெரிவித்திருக்கிறது.

பருவநிலை மாற்றத்திற்கு நிதி ஆதரவு வழங்குவதற்காக பணக்கார நாடுகள் வழங்குவதாக ஒப்பு கொண்டுள்ள 41 பில்லியன் டாலர் நிதி ஆதரவில் 8.7 பில்லியன் டாலர் மட்டுமே வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு சென்றடைந்ததாக 2016 ஆம் ஆண்டு பருவநிலை மாற்ற நிதி ஆதரவு நிழல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  நன்றி பிபிசி

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி விதித்த தந்தை: கேரளாவில் சம்பவம்

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி விதித்த தந்தையின் மீது கேரள அரசு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.பிறந்த குழந்தை ஐந்து முறை தொழுகையை கேட்ட பிறகுதான் அதற்குத் தாய் பால் கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு முன் பால் கொடுத்தால், தாயை 'தலாக்' என்று கூறி, இஸ்லாம் முறைப்படி விவாகரத்து செய்யவேண்டிவரும் என்று தந்தை அபூபக்கர் அச்சுறுத்தியதால், மருத்துவர்கள் அறிவுறுத்திய போதும் அந்தத் தாய் அதற்குச் செவிமடுக்கவில்லை என கேரள மாநில குழந்தைகள் உரிமை நல ஆணைய தலைவர் தெரிவித்தார்.

கடந்த புதனன்று நடந்த இந்தச் சம்பவத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் அறிவுறுத்திய போதும், அபூபக்கர் அதை ஏற்க மறுத்ததால், அந்தக் குழந்தைக்கு அடுத்த நாள் தான் பால் கொடுக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவரை, தந்தை சொன்னபடி தேனும், தண்ணீரும் தான் குழந்தைக்கு அளிக்கப்பட்டன.

இதுகுறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய ஆணைய தலைவர் சோபா கோஷி, ஆணையத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, தந்தை அபூபக்கர் மற்றும் மதகுரு ஹைத்ரொஸ் அலி தங்கல் சனிக்கிழமையன்று தமராசசேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர் என்றார். ''அபூபக்கர் தனது மதகுரு ஹைத்ரொஸ் அலி தங்கல் கூறியதைப் பின்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டுள்ளார். பல இஸ்லாமிய குடும்பங்களில், தண்ணீர் கொடுப்பதற்கு முன், குழந்தை ஒரு முறை தொழுகையை கேட்டால் போதும் என்ற சொல்லப்படுகிறது. ஆனால், இவ்வாறு குழந்தையை தாய்ப் பாலிற்காக காத்திருக்க வைத்தது இது தான் முதல் முறை,'' என்றார்.

அபூபக்கரும், மதகுரு ஹைத்ரொஸ் அலி தங்கலும் நீதிமன்றம் சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம் 2015 என்ற சட்டத்தின் கீழ் எடுக்கும் நடவடிக்கைக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றார் கோஷி.

தென் அபிரிக்க அதிபர் சிறைக்கு செல்ல தயாராம்

தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேகப் ஸூமா, சிறைக்கு செல்வதற்காக தான் ஒரு போதும் அஞ்சியதில்லை என்றும், காரணம் இனவெறியை எதிர்க்கும் ஆர்வலராக இருந்த போது 10 ஆண்டுகள் சிறையில் கழித்ததாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பணக்கார இந்திய வர்த்தகர்களுடனான சில ஒப்பந்தங்களில் ஜேகப் ஸூமா மற்றும் மூத்த அரசாங்க பிரபலங்கள் முறையின்றி செயல்பட்டார்களா என்பது குறித்த ஒரு நீதித்துறை விசாரணையை ஊழல் தடுப்பு அமைப்பு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்ததை தொடர்ந்து அவரிடமிருந்து வரும் முதல் பொதுவான கருத்து இதுவாகும்.
நட்டல் மாகாணத்தில் உள்ள குவா ஸூலுவில் ஆயிரக்கணக்கான உற்சாக ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய ஸூமா, வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஜனநாயக விவாதங்களை வெளியே தள்ளுவதாக குற்றஞ் சாட்டினார்.
அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை அதிபர் ஸூமா எதிர்கொள்ள உள்ளார்.
இந்த ஆண்டில் ஏற்கனவே நடைபெற்ற இரு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்களில் அவர் பதவி தப்பியது குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவுடன், அவரது அணியால் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவா க்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் பொதுக் குழுக் கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு அதன் ஊடாக கட்சிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவர் என பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அதேவேளை புதிய அரசியல் கட்சியை உருவாக்கினால், வீதியில் இறக்குவோம் என தமக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியி லுள்ளவர்கள், புதிய கட்சி தொடர்பான தகவல் அறிவிக்கப்பட்ட நாளே அவர்கள் வீதியில் இருந்ததை காணக் கிடைத்ததாகவும் காலி அம்பலங்கொடை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பசில் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாம் புதிய கட்சியொன்றை உருவாக்கினால் வீதியில் இறக்கப்படுவோம் என சிலர் எச்சரி த்தனர். ஆனால் எமது புதிய கட்சி தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்பட்ட அன்று எம்மை வீதியில் இறக்குவோம் என கொக்க ரித்தவர்கள் வீதியில் இருந்ததைக் கண்டோம்.

நாம் மக்கள் மத்தியில் சென்றுள்ளோம். எம்மை விமர்சித்தவர்கள் இன்று வீதிக்கு வந்துள்ளனர். நாம் உருவாக்கும் கட்சியின் தலை வர்கள் மக்கள். உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளவுள்ளோம்.

அதற்குப் பின்னர் கட்சிக்கான அதிகாரிகள் தெரிவு இடம்பெறும். மக்கள் மத்தியில் அடி மட்டத்திலிருந்து உருவாக்கப்படும் மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாகவே இந்தக் கட்சி இருக்கும்.

அதனால் யாரை இணைத்துக்கொள்வது, இணைத்துக்கொள்ளக் கூடாது என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பத்து லட்சம் பேரையே எமது கட்சியின் ஆரம்ப உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள உள்ளோம். இதற்கான உறுப்புரிமைப் பத்திரம் விரைவில் சுப நேரத்தில் விநியோகிக்க நடவடிக்கை எடுப்போம்.

சிலநேரம் பத்து இலட்சம் என்பது போதாமலும் போகலாம். ஏனெனில் எமது புதிய கட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி வருகின்றது என்றார்.

காணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன் தாக்கு

வடக்கில் ஆவா குழுவை இப்போது இராணுவம் நடத்துவதாக அமைச்சர் ராஜித சொன்னதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அதற்கு அன்று பிள்ளையார் சுழி போட்டு, முடுக்கி விட்டவர் கோத்தாபய ராஜபக்ச என்றுதான் ராஜித சொன்னார். அதேபோல் முதல்வர் விக்கி, இன்று இராணுவம், படையணி தொழிலுக்கு தொடர்பில்லாத வேலையை செய்கிறது என்று சொன்னது பிழை யல்ல. அவை உண்மை.

புலிகளின் செயற்பாடு பயங்கரவாதம் என்றால், காணி பிடிப்பது, பிடித்த காணிகளை விட மறுப்பது என்பவை அரச பயங்கரவாதம் இல்லையா? இது எப்படி ஆளுநருக்கு தெரியாமல் போனது?

அன்று, கொழும்பில் பல குழுக்களை தங்கள் அரசியல், இராணுவ தேவைகளுக்காக அமைத்துக், கொண்டு நடத்திய இவர்களைப் பற்றி எனக்கு தெரியாதா? வெள்ளை வான்களை கொண்டு ஆட்கடத்தியதை கடத்தியவன் மறந்தாலும், கடத்தப்பட்டவன் மறந்தா லும், நான் மறக்கவில்லை.

அந்த குழுக்கள்தான் பிற்காலத்தில் இன்றுவரை எனது தேர்தல் மாவட்டமான கொழும்பில் பாதாள கோஷ்டிகளாக ஆதிக்கம் செலு த்துகின்றன. சமீபத்தில் கூட கொழும்பு மட்டக்குளியில் இரண்டு குழுக்கள் சுட்டுக்கொண்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள். ஒரு பாதாள கோஷ்டி தலைவனை பழிவாங்க அவரது தாயையே, இன்னொரு கோஷ்டி சுட்டுக்கொன்ற அவலம் இங்கே நிகழ்ந்துள்ளது.

எனவே இது வடக்குக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அங்கே அது வடக்கு ஆவா என்றால், இங்கே இது கொழும்பு ஆவா. இந்த ஆவாக்களுக்கு எல்லாம் பிதாமகன் ஒரேயொரு பாவாத்தான். இந்த அடிப்படைகளை ரெஜினோல்ட் குரே அறிய வேண்டும்.

ஆகவே அன்று வடக்கில் அமைக்கப்பட்டு, முடுக்கிவிடப்பட்ட குழுக்கள் இன்றும் அங்கு செயற்படுகின்றன. அவை வடக்கின் பாதாள கோஷ்டிகள். இன்று அவை அழித்து ஒழிக்கப்பட வேண்டும். ஆனால், இவற்றை ஒழிக்கின்றோம் என்று மாணவர்களை சுட்டுவிட்டு, ஆவா என்று எண்ணித்தான் நள்ளிரவில் கண்மண் தெரியாமல் சுட்டு விட்டோம் என்றால் அது எடுபடாது.

விஷம் வைத்தவர்கள்தான் இன்று அந்த விஷத்தை கவனமாக அகற்ற வேண்டும். இது பெரிய வேலையல்ல. இதை இன்று பொலிஸ் மா அ திபர் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் செய்யத் தொடங்கியுள்ளார் என நினைக்கின்றேன்.

அதேபோல் முதல்வர் விக்கி, இன்று இராணுவம், படையணி தொழிலுக்கு தொடர்பில்லாத பல வேலைகளை செய்கிறது என்று சொன்னது பிழையல்ல. அவை உண்மை. இது எப்படி ஆளுநருக்கு தெரியாமல் போனது? இன்று இராணுவம் வடக்கில் சுற்றுலா விடுதிகளை நடத்துகிறது. மீன்பிடித் தொழில் செய்கிறது.

தெற்கிலிருந்து தங்கள் ஊர் மீனவ நண்பர்களை கூட்டிவந்து, முல்லைத்தீவு மீனவர்கள் பாரம்பரியமாக தொழிலுக்கு போகும் கட லில் இறக்கி விடுகிறது. விவசாய பண்ணைகளை நடத்துகிறது. சிறு தெருவோர கடைகளை நடத்துகிறது.

இவற்றை முதல்வர் விக்கினேஸ்வரன் மட்டும் சொல்லவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் எதிர்க்கட்சி தலைவர் சம்ப ந்தனும் பலமுறை அழுத்தமாக சொல்லியுள்ளார். இந்த அரசின் அமைச்சரவை அமைச்சரான நானும் பலமுறை சொல்லியுள்ளேன். இது பற்றி சிங்கள ஊடகங்களில் பலமுறை அதிகமாக பேசியுள்ளது நான்தான். இவற்றை நான் பிரமதமருக்கும் கூறியுள்ளேன்.

வடக்கில் இராணுவம் நடத்தும் சுற்றுலா விடுதிகள், உடனடியாக அரசு-தனியார் பங்குடமை நிறுவனங்களாக மாற்றப்பட்டு, ஒன்றில் வடமாகாண சுற்றுலா அமைச்சிடமோ அல்லது தேசிய சுற்றுலா சபையிடமோ மீளளிக்கப்பட வேண்டும்.

ஜெனீவா தீர்மானம் தொடர்பான பொறுப்புக் கூறல் இயந்திரம் அமைக்கும் குழுவின் ஆரம்ப கூட்டம், அலரி மாளிகையில் நடை பெற்ற போது, இந்த கருத்தை நானும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவும், இணைந்து கூறினோம்.

வடக்கில் இருந்து இராணுவம் முழுதாக வெளியேற வேண்டும் என எவரும் கேட்பதாக நான் நினைக்கவில்லை. இராணுவம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு. அது நாட்டின் நாலாபுறத்திலும் இருக்கத்தான் வேண்டும். தமிழர்கள்அதை புரிந்துகொள்ள முடியாத மடையர்கள் அல்ல. இந்திய மீனவர்களின் ட்றோலர் ஆக்கிரமிப்பிலிருந்து வடக்கு மீனவர்களை காப்பாற்ற கடற்படை அங்கு தேவைதானே. அது கடற்படையின் கடமை. அதை அவர்கள் செய்யட்டும்.

ஆனால், மேலதிகமான இராணுவம் தங்கள் ஊரில் இருந்து கொண்டு, படைத்துறைக்கு தொடர்பில்லாத தொழிலை செய்வதை தாம் விரும்பவில்லை என்றுதான் வடக்கு மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். இதை வடக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் எவரும் விரும்ப மாட்டார்கள்.

கடற்படை, தங்கள் சொந்தக்காரர்ளை அழைத்து வந்து காலி, மாத்தறை கடலில் மீன்பிடிக்க விட்டால் இங்குள்ள மக்கள் ஒப்புக்கொ ள்வார்களா? அனுராதபுரம், பொலநறுவையில் பெருந்தொகை காணிகளை பிடித்து விவசாயம் செய்ய இராணுவம் புறப்பட்டால், அங்குள்ள மக்கள் சும்மா இருப்பார்களா?

இந்த உண்மைகளை வேண்டுமென்றே திரித்து திட்டமிட்டு பலர் இங்கே மாற்றி பேசுகிறார்கள். இப்போது ரெஜினோல்ட் குரேயும் பேசுகிறார். புலிப்பயங்கரவாதிகள் பொதுமக்களின் இடங்களை பிடித்து வைத்திருந்தார்கள். அவற்றைத்தான் இராணுவம் பிடித்து வைத்துள்ளது. இராணுவமே நேரடியாக பொதுமக்களின் காணிகளை சென்று பிடிக்கவில்லை என ரெஜினோல்ட் கூறுகிறார்.

புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை விடுவித்ததாகத்தானே இராணுவம் சொல்கிறது. அப்படியானால் புலிகள் பிடித்து வைத்திருந்த இடங்களை மீண்டும் தமிழ் மக்களிடம் வழங்கி தமிழ் மக்களின் மனங்களில் இடம் பிடிக்கலாமே. தமிழர் காணிகளை பிடிப்பதை விட்டுவிட்டு, இராணுவம் தமிழர் மனங்களை பிடிக்க முயல வேண்டும்.

புலிகளின் செயற்பாடு பயங்கரவாதம் என்றால், காணி பிடிப்பது, பிடித்த காணிகளை விட மறுப்பது என்பவை அரச பயங்கரவாதம் இல்லையா? என்ன, மடமை ஐயா உங்கள் கருத்து!

எனவே உண்மையான சகவாழ்வு வேண்டும் என்றால், படைத்துறை தொழிலுக்கு தொடர்பில்லாத பல தொழில்களை இராணுவம் செய்வது தொடர்பில் ஒரு இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து தமிழ் கட்சிகளையும் அழைத்து நம் மத்தியில் முதலில் பேச வேண்டும். பின்னர் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நமது அரசுடன் தமிழ் கட்சிகள் என்ற அடிப்படையில் பேசலாம். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நண்பர் யார் என்று பகுத்தறிய முடியாத, யாரிடம் பேசுவது என்று முடிவு செய்யமுடியாத ஒரு நோய் இருக்கிறது. இதற்கு என்னிடம் மருந்து கிடையாது.

மேற்பூச்சு சகவாழ்வு என்பது ஒரு பம்மாத்து. மேற்பூச்சு சகவாழ்வு அமைச்சர் என்ற பெயர் வரலாற்றில் எனக்கு வேண்டாம் என்று தான் நான் நினைக்கின்றேன். இந்த வருடம் இதோ முடிகிறது. அடுத்த வருடம், சகவாழ்வை பொறுத்தவரையில் ஒரு தீர்மான கரமான வருடமாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் நான் இங்கே இருக்கப்போவதில்லை என அவர் அதில் மேலும் தெரிவித்து ள்ளார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…