Super User
போர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும்
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் - கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில்தான் எமது உறவுகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். இதனைத் தற்போதைய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசும் வெளிப்படையாகக் கூறியுள்ளது.
எனவே, மகிந்தவையும், கோத்தபாயவையும் உடன் கைதுசெய்து கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசு விசாரணையின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவேண்டும்.இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
காணாமற்ேபானவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்களில் பலர் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம். மகிந்த அரசில் இடம்பெற்ற அனைத்துக் கொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அலுவலகத்திலிருந்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே முன்னெடுத்துள்ளார் என்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனவே, மகிந்தவுக்கும் கோத்தபாயவுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதைய அரசு ஏன் தயக்கம் காட்டுகின்றது?” என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறும், அவர்களுடைய உண்மையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி, வடக்கு மாகாணத்தில் அறவழிப் போராட்டங்கள் உக்கிரமடைந்து செல்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று 26 ஆவது நாளாகவும், வவுனியா மாவட்டத்தில் நேற்று 22 ஆவது நாளாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று 10ஆவது நாளாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று 3ஆவது நாளாகவும் போராட்டங்கள் தொடர்ந்தன.
இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? இருந்தால் எங்கு உள்ளனர்? இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாகக் கடும் மழை பெய்தபோதும், மக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. அவர்களால் அமைக்கப்பட்ட தகரக் கூடாரத்துக்குள் ஒதுங்கி இருந்து, உறுதியுடன் தமது அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12 நாடுகள் ஆதரவு
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவுக்கு இதுவரை 12 நாடுகள் தமது இணை அனுசரணையை வழங்கியிருக்கின்றன.
அந்தவகையில் இன்னும் சில தினங்களில் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ள நிலை யில் அதிகமான நாடுகள் இந்த வரைவுக்கு இணை அனுசரணை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஒருசில உறுப்பு நாடுகளும் உறுப்புரிமையற்ற சில நாடுகளும் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருக்கின்றன.
அந்தவகையில் அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, இஸ்ரேல், ஜப்பான், மொன்ட்னேகுரோ, நோர்வே, மெஸடோனியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன. மேலும் இந்த பிரேரணையுடன் சம்பந்தப்பட்ட நாடான இலங்கையும் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
அந்தவகையில் இலங்கை தொடர்பான பிரேரணையானது இம்முறையும் வாக்கெடுப்பின்றி ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரேரணையானது இலங்கை, 2015 ஆம் ஆண்டு பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை இலங்கையில் ஊக்குவித்தல் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு வரை 2015 ஆம் ஆண்டு பிரேணையை அமுல்படுத்த கால அவகாசமும் வழங்கியுள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் ஜெனிவா விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நீதிபதிகள் இன்றி உள்ளகப் பொறிமுறையின் மூலம் விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அந்தவகையில் இலங்கை பிரேரணைக்கு மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கவேண்டுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுப்பதற்கான இந்தப் பிரேரணைக்கு உறுப்புநாடுகள் இணை அனுசரணை வழங்கவேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள் நயப்புடைப்பு
பாடசாலை மாணவியுடன் தவறாகப் பழக முயன்றார் என்று தெரிவித்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொதுமக்களால் நையப் புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வவுனியா வைரவப்புளியங் குளத்தில் நடந்துள்ளது.
குறித்த நபர் வைரவப்புளியங்குளம், 10ஆம் ஒழுங்கை புளியடி வீதியில் பாடசாலை மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று கூறப்படுகின்றது.
இவர் தனியார் கல்வி நிலையங்களுக்கு முன் நின்று மாணவிகளுடன் பகிடி வதையில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் மாணவி ஒருவருடன் தவறாக நடக்க முயன்றார் என்று தெரிவிக்கப்பட்டே பொதுமக்கள் அவரைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த நபர் இரு பிள்ளைகளின் தந்தை என்று கூறப்படுகின்றது.இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். விசாரணை யின் பின்னர் அவர் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படு வர் என்று பொலிஸார் குறிப் பிட்டனர்.

உள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்
உள்ளகப் பொறிமுறை இலங்கையில் தோல்வியடைந்து விட்டது. பன்னாட்டுப் பிரசன்னத் தையேமக்களும் கோருகின்றனர். உலகின் எந்த நிலைமாற்றுக்கால பொறிமுறையும் வெற்றியடைவதற்கு பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவு அவசியம். அவர்கள் அதனைப் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யஸ்மின் சூகா தெரிவித்தார். பன்னாட்டு ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீமூனால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவில் சூகாவும் ஒருவராவார். பன்னாட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளராகவும் இவர் விளங்கு கிறார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நிலைமாற்றுக்கால நீதி தொடர்பில் இலங்கை அரசு கடந்த இரண்டு வருடங்களில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது அதிர்ச்சியளிக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்செயல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சிறிசேன அரசு தவறிவிட்டது. காணாமற்போனவர்கள் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டவரைவு கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டது.
ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அந்த அலுவலகத்தை இன்னமும் ஏற்படுத்தவில்லை. பெருமளவு சிங்க ளவர்களை நியமிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குச் சிந்திக்க வேண்டும். உலகின் எந்த நிலைமாற்றுக்கால பொறிமுறையும் வெற்றியடைவதற்கு பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவு அவசியம். அவர்கள் அதனைப் பொறுப்பேற்க வேண்டும். பத்தாண்டு கால வன்முறைகள் அரசு மற்றும் அதன் அமைப்புகள் மீதான அதிருப்தியும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது.
பலர் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பன்னாட்டுப் பங்களிப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ளனர்.நம்பகத்தன்மை மிக்க உள்ளகப் பொறிமுறையென்பது முரண்பாடுகளைக் கொண்டது. அவை அனைத்தும் இலங்கையில் தோல்வியடைந்து விட்டன.
இலங்கை தொடர்பான பன்னாட்டு அணுகுமுறை 180 பாகையில் திரும்பியுள்ளது. முன்னர் ராஜபக்ச அரசின் காலத்தில் இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து சகிப்புத்தன்மையும் விரக்தியும் காணப்பட்டன. தற்போது இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கான பொறுமை காணப்படுகின்றது.
நாட்டில் நிலவும் சூழல் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதென்றால் தற்போது அச்சமற்ற சூழல் காணப்படுகின்றது. மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு செயற்படுவதற்கான சூழல் காணப்படுகின்றது. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு நம்பகத்தன்மையுள்ள தலைமை காணப்படுகின்றது. இன்னமும் திறன் போதாத நிலை காணப்படுகின்றது. தெற்கில் நிலமை முன்னேற்றமடைந்துள்ளது.
முன்னர் போர் நடைபெற்ற பகுதிகளில் தமிழர்கள் தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்ட பாதுகாப்புமயப்படுத்தப்பட்ட சூழலில் வாழ்கின்றனர். இந்தச் சூழலில் கண்காணிப்பும் அச்சுறுத்தலும் நாளாந்த வாழ்வின் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது.
போர் முடிவடைந்து எட்டு வருடங்களின் பின்னர் இத்தனை தூரம் இராணுவமயப்படுத்தப்பட்ட சூழல் காணப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது படையினர் தொடர்ந்தும் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட்ட நிலையில் செயற்படுகின்றனர் என்பதையும் வெளிப்படுத்துகின்றது.
சிறிசேன அரசு பெரும் நம்பிக்கை மாற்றத்துக்கான நல்லெண்ணத்துடனேயே ஆட்சிக்கு வந்தது. இந்த அரசுக்கு வாக்களித்த தமிழர்களிடம் இந்த நம்பிக்கை காணப்பட்டது. அதிர்ச்சிதரும் வகையில் இரண்டு வருடங்களாக எந்தவிதச் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. இலங்கை கடந்த காலத்திலிருந்து ஏன் மாற்றமடைய வேண்டும் என்பதற்கான தெளிவான நோக்கத்தை ஏற்படுத்த அரசு தவறிவிட்டது என்றார்.

18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்
வவுனியாவில் இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(13) 18 ஆவது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அவசரகாலச் சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமானது இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல், இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர்.
இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார்.
இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவிலும், பின்னர் லண்டனிலும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த, போற்றுதற்குரிய மாமனிதர்.
1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர். பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் பணியினை, மென்மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு விடுதலை ஊக்கியாக அவர் எல்லோர் மனங்களிலும் நிறைந்திருப்பார் என்பதே காலம் சொல்லும் உண்மையாகும்.
திருநங்கைகளை சாக்கினுள் கட்டி அடித்துக்கொலை
பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் இருவர், சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் கண்முன்னே சாக்கில் கட்டிவைத்து தடிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் ஆடைகளை ஆண்கள் அணிந்துகொள்வது சவுதி அரேபியாவில் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர், சவுதி அரேபிய தலைநகரான ரியாதுக்குச் சென்றுள்ளனர். அங்கே பொது இடங்களில் பெண்களின் உடைகளை அணிந்தபடி இவர்கள் வலம் வந்துள்ளனர்.
இதுபற்றிக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 33 திருநங்கைகள் கைதாகினர். இவர்களை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்ற பொலிஸார், அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக, அம்னா (35) மற்றும் மீனோ (26) என்ற இரண்டு திருநங்கைகளையும் சாக்கில் கட்டிவைத்து, சிறைக் கைதிகள் சிலரைக் கொண்டு தடிகளால் அடிக்கச் செய்துள்ளனர். கடுமையான தாக்குதலுக்கு இலக்கான இருவரும் சிறைச்சாலையிலேயே கொல்லப்பட்டனர்.
இது குறித்து திருநங்கைகளுக்கு ஆதரவான அமைப்புகள் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. கைதான திருநங்கைகளுள் 11 பேர் மட்டுமே சுமார் ஒன்றரை இலட்சம் ரியால்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், சிறையில் உள்ள ஏனைய திருநங்கைகளின் கதி என்ன ஆகுமோ என்று கேள்வியும் எழுப்பியுள்ளன இவ்வமைப்புகள்!

எழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இம் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதேவேளை இன்றையதினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவரத்தன மன்றில் முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் சார்பில் அவரது மனைவியான வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா உள்ளிட்ட பன்னிரண்டு பேர் இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும் அந்த ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்காக வக்காலத்து வாங்கிய பிரிட்டன்: இதுதான் BTF,GTF ஆகியோரின் அரசியல் பணியாம்
ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டுமென பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய இராஜ்யத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆலோக் ஷர்மா கருத்து வெளியிடுகையில்,
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அமைச்சர் மட்ட கூட்டத் தொடரில் அவர் ஐக்கிய இராஜ்யத்தில் அறிக்கையை வாசித்த நிலையில், பேரவையின் அமர்வுகள் நடைபெறும் ஜெனீவா நகரில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றையும் நிகழ்த்தினார்.
போர்க்குற்ற அரசிற்கு மேலும் கால அவகாசம் தேவை என பிரிட்டன் வக்காலத்து வாங்கியதன் மூலம் மீண்டும் தனது உண்மை முகத்தினைக் காட்டியுள்ளது. பிரிட்டனைக் குறைகூறி என்ன பலன், தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படி ஏமாற்று அரசியல் செய்கின்றதோ அதே பாணியில்தான் இங்கு பிரித்தானிய தமிழர் பேரவை , உலகத்தமிழர் பேரவை ஆகியோர்கள் ஓர் குட்டி தமிழ்த்தேசஇயக் கூட்டமைப்பாக பார்க்கப்படுகின்றார்கள். பிரிட்டன் கருத்து தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை மாறாக அமைதியாக இருக்க செய்திருந்தாலேயே ஆரோக்கியமாக இருந்திருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக முடிவு எடுத்ததும் அதற்கு பதிலாக பொருளாதார வணிக உடன்பாடுகளை பலப்படுத்த பொது நலவாய நாடுகளுடனான உறவினை பலப்படுத்தப்போவதாக பிரிட்டன் கூறியதும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை உண்டுபண்ணும்.
அதாவது பிரிட்டன் அரசுகளுடனான உறவுகளை ஸ்திரமாக வைத்திருக்கவே உதவும் அதற்காக மனித உரிமை தொடர்பான விடயங்களை அது புறக்கணிக்க தயாராகவே உள்ளது. சுருக்கமாக கூறப்போனால் பிரிட்டன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததையே மீண்டும் செய்ய தொடங்குகின்றது என்பது எல்லோருக்கும் புரியும்.

குமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி
இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வெளியே - பிற நாடுகளில் - இந்திய இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்த மிக முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.
இந்நூலில், 1988ஆம் ஆண்டு மாலைதீவில் இந்திய இராணுவம் சார்பாக நடத்தப்பட்ட ‘காக்டஸ்’ இராணுவ நடவடிக்கை, 2000ஆம் ஆண்டு சியரா லியோனில் நடத்திய ‘குர்கி’ இராணுவ நடவடிக்கை என்பவற்றுடன், 1987ஆம் ஆண்டு இலங்கையில் ‘பவன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்தும் பல புதிய தகவல்களை சுஷாந்த் சிங் இந்நூலில் வெளியிட்டுள்ளார்.
அதில், விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட பதின்மூன்று வீரர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
“1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி காலை பத்து மணியளவில் மேஜர் ஷெனன் சிங்கின் படையணிக்கு இலங்கை இராணுவத்தின் 54வது படையணியில் இருந்து ஒரு தகவல் வந்திருந்தது. அதில், இந்திய அமைதிகாக்கும் படையினர் வசமிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் பதின்மூவரையும் நீதிமன்ற விசாரணைக்காக அன்று மாலை நான்கு மணிக்கு தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பதின்மூவரும் சிறைவைக்கப்பட்டிருந்த பலாலி உணவகத்தின் பாதுகாப்பை முழுமையாக இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் நீங்கிச் செல்ல வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“இது மேஜர் ஷெனன் சிங்குக்கு கடும் அதிருப்தியைத் தந்திருந்தது. ஏனெனில், ஏற்கனவே பிடித்துவைக்கப்பட்ட பதின்மூன்று போராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவர்களை விசாரிப்பது முறையல்ல என்று அவர் கருதினார். மேலும், அவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டால் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் அழுத்தங்களுக்கு இந்திய இராணுவம் செவிசாய்க்காது என்றும் புலிகள் நம்பியிருந்தனர்.
“தமக்குக் கிடைத்த தகவலை டெல்லி வட்டாரத்துக்குத் தெரியப்படுத்திய ஷெனன் சிங், போராளிகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், அப்படி ஒப்படைத்தால், இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான நல்லெண்ண உறவு கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் விளக்கியிருந்தார். எனினும் டெல்லியில் இருந்து அவருக்கு சாதகமான பதில் கிடைக்காததால், போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைக்க ஷெனான் சிங் வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டார்.
“இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த போராளி குமரப்பா, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாம் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டால் அதுவே எமது கடைசி நாளாக அமைந்துவிடும் என்று எமது தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று ஷெனான் சிங்கிடம் கூறினார். இந்த வார்த்தைகளின் மறைபொருளைப் புரிந்துகொள்ளாத ஷெனான், விருப்பமேயில்லாமல் மேலிடத்து உத்தரவுக்கு அடிபணியத் தயாரானார்.
“மற்றொருபுறம், இந்தச் செய்தியைக் கேட்ட போராளிகள், தமக்கு காகிதமும் பேனையும் தருமாறு கேட்டதுடன், ஒரு கடிதத்தை எழுதி உறவினர்களுக்குக் கொடுத்தனுப்பினர். மதிய நேரம் போராளிகள் பதின்மூவருக்கும் மதிய உணவு டிபன் கெரியரில் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்திய இராணுவத்தின் தீவிர பரிசோதனையின் பின் அந்த கெரியர்கள் போராளிகளுக்குக் கொடுக்கப்பட்டன.
“மிகச் சரியாக மாலை நான்கு மணிக்கு மேஜர் ஷெனான் சிங் 54வது படையணித் தலைமையதிகாரியிடம் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு தமது படையணியின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு, சுமார் 500 மீற்றர் தொலைவே உள்ள தமது முகாமைச் சென்றடைந்தார். போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டது பற்றி டெல்லி இராணுவ அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தார்.
“சில நிமிடங்களில், இலங்கை இராணுவ வீரர் ஒருவர் மேஜர் ஷெனானிடம் ஓடி வந்து, போராளிகளை மீண்டும் அவரே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால், மேலிடத்து உத்தரவு இன்றி எதுவும் செய்ய முடியாது என்று ஷெனான் மறுத்துவிட்டார். பின்னர், இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் ஷெனானிடம், போராளிகளைக் கையேற்குமாறு கூறினார்.
“அதற்கு ஷெனான், “இலங்கை இராணுவத்தினர் போராளிகளைக் கையளிக்க மறுத்தால் அவர்களைச் சுடலாமா? என்னிடம் கையளித்தபின் போராளிகளை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றால் நான் என்ன செய்வது? அல்லது இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதலில் இறங்கினால் நான் என்ன செய்வது?” என்று கேள்வியெழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி டெல்லி இராணுவ தலைமையகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார் அந்த உயரதிகாரி.
“அதேநேரம், வயர்லஸ் கருவி மூலம் ஷெனானைத் தொடர்புகொண்ட இலங்கை இராணுவ அதிகாரியொருவர், குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட பதின்மூன்று போராளிகளும் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவமே விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவத்தின் மீது காழ்ப்புணர்ச்சியாக உருவெடுத்து, கடைசியில் ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கும் காரணமாக அமைந்தது.”
இவ்வாறு அந்த நூலில் சுஷாந்த் சிங் தெரிவித்துள்ளார்.