திருமலைக்கூட்டத்தில் அரசாங்கத்தை காட்டிக்கொடுக்காத சம்பந்தன்
இணைப்பை பொறுத்தவரையில் முடிவு எடுப்பதற்கு சில முக்கிய அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் நாங்களும், முஸ்லிம் மக்களும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரமுடியும் என நம்புவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.
முஸ்லிம்களுடனான உடன்பாட்டை காணாது இந்த விடயத்தை நிறைவேற்றுவது கடினம். அதேவேளை எங்களுடைய இணக்கப்பாடும், எங்களுடனான ஒற்றுமையும் இல்லாது அவர்களாலும் ஒரு தீர்வை பெற முடியாது. இதனால் இவ்விடயத்தில் இருதரப்பும் நன்கு ஆராய்ந்து சில விட்டுக்கொடுப்புக்களுடன் முடிவொன்றை எட்டவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை காண்பதற்கு தாம் முயன்று வருவதாகவும், இந்த வருட இறுதிக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை எட்ட முடியும் என எண்ணுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் புதிய அரசியல் சீர்திருத்த யோசனைகளில் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான எந்தவிதமான திடகாத்திரமான முன்மொழிவுகளும் இல்லை என அரச தரப்பு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்
கடந்த யுத்த காலத்தில் 45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்? தமிழ் மக்கள் மாத்திரமல்ல. 45 முஸ்லிம்களும் மாவீரர்களாகியுள்ளனர். ஆகவே தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களாக இருந்து இந்த மண்ணின் விடுதலைக்காக தியாகத்தை மேற் கொண்டிருக்கின்றார்கள்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஒருவர் மரணித்த பின் அவருக்கு அஞசலி செலுத்த முடியும். ஆனால் மாவீரர்களுக்கு கட்டாயம் அஞ்சலி செலுத்த வேண்டும்.
தமிழ் மக்களுக்காக தமது உயிரை துச்சமாக நினைத்து அவர்கள் போராடியவர்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது நமது கடமையாகும்.பல உயிர்கள் நியாயமான விடுதலைக்காக தங்களை தியாகம் செய்து இருக்கின்றன.
ஆனால் இங்கு ஆட்சி செய்த அரசாங்கங்கள் தான் தியாகங்களை சரியாக மதிக்க வில்லை. போர் எண்பது ஒரு நாடு இன்னுமொரு நாட்டின் மீது செய்வதுதான் போராகும்.
ஆனால் உள்நாட்டில் மக்கள் உரிமைக்காக போராடுவது போராக கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் மாத்திரமல்ல பல நாடுகளில் நடைபெற்றுள்ளது.
நாங்கள் தமிழர்கள் தமிழர் யார் என்பதனை உலகுக்கு காட்டியுள்ளார்கள். ஒரு தாய் இன்னொரு தாயிடம் எங்கே உன் மகன் எனக் கேட்ட போது அந்த தாய் புலி கிடந்த குகை இது என் மகன் போர்க்களத்தில் நிற்பான் என கூறிய அந்த வீரத்தாய்மார் இந்த வீர வித்துக்களை ஈன்று இன்று மண்ணுக்கு வித்துடல்களாக ஆக்கி எமது எதிர்காலத்திற்காக மாபெரும் வித்திட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
பெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்?
இதில் பங்குபற்றிய சுமந்திரன் எம்.பி. அரச உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் தூசித்த மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதிக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் தொடர்ந்தும் உண்மையாகச் செயற்பட வேண்டுமாயின், இவ்வாறான சம்பவங்களை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டு க்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி கெட்ட வார்த்தைகளால் தமிழ் அரச உத்தி யோக த்தரை திட்டித்தீர்த்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தரை துரத்தி அடித்து, செயற்பட்டமை காணொளிகள் மூலம் வெளியாகியுள்ளதாகவும் இது பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்றும் குறிப்பிட்டு ள்ளார்.
குறித்த பௌத்த பிக்குவுக்கு எதிராக அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றும் எம்.ஏ. சுமந்திரன், வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவில் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென யாராவது கூறுவார்களாயின், மங்களராமய விகாராதிபதியின் காணொளியை காண்பித்து, அதனை கேள்விக்கு உட்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளுக்காகவா பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டு ம் என்று தான் கேட்கவுள்ளதாகவும் பேச வேண்டிய இடங்களில் சரியானதை பேசுவோம் என்றும் ஒத்து ழைக்க வேண்டிய இடங்களிலேயே சேர்ந்து ஒத்துழைப்போம் என்றும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்து ள்ளார்.
வடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக் கட்சி?
வடமாகாண சபையின் இந்த நிலை மாறவேண்டும் என தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அது மாறாது இருக்குமானால் வடக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றமும் ஒழுங்காக நடைபெறாது என்ற உண்மையை அவர்களும் உணரவேண்டும் எனவும் தெரிவித்து ள்ளார்.
முஸ்லிம் சமூகத்திற்காக எப்படி உழைத்தாலும் அவர்கள் சுமந்திரனுக்கு வாக்கு போடமாட்டார்கள் அல்லது தமிழர்கள் தமது உரிமையினைப்பெற ஆதரவு கொடுக்கவும் மாட்டார்கள் என்பது சுமந்திரனுக்கும் தெரியும் முஸ்லிம்களுக்கும் தெரியும்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீழ்குடியேற்றங்களே ஆமைவேகத்தில்தான் நடக்கின்றது அதற்கு காரணம் வடமாகாணச் அபை அல்ல சிங்கள அரசாங்கமே காரணம் என்பதும் சுமந்திரனுக்கு தெரியும்.
இவ்வாறு நிலமை இருக்க சுமந்திரன் ஏன் வடமாகாண சபையினை குற்றம் சுமத்துகின்றார் என்பது மக்களுக்கும் தெரியும் முஸ்லிம்களுக்கும் தெரியும்.