Super User

Super User

60 குண்டுகள் முழங்க ராணுவ‌ மரியாதையுடன் ஜெ உடல் தகனம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுடலுக்கு காலை முதல் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், இந்திய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிகார் முதல்வர் அகிலேஷ் யாவத் உள்ளிட்ட பல இந்திய அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
பிறகு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்படிருந்த ராஜாஜி அரங்கத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இறுதியாக அவரின் உடலுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தார், பின் அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், முன்னாள் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் ஜெயலலிதாவின் உடலிற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் என்பவரும் இறுதிச் சடங்குகளைச் செய்யும் காட்சியை தொலைக்காட்சி நேரலைக் காட்சிகள் காட்டின.
புரட்சி தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா என்று பெயர் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில் அவரின் உடல் வைக்கப்பட்டு குழிக்குள் இறக்கி பின்பு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பல அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அவரின் உடல் கொண்டு செல்லப்பட்ட வழி நெடுகும் மக்கள் கூட்டம் கூட்டமாக காத்து நின்று ஜெயலலிதாவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

மெரீனா பீச்சிலுள்ள எம்ஜிஆர் சமாதி இடத்திற்கு வாகனம் சென்றதும் சந்தன பேழைக்கு அவரது பூத உடல் மாற்றப்பட்டது. அந்த சந்தன பேழையில், ஆங்கிலம் மற்றும் தமிழில் புரட்சி தலைவரி என்று ஜெயலலிதாவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

சந்தன பேழையில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டதும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, முப்படை ராணுவ வீரர்கள் அவரது பூத உடலுக்கு வாத்தியக் கருவி இசைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களும், முன்னாள் ஆளுநர் ரோசய்யா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து ஜெயலலிதா உடலிலிருந்து தேசிய கொடி அகற்றப்பட்டது. இதன்பிறகு அந்தணர் ஒருவர் வழிகாட்ட, ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என அழைக்கப்பட்ட, தோழி சசிகலா மற்றும் ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின், மகன் தீபக் ஆகியோர் இறுதி சடங்கு செய்தனர். இதையடுத்து, சந்தன பேழையில் வைத்து ஜெயலலிதா உடல் ஆணி அடித்து பூட்டப்பட்டது. இதையடுத்து 12 வீரர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழர் நலனுக்காக தன்னையே உருக்கி வாழ்ந்த ஜீவனை பிரியா விடை கொடுத்து கண்ணீருடன் பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் அங்கிருந்து கிளம்பினர்.

ஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி

பெண் குலத்தின் எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூடியபோது தமிழக முதல்வரின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இரங்கல் உரையாற்றினார்.

செல்வி ஜெயலலிதா ஒரு பெண்ணாக ஆணாதிக்க சூழலிலே தனித்து நின்று வெற்றி பெற்றார் என்பது அவரின் திடசங்கற்பத்தையும் உழைப்பையும் விடாமுயற்சியையும் கெட்டித்தனத்தையும் வெளிப்படுத்துகின்றது என்று அவர் தனது உரையில் குறி;ப்பிட்டார்.

அவரது ஆட்சி காலத்தில் தமிழ் நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேலும் பல துறைகளிலும் மிக உன்னத நிலையை அடைந்தது.

தமிழின் மீதும் தமிழ் மக்கள் வாழ்வின் மீதும் தமிழ் மக்கள் எதிர்காலம் மீதும் அவர் மிக்க பற்றுறுதி கொண்டிருந்தார். கரிசனையுடன் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பெண் குலத்திற்கு எடுத்துக்காட்டாக அவர் விளங்கினார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் பாதுகாப்பாக வாழவும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக் கூடிய சூழலை ஏற்படுத்தவும் வேண்டும் எனக் கருதி அவர் முனைப்புடன் செயற்பட்டார். தமிழ்ச் சமுதாயம் தமக்காகக் குரல் கொடுத்த ஒரு பலம் மிக்க அரசியல் தலைவரை இழந்து விட்டது என்றார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடமாகாண சபை ஒத்தி வைக்கப்பட்டது.

ஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.

இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னைக்கு கிளம்பினார்.

மோடி நண்பகல் 12 மணிக்கு சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து ராஜாஜி அரங்கம் வந்த மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சசிகலாவிடம் சென்று ஆறுதல் கூறினார். சசியின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த முதல்வர் பன்னீர் செல்வம் மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

ஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். முதல்வர் ஜெயலலிதா காலமானார் செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தியைக் கேட்டு தமிழகமே பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்துபோயுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ந் தேதியன்று உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நீர்ச் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நுரையீரல் தொற்று பாதிப்பு உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை கூறியது. இதனால் லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தொடர்ந்து கூறிவந்தார்.


அத்துடன அப்பல்லோ போய்விட்டு வந்த அதிமுக தலைவர்களும், ஜெயலலிதா நன்றாக குணமடைந்துவிட்டார்; வீடு திரும்புகிறார் என கூறி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ந்தது. இதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு ரத்தநாள அடைப்பைப் போக்கும் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். ஆனால் திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாகிவிட்டது எனவும் கூறியிருந்தார். பின்னர் மாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா காலமாகிவிட்டார் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது. அதிமுக தலைமை அலுவலகத்திலேயே கூட அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. பின்னர் மாலை 5.45 மணியளவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடருவதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அப்பல்லோ மருத்துவமனை இதை உறுதி செய்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே என்ற சோகம் ஒட்டுமொத்த தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. ஏழைகளின் காவலராக விளங்கிய எங்கள் தலைவியை நாங்கள் இழந்துவிட்டோமே என கண்ணீரும் கம்பலையுமாக அதிமுகவின் அப்பல்லோ மருத்துவமனைகளில் கட்டுக்கடங்காத வகையில் கூடியுள்ளனர். தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள்

சிகிச்சைக்கு ஜெயலலிதா நன்றாக ஒத்துழைப்பு அளித்த வந்த போதிலும் அவரின் நிலைமை மிகவும்கவலைக்கிடமாக மாறிவிட்டது என ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த லண்டன் மருத்துவர் ரிச்சட் பீல் தெரிவித்துள்ளார்.
"நேற்று ஜெயலலிதா திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்; அவரை அப்போலோ மருத்துவமனையுடன் சேர்ந்து நானும் அவரின் உடல்நிலையை கவனித்து வந்தேன்; அவர் சிகிச்சை தக்க எதிர்வினை தந்தது எனக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்தது; அவர் நன்றாக முன்னேறி வந்தார்.

ஆனால் நிலைமை மிக மிக மோசமானதாக மாறிவிட்டது. எனினும் முடிந்தவரை அவர் இந்த சிக்கலான சூழலில் இருந்து மீள அனைத்து சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
மிக உயர்ந்த நிபுணத்துவம் வாய்ந்த பன்முனை குழுவால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சர்வதேச ரீதியில் கொடுக்கப்படும் அனைத்து உயர்தர சிகிச்சைகளும் அப்போலோவில் இருந்தது என்றும், இ.சி.எம்.ஓ. என்னும், இதயம் மற்றும் நுரையீரல் அவையங்கள் முழுமையாக செயல்படாத நிலையில், வெளியில் செயற்கையான கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரித்து, ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதற்கான மருத்துவ முறை அவருக்கு அளிக்கப்பட்டது
அதுதான் அதிநவீன சிகிச்சை; உலகின் எந்த ஒரு சிறந்த மருத்துவமனையும் கொடுத்திருக்கக் கூடிய சிகிச்சைதான் அது.
இந்த தொழில்நுட்பம் சென்னை அப்போலோவில் இருப்பது அதன் நவீனத்துவத்தைக் காட்டுகிறது.
உலகித்தில் எந்த ஒரு பகுதிக்கும் நிகராக அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையால், சிறந்த சிகிச்சை ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டது" என்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் ஜெயல லிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த ரிச்சர்ட் பீல்.
மேலும் தமிழக மக்களுக்கு தனது பிரார்த்தனைகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம் : அப்பலோ

தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், நேற்று திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இ.சி.எம்.ஓ. (Extra corporeal Membrane Oxygenation) மற்றும் பிற உயிர் பாதுகாப்பு ஆதரவு துணையுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.சி.எம்.ஓ. என்பது, இதயம் மற்றும் நுரையீரல் அவையங்கள் முழுமையாக செயல்படாத நிலையில், வெளியில் செயற்கையான கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரித்து, ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதற்கான மருத்துவ முறையாகும்.

மைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு

அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள, மைக் பென்ஸ் நேற்றிரவு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருப்பதுடன், அமெரி க்காவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதி பதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து வரவேற்புத் தெரிவித்த மைக் பென்ஸ், இலங்கைக்கு எந்த உதவிகளையும் அமெரிக்கா வழங்கத் தயாராக இருக்கும் என்ற உறுதி மொழி யையும் கொடுத்தார்.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்த தொலைபேசி உரையாடலில் கவனம் செலு த்தப்பட்டது.

இதற்காக, அமெரிக்காவுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு மைக் பென்ஸ் அழைப்பு விடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை விடுவிக்குமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன கடந்த சனிக்கிழைமை தெரிவித்திருந்த நிலை யிலேயே அவருக்கு அமெரிக்காவிடம் இருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு

அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தாக்கல் செய்துள்ள பிணை மனு எதிர்வரும் ஐந்தாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

கருணா அம்மான் சார்பில் அவரது சட்டத்தரணி நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனு தாக்கல்செய்யப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் மீள்குடியேற்ற பிரதி அமை ச்சராக இருந்த கருணா அம்மான் அரச வசாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதால் அரசாங்க த்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுசெய்யப்பட்டதற்கு அமைய அதனை விசாரித்த பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர் கருணாவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்..

இதற்கமைய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கருணாவை டிசெம்பர் ஏழாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள கருணாவிற்கு சிறைச்சாலையில் பாது காப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி அதனால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை குண்டு துளைக்காத வாகனத்தை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு கடிதம் மூலம் ஜனாதிபதி செயலகத்திற்கு ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும் ஜனாதிபதி செயலகம் குறித்த கடிதத்திற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கருணாவால் அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தை ஆராய்ந்து உறுதிப்படுத்து மாறு பொலிஸ் நிதி மோசடிப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்

நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற மைத்திரி ரணில் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தினாலும் தமிழர் தயாகப் பகுதிகளில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஏற்கனவே மகிந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட விகாரைகளும் புதுப் பொலிவுடன் புனரமைக்கப்பட்டும் வருகின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்ததும் தற்போதும் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருக்கின்றதுமான பகுதிகளில் புதிய புதிய விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வெளியில் பொது மக்கள் வாழ்கின்ற பகுதிகளிலும் இராணுவம் கடற்படையினர் நிலை கொண்டிருக்கின்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட விகாரைகளைப் புனரமைக்கின்ற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாகவும் அதேநேரம் மறைமுகமாகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

இதற்கமைய யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதியில் அமைந்துள்ள சம்பில் துறைப்பிரதேசத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் பெருமளவிலனான தமிழ் மக்களின் நிலங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் பெரியளவிலான விகாரையொன்று ஏற்கனவே அமைக்கப்பட்டு அந்த விகாரையை தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். அதனால் இந்த விகாரைக்கு புது வரைவிலக்கணமும் குறிப்பிடப்பட்டு அதாவது கடல்வழியாக அந்தப் பகுதிக்கு சங்கமித்தை வந்ததாகக் கூறி அது சிங்களப் பிரதேசமாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு கடற்படையாலும் அங்குள்ள பௌத்த பிக்குவாலும் சித்திரிக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் தற்போது அந்த விகாரை புனரமைப்பு வேலைகளும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இப் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். அதனை அண்மித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலப்பரப்பில் கடற்படையினரால் மிகப் பிராமாண்டமான ஹோட்டலொன்றும் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


தெற்கிலிருந்து யாழிற்கு சுற்றுலா என்ற பெயரில் வருகின்ற சிங்கள மக்களுக்கு இங்கு தான் கடற்படையினரதும் இராணுவத்தினரதும் மேலும் சிங்கள அரசியல்வாதிகளதும் உறவினர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு புதிய வரலாறுகளும் கூறப்பட்டு வருகின்றது. மேலும் அந்த விகாரைக்குள்ளும் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட படங்களும் காண்பிக்கப்பட்டு புதிய வரலாறுகளைச் சித்தரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விகாரை உள்ள பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடவும் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவ குடும்பங்களும் பாதிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





திருமலைக்கூட்டத்தில் அரசாங்கத்தை காட்டிக்கொடுக்காத சம்பந்தன்

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான நிலைமைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் எனினும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை எனவும் சம்பந்தன் மழுப்பியுள்ளார்.

இணைப்பை பொறுத்தவரையில் முடிவு எடுப்பதற்கு சில முக்கிய அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் நாங்களும், முஸ்லிம் மக்களும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரமுடியும் என நம்புவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

முஸ்லிம்களுடனான உடன்பாட்டை காணாது இந்த விடயத்தை நிறைவேற்றுவது கடினம். அதேவேளை எங்களுடைய இணக்கப்பாடும், எங்களுடனான ஒற்றுமையும் இல்லாது அவர்களாலும் ஒரு தீர்வை பெற முடியாது. இதனால் இவ்விடயத்தில் இருதரப்பும் நன்கு ஆராய்ந்து சில விட்டுக்கொடுப்புக்களுடன் முடிவொன்றை எட்டவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை காண்பதற்கு தாம் முயன்று வருவதாகவும், இந்த வருட இறுதிக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை எட்ட முடியும் என எண்ணுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் புதிய அரசியல் சீர்திருத்த யோசனைகளில் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான எந்தவிதமான திடகாத்திரமான முன்மொழிவுகளும் இல்லை என அரச தரப்பு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…