கருணா எனப்படும் முரளிதரன் கைது
சிங்கள அரசுடன் சேர்ந்து ஒஒட்டுக்குழுவாக இஇயங்கிவந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்றையதினம் ஆஜராகியநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின்போது பிரதி அமைச்சராக பதவி வகித்தகாலத்தில் அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பிலும் ஆட்சி மாறிய நிலையில் அவர் பயன்படுத்திய வாகனங்களை மீளவும் அரசிடம் ஒப்படைக்க தவறியமை குறித்து வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்றையதினம் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசார ணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டநிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தென்னாசிய நாடுகளுக்கான தொடர்பாளர் ஜீன் லெம்பர்ட் தலைமையிலான குழுவொன்று நாளை கொழும்பு வருகின்றது. இந்தக்குழ்வினர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கி இருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகளை அவதானிப்பர்..
அத்துடன் இந்தக் குழுவினர் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்ய விருப்பதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்து ரையாடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்
கொழும்பை அண்மித்த புறநகர் பிரதேசமான வெலிவேரிய ரத்துபஸ்வெல பகுதியில் தமக்கான குடிநீரைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு அடக்கிய சம்பவம் பாரதூரமான குற்றச்செயலென கம்பஹா நீதவான் தீர்ப்பளி த்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தமக்கான குடிநீரைக் கேட்டு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கியதுடன், அதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியதால் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.
சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இளைஞர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், மூன்றாவது இளைஞரின் தலையில் கூரிய ஆயுதமொன்று தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகவும் கம்பஹா நீதவான் காவிந்தியா நாணயக்கார தனது தீர்ப்பில்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ரி 56 ரக 98 இயந்திரத் துப்பாக்கிகள் நீதிமன்றம் கையகப்படுத்தியிருந்த நிலையில் அவை இரசாயன பகுப்பாய்வாளரின் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு அமைய அதில் மூன்று துப்பாக்கிகள் ரத்துபஸ்வெல இளைஞர்களின்
படுகொலையுடன் தொடர்புடையமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்