Super User
தமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா?
இலங்கை மற்றும் இந்திய அரசுகள் தமிழர் தேசிய விடுதலைப்போராட்டத்தின் அடையாளமான தேசியம் தன்னாட்சி என்றவறை அழிப்பதுடன் அதற்கு மாற்றீட்டு அரசியல்கலாச்சாரத்தை உருவாக்க முயற்சி செய்கின்றன. இலங்கை அரசு தமிழர்களின் அரசியல் போராட்டத்தை அடியோடு அழிக்க திட்டம் தீட்டி செயற்படுகின்றது. இந்திய அரசும் அதற்கு துணைபோகின்றது இதுதான் இந்தியாவின் ஈழ மக்கள் தொடர்பான வெளியுறவுக்கொள்கையாகும். இவ்வறு அரசியல் ஆய்வாளர் எழுத்தாளர் கலையழகன் அவர்கள் கூறியுளார்.
உயிரோடை வானொலியில் ஒலிபரப்பாகும் மெய்ப்பொருள் நிகழ்ச்சிவழியாக தனது ஆய்வினைப் பகிர்ந்துகொண்ட அவர் மேலும் கூறுகையில்;
ஈழத்தில் சிவசேனா கட்சி தொடங்கபப்ட்டமை இலங்கை இந்திய அரசுகளின் தமிழ் தேசிய அரசியல் போராட்டத்தினை நசுக்கி இந்தியா போன்று மத, பிராந்திய அரசியல்களை உருவாக்குவதே ஆகும், இதனால் தமிழ் தேசியத்தின் அடையாளம், போராட்டத்தை மெது மெதுவாக சிதைக்கலாம் என்பதே இரு நாடுகளின் திட்டமாகும்.
இது தொடர்பான முழுமையான வடிவத்தினை ஒலிவடிவில் இங்கே கேட்கலாம்.
ராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்?
ராஜபக்ஸாக்களின் செல்வங்கள் டுபாயில் உள்ள வங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருப்ப தாகவும், டுபாய் அரசாங்கம் தகவல்களை வெளியிட மறுக்கின்றது என்றும் ஐ.தே.கட்சியின் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் நான் கூறுவது ஒன்று மட்டுமே, டுபாய்க்கு செல்வதற்கு பதிலாக ஹம்பாந்தோட்டை மற்றும் கல்கிஸ்ஸ சென்று ராஜபக்ஸர்களின் சொத்து தொடர்பில் தகவல் திரட்டுங்கள் என்றே என அனுர தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ஸ, அவரது மகன்களான யோசித ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் டெய்ஸி பாரஸ்ட் ஆகியோரின் பெயர்களின் கீழ் பல்வேறு உடைமைகள் பட்டியலிடப்பட்டு ள்ளதாக அனுர கூறியுள்ளார்.
மேலும், பசில் ராஜபக்ஸவிற்கும் கம்பஹா தொடக்கம் கல்கிஸ்ஸ வரை மற்றும் அம்பா ந்தோட்டை தொடக்கம் கொழும்பு - 7 வரையில் நிலங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஸவிற்கு ரூபா 379 மில்லியன் பெறுமதியுள்ள சொந்தமான நிலம் ஒன்று எப்படி இருக்க முடியும் என அனுர இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இவ்வளவு சொத்துக்களை சேர்த்து அவர்கள் என்ன செய்தார்கள்? இவை அனைத்தும் மக்களுக்குச் சேர்ந்தவையே என அனுர தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற திருடர்களே ராஜபக்ஸர்கள் என அவர் கூறியுள்ளார்.
பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக பல்வேறு வழக்குகள் இருந்த போதிலும் விசாரணைகள் நீடிக்கப்பட்டே செல்வதாக நீதித்துறை அமைப்பு மீது அனுர விமர்சனம் தெரிவித்துள்ளார்.
பசிலுடன் தொடர்புடைய வழக்கு ஒன்று கடந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ப்பட்டது, ஆனால் தற்போது அந்த வழக்கு அடுத்த வருட மார்ச் மாதம் வரை பிற்போடப்ப ட்டுள்ளது.
எங்கள் நீதிபதிகளுக்கு வேலைப்பளு அதிகம் இருப்பதால் இந்த வழக்குகள் ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை மாத்திரம்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமோ தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளோம், ஆனால் அது தொடர்பில் இது வரையிலும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்து ள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு : அரசாங்கம்
ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிடன் விலகுவது தாமதமாகும்
முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைத் துவக்குதவற்கு, அதற்கான விதிமுறைகளின் பிரிவைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரிட்டன் அரசாங்கத்தின் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அரச சிறப்பு அதிகாரம் என்ற பெயரில், நாடாளுமன்றத்தைத் தவிர்த்துவிட்டு அரசாங்கம் செயல்பட முடியாது என்று, பிரசாரகர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் நடைமுறைகளைத் துவக்குவதை, இந்தத் தீர்ப்பு எந்த வகையிலும் தாமதப்படுத்த அனுமதிக்கும் திட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய ராஜ்ஜிய அரசாங்கத்தில் நிலவும் உச்சபட்ச குழப்பத்தை இந்தத் தீர்ப்பு வெளிப்படுத்துவதாக ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள, பிரிட்டன் வெளியேற்றம் தொடர்பாக பேச்சு நடத்தும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதி கய் வெரோஃப்ஸ்டட், லண்டனில் உள்ள நாடாளுமன்றத்தைஇதில் ஈடுபடுத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளார். இருபுறமும், நாடாளுமன்ற ஆய்வுக்கு உட்படுத்துவது, பொருத்தமான, இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியம் இதுகுறித்து மேலும் தெளிவாக்க வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்கல் கட்சியின் மூத்த பிரதிநிதி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
எழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை
தமிழ் மக்களின் தன்னியல்பான மக்கள் எழுச்சி நிகழ்வான எழுக தமிழ் எழுச்சிக்கு எதிர்ப்புணர்வினை நேரடியாக காட்ட இயலாத சிங்கள அரசு மாணவர்களை படுகொலை செய்து பதிலடி கொடுத்துள்ளது.
அரசியல் ஆய்வாளர் திரு மு திருனாவுக்கரசு அவர்கள் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்வானொலியான உயிரோடையில் இடம்பெற்ற கலந்துரயாடல் நிகழ்ச்சியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள பொலிசாரினால் கொல்லபப்ட்டது ஒரு சாதாரண விடயம் அல்ல இது ஒரு திட்டமிட்ட பதிலடித் தாக்குதல். சிங்கள அரசு காலங்காலமாக தமிழர் எழுச்சி நிகழ்வுகளை ஆயுதமுனையில் அடக்கிய வரலாறுகளே உள்ளன அதற்கு இந்த தாக்குதல் சம்பவமும் ஓர் எடுத்துக்காட்டு.
யாழ் பல்கலைகக்ழகம் இலங்கையிலேயே ஓர் முன்னுதாரணமான கல்விச்சாலை அது ஒரு அரசியல், சமூக, பண்பாட்டு விழுமியங்களை சுமந்து செல்லும் பல்கலைக்கழகம். தமிழ் மக்களது இந்த உயர் கல்வி வளாகத்தில் இருந்துதான் பல்வேறு கால கட்டத்திலும் எழுச்சிக்கான வித்துக்கள் இடப்படுகின்றன, பொங்குதமிழ், எழுக தமிழ் என்பனவும் அப்படித்தான்.
ஆகவேதான் இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாத சிங்கள அரசுகள் தமது கையலகாத்தனத்தை காட்டியுள்ளது. இவ்வாறு திரு மு திருனாவுக்கரசு அவர்கள் விவரித்துள்ளார்.
முழுமையான கலந்துரையாடலை இங்கே கேட்கலாம்
கடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை
ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தைச் சேர்ந்த இந்த தாய் தனது ஆண் குழந்தையுடன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
நேற்று புதன்கிழமை வீட்டைவிட்டு தனது இரண்டாவது ஆண்குழந்தையுடன் வெளியில் சென்ற இந்தப் பெண் வீடு திரும்பாததையடுத்து, அவருடைய கணவனும் உறவினர்களும் தேடியபோது இன்று காலை அவர் கிணற்றில் குழந்தையுடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டிருக்கின்றது.
அயல் கிராமமாகிய பன்றிக்கெய்தகுளத்தில் பாவனையற்ற கிணறு ஒன்றில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.
இறந்தவர்கள் நாகநாதன் சுகந்தினியும், அவருடைய மகனான நாகநாதன் கிந்துஜன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் சொந்தக் கிராமங்களில் மீள்குடியேறியுள்ள பல குடும்பங்கள் அவர்களுக்கேற்ற வாழ்வாதார உதவிகள் கிடைக்காத காரணத்தினால் நுண்கருத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற நுண்கடன் உதவிகளைப் பெற்று வருகின்றனர்.
ஆயினும் அந்த உதவிகளின் மூலம் போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் அவர்கள் பெற்ற கடனை உரிய தவணையில் திருப்பிச் செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்துத் திரும்பியுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு
கடந்த சனிக்கிழமை திடீரென வந்த பௌத்த பிக்குகளைக் கொண்ட ஒரு குழுவினரால், தமிழ்க்கிராமமான மாணிக்கமடுவை அடு த்த மாயக்கல்லி மலை மீது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது.
அந்தப் பகுதியில் பௌத்தர்கள் எவரும் வசிக்காத நிலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையானது அந்தப்பகுதியில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களிடையே அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து, அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன் அவர் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு, மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக, ஆராய்வதற்கு நேற்று அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு, இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், இந்து ஆலய நிர்வாகிகள் மற்றும் புத்தர் சிலை விவகாரத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் , முஸ்லிம் தரப்புகள் பௌத்தர்கள் அல்லாத இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொருத்தமற்றது என்றும், இதனால் எதிர்காலத்தில் பின் விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆனால், அதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இறக்காமம் பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சிக்குரிய 19 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், இந்த விவகாரத்துக்கு சுமுகத் தீர்வு காணும் நோக்கில், தமிழ், முஸ்லிம், பௌத்த பிக்குகள் மற்றும் சிவில் அதிகாரிகளை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழுவொன்று அரசாங்க அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.இந்தக் குழு இன்று கூடி ஆராயவுள்ளது.
லசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம் கசிந்தது
இது தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவை தலைவராக இருந்த, கீர்த்தி கஜநாயக்கவின் கையொப்பத்துடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கொழும்பு ரெலிகிராப் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணத்தில், லசந்த விக்கிரமதுங்கவின் கைத்தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட சில கைத்தொலைபேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு, பாதுகாப்புச் செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கீர்த்தி கஜநாயக்க, தமது அதிகாரிகளைப் பணித்து ள்ளார்.
இந்த கண்காணிப்பு தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்ற குறிப்பையும் அதில் அவர் எழுதியுள்ளார்.
2009 ஜனவரி 9ஆம் திகதி லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டிருந்தார். அதற்கு முன்னதாக, 2008 செப்ரெம்பர் 10ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் கண்காணிக்கப்பட வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளவற்றில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் கைத்தொலைபேசி இலக்கமும் அடங்கியுள்ளது.
ஏனைய தொலைபேசி இலக்கங்களில் பல அரசியல் பிரமுகர்களுடையவை என்றும் தெரியவருகிறது.
மிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள குளிர்பான தொழிற்சாலை ஒன்றில் இருபது மில்லியனிற்கும் அதிகமான மாண்ட்ராக்ஸ் என்று அழைக்கப்படும் போதைப்பொருள் மருந்தான "மெத்தாக்குவாலோன்" மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சோதனை தொடர்பாக, இந்திப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்கா மற்றும் மொசாம்பிக்கிற்கு இந்த போதைப்பொருட்கள் கடத்தப்படவிருந்தன என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஆப்ரிக்கா மற்றும் ஆசியா பகுதிகளில் நடத்தப்படும் இரவுநேர ஆட்ட நிகழ்ச்சிகளில் இந்த போதைப் பொருள் பிரபலமானதாகக் கருதப்படுகிறது.
சீன நாட்டில் காவல்துறையின் வித்தியாசமான தண்டனை
ஷென்ஸென் நகர போக்குவரத்து காவலர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்கில் தங்களுடைய பிரசார நடவடிக்கையின் புகைப்படங்களை பதிந்துள்ளனர். ''நீண்ட தூரம் ஒளிக்கதிரை உமிழும் விளக்குகளை கொண்டு இன்று இரவு நாங்கள் தண்டனைகள் வழங்க உள்ளோம்'' என்ற அவர்களுடைய பதிவு, 87 ஆயிரம் விருப்பங்களை ( லைக்ஸ்) பெற்றுள்ளது.
மேலும், சுமார் 93 ஆயிரம் முறை அது பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களில், வாகனத்தின் முகப்பு விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்க அதற்கு முன்னால் தண்டனை நபர்கள் நேரடியாக அமரவைக்கப்பட்டுள்ளனர்.
சில ஓட்டுநர்கள் 300 யுவான் வரை (44 டாலர்கள் )அபராதம் விதிக்கப்பட்டதாகவும், பின் முகப்பு விளக்குகளுக்கு முன்னால் 60 நொடிகள் அமர வைக்கப்பட்டதாகவும் அதிகாரபூர்வ ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், சில இணையதள செய்தி நிறுவனங்கள், இந்த முகப்பு விளக்கு தண்டனை அவர்களுடைய இஷ்டத்திற்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது; ஆனால், அபராதத்தை செலுத்திய பிறகு, அதற்கு மேல், ஏன் மக்கள் இந்த தண்டனையை தேர்வு செய்வார்கள் என்பது தெளிவாகப் புரியவில்லை.
2014 ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு திட்டத்தை போலிசார் கையாண்ட போது பல விமர்சனங்களை எதிர் கொண்டனர். ஆனால், இருப்பினும் கடந்த செவ்வாய்கிழமை முதல் இந்த முயற்சியை மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ளனர். இந்த முறை, பொதுமக்களின் எதிர்வினை பெரியளவில் சாதகமாக உள்ளது. போலிசாரின் இந்த நடவடிக்கையை பார்த்து, மற்ற பல உள்ளூர் போலிஸ் படையினரும் தங்களுடைய சொந்த சமூக வலைத்தள பக்கங்களில் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், சினா செய்தி நிறுவனத்தின் முக்கிய தளத்தில் நடத்தப்பட்ட வாக்கு பதிவில் சுமார் 90% பேர் போலிசாரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.