சுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு
பிரதேசத்தில் கடமையில் இருந்த இரண்டு காவல்துறையினர் மீது இன்று (23/10/2016) பிற்பகலில் நடந்த வாள் வெட்டு தாக்குதலில், அவர்கள் காயமடைந்திருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சுன்னாகத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் எதிரில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதில் காவல்துறையைச் சேர்ந்த நிமல் பண்டார, பி.எஸ்.நவரட்ன ஆகியோர் காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆறு பேர் கொண்ட குழுவொன்று காவல்துறையினர் மீதான இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது.
வாள்வெட்டு நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அங்கு பெருமளவில் அதிரடி காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
பெருமளவில் குவிக்கப்பட்ட அதிரடி காவல்துறையினர்
இந்தச் சம்பவம் யாழ் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் யாழ் மாவட்டத்தில் அதகரித்திருப்பதையடுத்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்காக களத்தில் இறக்கப்பட்டிருந்த விசேட காவல்துறை அணியொன்று யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப்பகுதியில், வியாழக்கிழமை இரவு கடமையில் இருந்தபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து யாழ் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையைத் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருந்த சூழலிலேயே இந்த வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குளப்பிட்டிச் சந்தி சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவராகிய பவுண்ராஜ் எனப்படும் விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவன் சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவனாகிய நடராஜா கஜனின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றுள்ளது. பெருந்திரளான மக்கள் இந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி கிளாலி பகுதி குண்டு வெடிப்பில் ஒருவர் மரணம்
இதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் கிளாலி என்ற இடத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பிரதேசத்திற்குள் சென்றபோது, குண்டொன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றுமொருவர் காயமடைந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பளை ஆர்த்திநகரைச் சேர்ந்த 37 வயதுடைய கறுப்பையா ராஜா என்பவர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.