வடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும் குவிக்கப்படவேண்டும்- மஹிந்த‌

வட மாகாணத்தில் இராணுவ புலனாய்வு செயற்பாடுகளை அதிகரிக்க‌ வேண்டும் என போர்க்குற்றவாளி மஹிந்த‌ ராஜபக்ஷ தெரிவி த்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதி பதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த மஹிந்த‌, ‘வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமானது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறு த்தலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாம் ஏற்கனவே பலமுறை சுட்டி க்காட்டி உள்ளோம். ஆனால் நமது கருத்துக்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற யாழ். சம்பவம் இதனை உறுதிபடுத்தியுள்ளது. எனவே நாட்டின் தேசிய பாதுகாப்பை கரு த்திற்கொண்டு வடக்கில் புலனாய்வு செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அத்துடன் வடக்கில் பொலிஸ் நிலையங்களை அதிகரிப்பதுடன், இராணுவ முகாம்களை தொடர்ந்து பேண வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.

மஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி

ஜனாதிபதியின் கருத்தை காரணம் காட்டி பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு திசை திருப்பப்படுவதாக சந்தியா எக்னலிகொட குற்றம் சுமத்தினார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

81 மாதகாலமாக தீர்வுக்காக போராடுகின்றோம் ஆனால் அண்மையில் ஜனாதிபதி இராணுவ தளபதிகள் பற்றி கூறிய கருத்தை அடிப்படையாக கொண்டு எக்னலிகொட வழக்கு திசை திருப்பப்படுகின்றது.

மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொருவராலும் இழைக்கப்படும் குற்றம் நாட்டுக்கே இழைக்கப்படும் குற்றமாகும் இவ்வாறானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதே நியதி.

ஆனால் எக்னலிகொடவின் விடயத்தில் அரசாங்கம் பக்கசார்பாக நடந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றிக் கொண்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை எக்னலிகொட விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தமைக்கு சான்றுகள் இல்லை, இது தொடர்பில் எந்தவித வழக்குகளும் இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் 'கொட்டி சந்தியா" (புலி சந்தியா) என்ற பெயர் எனக்கு வந்திருப்பது மிகுந்த வேதனை தருகின்றது எனவும் சந்தியா எக்னலிகொட தெரிவித்தார்.

எனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா?

மஹிந்த மற்றும் அவர்கள் சார்பானவர்களின் மோசடிகள் பற்றி விசாரிக்க முன்பாகவே மஹிந்தவுக்கு அந்த செய்திகள் காதில் எட்டிவிடுகின்றது.ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும் உள்ளனர் அமைச்சர் ராஜித சேனாரட்னா கூறியுள்ளார்.

அமைச்ரவை தீர்மானங்களை தெரிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி இரகசியமாக எடுக்கும் நடவடிக்கைகள், ஒரு சிலரது தனிப்பட்ட விபரங்கள் தொடர்பில் ஆராயும் போது அவை எந்த வழியிலேனும் மஹிந்த ராஜபக்ஷவை சென்றடைந்து விடுகின்றன. ஆரம்பத்தில் இருந்து இவ்வாறு இரகசியங்களை ஒருசிலர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்து வருகின்றனர்.

ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும் உள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் ஒருசிலர் குற்றவாளிகளுக்கு எதிராக ஏதேனும் நகர்வுகளை எடுக்கும் போது அதை வெளிப்படுத்தி உண்மைகளை மறைத்து விடுகின்றனர்.

அதேபோல் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்புடைய விவகாரம் தொடர்பில் இன்னும் அரசாங்கம் வாய்திறக்கவில்லை. நிதி மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு டுபாய் வங்கிக் கணக்குகளில் யார்? யார் நிதியை பதுக்கி வைத்துள்ளனர் என்ற விபரத்தை பெறுவதற்கு அனுமதி பெற்றார்.

ஆனால் அவர் அவ்வாறு செயற்பட்டு ஒருமணி நேரத்தில் மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு தமது சொத்துக்களை விசாரிக்கவும் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை எடுப்பதாக கூறுவது உண்மையா என வினவுகின்றார்.

மைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்

மைத்திரிபால சிறிசேனாவின் கோத்தபாயமற்றும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு சார்பான அதீத நடவடிக்கைகள் பலருக்கும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.இதன் ஒரு அங்கமாக‌
ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஊழல் விசாரணை ஆணைக்குழு மீது மைத்ரிபால விமர்சனம்

அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட மூன்று கடற்படை தளபதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

அந்த ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, இவ்வாறு செயல்பட்டால் அந்த ஆணைக்குழுவிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடுமென்றும் என்று எச்சரித்திருந்தார்.

இந்த பின்னணியில், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினாமா செய்துள்ளார்.

மஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்

கொழும்பை அண்மித்த புறநகர் பிரதேசமான வெலிவேரிய ரத்துபஸ்வெல பகுதியில் தமக்கான குடிநீரைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு அடக்கிய சம்பவம் பாரதூரமான குற்றச்செயலென கம்பஹா நீதவான் தீர்ப்பளி த்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தமக்கான குடிநீரைக் கேட்டு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கியதுடன், அதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியதால் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.

சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இளைஞர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், மூன்றாவது இளைஞரின் தலையில் கூரிய ஆயுதமொன்று தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகவும் கம்பஹா நீதவான் காவிந்தியா நாணயக்கார தனது தீர்ப்பில்
குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ரி 56 ரக 98 இயந்திரத் துப்பாக்கிகள் நீதிமன்றம் கையகப்படுத்தியிருந்த நிலையில் அவை இரசாயன பகுப்பாய்வாளரின் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு அமைய அதில் மூன்று துப்பாக்கிகள் ரத்துபஸ்வெல இளைஞர்களின்
படுகொலையுடன் தொடர்புடையமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…