தமிழகம்
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம்
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவரப்போவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும் என்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்தில் அனல் பறக்கிறது. அக்னியின் வீச்சு தலைமைச் செயலகத்தை எட்டிப்பார்க்க, உடனடியாக டெல்லி கிளம்பினார் பிரதமர் ஓ.பன்னீர்…
போராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்
மெரினாவில் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாக சென்னை காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியான தகவலையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர். சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டுள்ளனர்.மாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு…
மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்
மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.மாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது.…
போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள்
தமிழ் நாடு: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக கருத்து தெரிவித்தால், பேசினால், பதிவிட்டால் கைது என்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு விரோதமானதாகும். இதற்கு எதிராக தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மாநிலம் முழுவதும் கொந்தளித்துப் போராட்டம் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு, கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கைது என்று தமிழக போலீஸார் களம் குதித்துள்ளனர். அதிமுகவினர்…
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று இரண்டு பெண் டாக்டர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவிற்கு இயந்திரத்தின் மூலம் பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கவே இந்த சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்…
பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்
சென்னையில் வியாழக்கிழமையன்று தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விபத்துகள் நடக்கும்போது ஓட்டுனரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறை சரியாகப் பின்பற்றப்படாத காரணத்தால்தான் இம்மாதிரி விபத்துகள் தொடர்ந்து நடப்பதாக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.சென்னை குடிநீர் வடிகால் வாரியம், காவல்துறை, போக்குவரத்துத் துறையின் அலட்சியமே இதற்குக் காரணம் என செய்திகளிலிருந்து அறிய வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.ஆகவே இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர்…