தமிழகம்
தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி
சென்னையைச் சேர்ந்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் கார் விபத்து ஒன்றில் பலியாகினர்.சனிக்கிழமையன்று அதிகாலை மூன்று முப்பது மணியளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து போரூரை நோக்கிச் செல்லும்போது சாந்தோமுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அவர்கள் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியது. இதில் கார் உடனடியாகத் தீப்பிடித்தது.காரிலிருந்து அவர்களால் இறங்க முடியாத நிலையில், இருவரும் உடல் கருகி பலியாகினர்.தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து இருவரது உடல்களையும் மீட்டனர்.கார் அதிவேகத்தில் ஓட்டப்பட்டது இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என…
சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா?
சசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு "சிறை" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.இதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த…
தெரு நாய் - எருத்துமாடு மோசடி! வழக்கு வாபஸ்
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான…
தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்
சல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.இதனிடையே சல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.தற்போது சல்லிக்கட்டுக்கு எதிரான…
தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை
தமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல்…
தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.இந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில்…