உலகம்

ட்ரம்ப் முன்னிலையில், ஹிலாரி ஆதரவாளர்கள் சோகத்தில்

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பல கணிப்புகளையும் விட சிறப்பான முறையில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு வேட்பளர்களுக்கும் இடையிலான ஆதரவில் ஊசல் நிலையில் உள்ள முக்கிய மாநிலங்களான ஃ புளோரிடா மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேர்தல்துவங்கியது, முடிவுகள் நாளையில் இருந்து..

அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க உள்ள அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.அமெரிக்காவில் உள்ள அனைத்து 50 மாநிலங்களும், நிர்வாகத் தலைநகரான வாஷிங்டன் டிசி பகுதியும், ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் தங்கள் வாக்குப்பதிவை செலுத்தவுள்ளன.நாட்டின் மேற்கு கடற்கரை பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பாக, கடும் போட்டி நிலவும் முக்கிய மாநிலங்களான வர்ஜினியா மற்றும் ஜார்ஜியா ஆகியவற்றில் நள்ளிரவில் (ஜிஎம்டி நேரப்படி) முதல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடும் போட்டி நிலவும் சில முக்கியமான…

டொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு

அமெரிக்க அதிபர் தேர்வுக்கான வேட்பளாரான டொனால்ட் ட்ரும்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தினருக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதுகூட்டத்தினருக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டவுடன் அங்கிருந்து உடனே வெளியேற்றப்பட்டார் ட்ரம்ப்; எனினும் சிறிது நேரம் கழித்து தனது உரையை முடிப்பதற்காக திரும்ப வந்தார் ட்ரம்ப்.தேர்தல் பிரசாரத்தில், நெவாடாவில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட பாதுகாப்பு சர்ச்சைக்கு பிறகு தனது ரகசிய சேவை பாதுகாவலர்களால் மேடையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்.போலிஸாரால் இது குறித்து ஒருவர் சிறிது நேரம் கைது செய்யப்பட்டார்; ஆனால் அவரிடம்…

பரிஸ் பருவனிலை ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்றது

பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பாக கையெழுத்தான உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.தொழிற் புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக இரண்டு டிகிரி உலக வெப்பமயமாதலைக் குறைப்பதை இது இலக்காகக் கொண்டிருக்கிறது.பலத்த புயல்கள், வறட்சிகள் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்தல் உள்பட ஆபத்தான பருவநிலை மாற்றங்களை தவிர்ப்பதற்கு இந்த இலக்கு முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.தொழிற் புரட்சி மேற்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பை…

தென் அபிரிக்க அதிபர் சிறைக்கு செல்ல தயாராம்

தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேகப் ஸூமா, சிறைக்கு செல்வதற்காக தான் ஒரு போதும் அஞ்சியதில்லை என்றும், காரணம் இனவெறியை எதிர்க்கும் ஆர்வலராக இருந்த போது 10 ஆண்டுகள் சிறையில் கழித்ததாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.பணக்கார இந்திய வர்த்தகர்களுடனான சில ஒப்பந்தங்களில் ஜேகப் ஸூமா மற்றும் மூத்த அரசாங்க பிரபலங்கள் முறையின்றி செயல்பட்டார்களா என்பது குறித்த ஒரு நீதித்துறை விசாரணையை ஊழல் தடுப்பு அமைப்பு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்ததை தொடர்ந்து அவரிடமிருந்து வரும் முதல் பொதுவான கருத்து இதுவாகும்.நட்டல் மாகாணத்தில் உள்ள குவா ஸூலுவில் ஆயிரக்கணக்கான உற்சாக…

ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிடன் விலகுவது தாமதமாகும்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிவது நீதிமன்ற முடிவால் தாமதமாகும் என அறியமுடிகின்றது.முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைத் துவக்குதவற்கு, அதற்கான விதிமுறைகளின் பிரிவைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரிட்டன் அரசாங்கத்தின் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அரச சிறப்பு அதிகாரம் என்ற பெயரில், நாடாளுமன்றத்தைத் தவிர்த்துவிட்டு அரசாங்கம் செயல்பட முடியாது என்று, பிரசாரகர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக…

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…