ரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்
கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் பிணை,முறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அதற்குத் துணைசென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“முதலில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் நியமனமானது அரசியல் யாப்பு சபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. அவர் முறையாக பதவி யேற்கவில்லை. இது நடைமுறை யாப்பிற்கு எதிரானது. இது திட்டமிடப்பட்ட ஒரு கொள்ளைச் சம்பவம். இதில் சந்தேகம் இல்லை. இது தவறுதலாகவோ தெரியாமலோ நடந்த விடயமல்ல.
ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி பதவியேற்கின்றார், 9ஆம் திகதி பிரதமர் பதவியேற்கின்றார். ஒருசில தினங்களில் மத்திய வங்கி பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இந்த நாட்டின் பிரஜையல்லாதவர் ஆளுநராக பதவியேற்கின்றார். நல்லாட்சி அரசாங்கம் தற்போது நான்முனை சந்தியில் ஆடையின்றி நிற்கின்றது. நல்லாட்சி லேபலை ஒட்டிக்கொண்டுதான் ஊழலில் ஈடுபட்டனர். கடந்த 40 வருட அரசியல் வாழ்வில் இரண்டு விடயங்கள ஊடாகவே பயணிக்கின்றார்.
ஒன்று பொருளாதாரத்தை மிகவிரைவாக அபிவிருத்தி செய்வதாக கூறுவார். மூன்று முறை பிரதமரானார் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். இரண்டாவது காரணம் கொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தது. எனினும் அவர் ஒரு நாளும் ஊழலில் ஈடுபடமாட்டார் என நீங்கள் தெரிவிக்கலாம். எனினும் இந்த மிகப்பெரிய கொள்ளையுடன் மக்கள் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும். இது தவறுதலாக நடந்த விடயமல்ல. நாங்கள் கொள்ளையர்கள் என தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.
எனினும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனினும் அவருடன் இணைந்திருக்கும் அர்ஜுன மகேந்திரன் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. ஆகவே இது தொடர்பில் மேலும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளையே இது” - என்றார்.