ஐங்கரன்-ஐரோப்பா
அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்
அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்.
(இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழு_தமிழீழவிடுதலைப்புலிகள் சார்பான பிரதிநிதி மன்னார் மாவட்டம்)
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மரியநாயகம் மாஸ்டர் அவர்களின் இழப்புச்செய்தியறிந்து ஆழ்ந்த துயரத்தில் வேதனையடைகின்றோம்.மக்கள் கல்விச்சமூகம் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் உயரிய போராளிகள் பொறுப்பாளர்கள் தளபதிகள் என இவரது தேசப்பற்றுக்கென்று தனித்துவமான மரியாதைக்குரியவராக திகழ்ந்தவர்.
இவர் ஆங்கில ஆசிரியராக பள்ளிமுதல்வராக ஆங்கில கல்விக்கான உதவிக்கல்விப்பணிப்பாளராக தனது பணியின் ஊடாக அரச உயர்பதவிகளைப்பெற்று ஓய்வு நிலைபெற்ற சமகாலத்தில் தாயக விடுதலைப்போராட்ட எழுச்சிமிகுகாலத்தை உருவாக்க போராளிகளுடன் இணைந்து பக்கபலமாக உழைத்த உண்மைத்துவமான மனிதர்.
தமிழர் புனவாழ்வுக்கழகம் மன்னார் மாவட்ட தலைவராக இருந்து மக்களுக்கான உடனடிமனிதாபிமான பணிகள்,இடைக்கால பணிகள்,நீண்டகாலபணிகள் என முகாமைத்துவ குழு ஊடாக திட்டமிட்டு மக்களது துன்பியல் இடம்பெயர்வு மீள்குடியேற்ற வாழ்வியலை இனங்கண்டு பணியாற்றயவர்.
மன்னார்மாவட்டத்தில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களை உள்ளடக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தலைவராக பணியாற்றியவர்.
தாயக விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக சமாதான பேச்சுவார்த்தைக்காலபகுதியில் சரவதேச மத்தியஸ்தத்ததுடன் உருவாக்கப்பட்ட இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் விடுதலைப்புலிகள் அமைப்பின் மன்னார்மாவட்டம் சார்பான பிரதிநிதியாக அருட்திரு.சேவியர்குரூஸ் அடிகள், திரு.ப.மரியநாயகம் குரூஸ் இருவரையும் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்துறை நடுவப்பணியத்தால் நியமிக்கப்பட்டவர்களாவர். இவரது கண்ணியமான பணியின் மூலம் அவ்வப்போது இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவின் நிலவரம் இலங்கை அரசபடைகளின் போர்நிறுத்தமீறல்கள் விடுதலைப்புலிகளின் எதிர்பார்ப்பு க்களை உடனுக்குடன் தெரியப்படுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் நியாயத்தன்மையினை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிற்கு தெரியப்படுத்தி விடுதலைப்போராட்டத்தை சரவதேச மத்தியஸ்துவம் வகித்தவர்களுக்கு அறியப்டுத்திய தேசப்பற்றாளன்.
தொடர்ந்து வந்த காலம் சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தமிழர்தாயக பிரதேசம் எங்கும் போர் தொடுத்த காலம் மன்னார் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை மக்கள் எதிர்நோக்கிய அத்தனை இடம்பெயர்வுகளிலும் தானும் ஒருவனாக துயரினைச்சுமந்து அவ்வப்போது மக்களுக்கு தேவையான பணிகளை தமிழர்புனர்வாழ்வுக்கழகத்தின் பணிப்பாளர்களுடன் இணைந்து செயற்படுத்தியவர்.
போரின் உச்சக்கட்டம் வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பாரிய இடம்பெயர்வில் மக்கள் சொல்லொணா துயரத்துள்சிறிலங்கா அரசு நடாத்திய ஆகாய கடல் தரைவழிமூலமான மும்முனைத்தாக்குதலில் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட வேளையில் தனது அன்புக்குரிய வாழ்க்கைத்துணைவி ரமணி அன்ரியை இழந்தார் அவரது ஆறாத்துயருடன் தாயக விடுதலைப்போராட்டமும் ஓரிரு வாரங்களில் மௌனிக்கப்பட்டது.வேதனையின் விழிம்பிலும் அழிவில் இருந்து துவண்டு மீண்டும் தன்னைத்தானே சுதாகரித்துக்கொண்டு தனது இறுதிக்காலம் வரை மக்களுக்கும் மண்ணுக்கும் விசுவாசமாக தன்னால் இயன்ற பணியை பற்றுதியுடன் தனது சொந்த இடமான பறப்பான்கண்டலில் இருந்து செய்து வந்தவர்.
வாழும்வரை தனக்கென்று எந்த வித சுயநல எதிர்பார்ப்பின்றி தன்னலம் கருதாது பொதுநல சிந்தனையுடன் வாழ்ந்த தேசப்பற்றுமிக்க மரியநாயகம் மாஸ்டர் மக்கள் மனங்களில் நிறைந்தவராக என்றும் இருப்பார்.இவருக்கான இறுதிவணக்கத்தையும் இறுதி அஞ்சலியையும் இதயபூர்வமாக இணையவழியில் பகிர்வதில் ஆத்மதிருப்தியடைகிறேன்.
இனியவன்.
10.04.2020.
ஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம்
அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர்; அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர்.
இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இறப்பு மற்றும் தொற்றுக்கள் குறைவடையத்தொடங்கியுள்ளன. இதே வேளை அமெரிக்கா இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தற்போது இறப்பு வீதம் குறையும் நிலையில் இல்லை என்பதனை அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறிவருகின்றனர்.
ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை ஆகிய நாடுகளில் பரவும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதே நேரம் ஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.
இதே நேரம் தற்போது 1,710,324 அளவில் தொற்றுக்குள்ளானோர் காணப்படுகின்றனர். இன்னும் ஒரிரு நாட்களில் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டோர் தொகை 20 இலட்சமாக இருக்கும் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன
தற்போதைய உத்திகளை நிறுத்தினால் உலகம் பேரிடரை சந்திக்கும்
பொருளாதார தாக்கம் இருக்கும் என்றாலும், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து நிதானமாக செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றாலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய டெட்ரோஸ், சில ஐரோப்பிய நாடுகளில் இந்த பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவது நல்ல அறிகுறியாக இருப்பதாக குறிப்பிட்டார்.
ஆனால், அவசரப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கினால், பாதிப்பு எண்ணிக்கை மிக மோசமாக அதிகரிக்கும் என்று டெட்ரோஸ் எச்சரித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது எவ்வளவு ஆபத்தானதோ, அதே ஆபத்து இத்தொற்று குறையும்போதும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து ஒவ்வொரு அரசாங்கத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் தனித்திட்டம் இடும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி
இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 84 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்களான 54 வயது பெண் ஒருவரும் 25 வயது ஆண் ஒருவரும் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.