மாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத் தடை

சிங்கள காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று இரணைமடு பொது மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

காலை பத்து மணிக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் என பெரும் திரளானவா்கள் கலந்துகொள்ள இறுதி ஊா்வலம் இடம்பெ ற்றது.

நிகழ்வின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா இரங்கல் உரை யாற்றிக்கொண்டிருந்த போது தங்களது கடும் எதிா்ப்பினை தெரிவித்த பல்கலைக்கழக மாணவா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி வாங்கிகளை கழற்றி எறிந்தனர்.. அத்தோடு ஊடகவியலாளா்களையும் வெளியேறுமாறும் அவா்கள் கூச்சலிட்டனா். இதனால் அங்கு சிறுது நேரம் அமைதியின்மை ஏற்ப்பட்டது.

மேலும் எந்த அரசியல்வாதிகளும் இங்கு உரையாற்றக் கூடாது என பல்கலைக்கழக மாணவா்கள் தெரிவித்த நிலையில் அங்கு வருகை தந்திருந்த பாராளுன்ற உறுப்பினா்கள், மாகாண சபை உறுப்பினா்கள் எவரையும் ஏற்பாட்டாளா்கள் பேசுவதற்கு அனும தியளிக்கவில்லை.

பின்னா் கிராம மட்ட அமைப்புகள், ஒரு சில மாணவா்களின் உரையுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று நிறைவுற்றது.

பொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி

கொக்குவிலில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலி சாரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்

இது குறித்து மேலும் தெரியவருவதாவது கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த பல்கலை க்கழக மாணவர்களின் பிரேத பரிசோதனையில் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் இறந்தார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை இச் சம்பவம் தொடர்பாக 5 பொலிசாரை கைது செய்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

அந்த ஐந்து பொலிசாரும் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது ஐவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் சதீஸ்க ரன் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸாரையும் யாழ்ப்பாண சிறைச்சாலை பாது காப்பற்றதென பொலிஸார் தெரிவித்தநிலையில் அவர்களை அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் எதிர்வரும் 24ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழில் கலைப்பீட மாணவர்கள் பலி

யாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசாசுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள்.

உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் சதீஸ்கரன் விசாரணைகளளை மேற்கொண்டார்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவு தீக்குச்சிகள் சிதறிய நிலையில் காணப்படுகின்றன.

கடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி

தெற்கில் கோத்தபாய ராஜபக்ஷ கும்பலால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாண வர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என கடற்படைப் புலனாய்வு பிரி வின் சிப்பாய் அளுத் கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களில் மூவர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னி லையில் இடம்பெற்றது.

குறித்த 5 மாணவர்களும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு தாமே உணவு வழங்கியதாகவும், அவர்களுடன் உரையாடியிருப்பதாகவும் மன்றில் சாட்சியமளிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மாணவர்களுடனான உரையாடலின்போது விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை என்பதை தாம் புரிந்துகொண்டதாகவும் குறித்த கடற்படை புலனாய்வுப் பிரிவின் சிப்பாய் மன்றில் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட மறுதினமே கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வான் ஒன்றில் குறித்த 5 மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களுடன் மென்டிஸ் எனும் கடற்படை சிப்பாயும், அம்பாறை காமினி எனும் நபரும் சென்றிருந்ததாகவும் சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட ஐவரில் கொழும்பு - கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், மற்றும் திகலேஸ்வரன் ராமலிங்கம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக இந்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நேற்றைய சாட்சியங்கள் முடிந்த பின்னர் அரச சட்டவாதிக்கு சாட்சியிடம் குறுக்கு விசாரணை செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

எனினும் குறுக்கு விசாரணை செய்வதற்கு அரச சட்டவாதி கால அவகாசம் கோரியிருந்தார்.
இதனைக் கவனத்திற்கு எடுத்த நீதிமன்றம், இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்

சென்னையில் வியாழக்கிழமையன்று தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விபத்துகள் நடக்கும்போது ஓட்டுனரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறை சரியாகப் பின்பற்றப்படாத காரணத்தால்தான் இம்மாதிரி விபத்துகள் தொடர்ந்து நடப்பதாக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை குடிநீர் வடிகால் வாரியம், காவல்துறை, போக்குவரத்துத் துறையின் அலட்சியமே இதற்குக் காரணம் என செய்திகளிலிருந்து அறிய வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆகவே இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டுமென கோருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

தண்ணீர் லாரிகளுக்கான விதிகள், ஒரு நாளைக்கு எத்தனை முறை அவை தண்ணீர் ஏற்றிச் செல்லலாம், தண்ணீர் லாரி தொடர்பான விபத்துகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்தவர்கள் குறித்த விவரம், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இம்மாதிரியான விபத்துகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.

மாநில போக்குவரத்துத் துறை, காவல்துறை, பிற நிர்வாக அதிகாரிகள் விதிமுறைகளைச் சரியாக பின்பற்றாத காரணத்தினாலேயே சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் பெரும் அபாயத்தை எதிர்கொள்வதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…