கோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு : அரசாங்கம்
ஆவா குழுவிற்கும் – கோட்டாபயவிற்கும் இருக்கும் தொடர்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ராஜித்த குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆவா குழு என்பது கோட்டாபயவின் ஒரு படைப்பென கூறியிருந்தார். எனினும், அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை கோட்டாபய முழுமையாக மறுத்திருந்தார்.
ஆவா குழு ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் தனக்குத் தெரியாது என கோட்டாபய ராஜபக்ஸ கூறியிருந்தாலும், அவருடைய முழுமையான ஆசீர்வாதத்துடனேயே அந்தக் குழு ஆரம்பிக்க ப்பட்டதாகவும், அது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோசப் பரராஜசிங்கம், பிரதீப் எக்னலிகொட, நடராஜா ரவிராஜ் மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் படுகொலைகளிலிருந்து கோட்டாபய தலைமையிலான குழுவினரால், தப்பிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.
இந்தக் கொலைகள் பற்றிய விசாரணைகளின் இறுதியில் உண்மையில் யார் தொடர்புபட்டு ள்ளார்கள் என்ற உண்மையை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
ஆவா குழு தொடர்பில் தான் கூறிய கருத்து இராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது என கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும், இராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் தான் எதனையும் கூறவில்லையென்றும், இவ்வாறான குழுக்களை உருவாக்குவதற்காக இராணுவத்தினரை அனுப்பி அவர்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியது கோட்டாபய ராஜபக்ஸ தான் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் பகுதியில் புலனாய்வு அதிகாரிகள் மீது வாள் வெட்டு சம்பவத்துக்கு உரிமை கோரி ஆவா குழு என்ற பெயரில் துண்டுப் பிரசுரமொன்று வெளியிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆவா குழு தொடர்பில் பல கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இந்தக் குழு உருவானதன் பின்னணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையிலேயே கோட்டாபயவே ஆவா குழுவின் உருவாக்கத்தின் பின்னணி யில் இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார். எனினும் இக்குற்றச்சா ட்டை கோட்டாபய ராஜபக்ஸ மறுத்திருந்த நிலையில், தனது குற்றச்சாட்டை அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா?
மஹிந்த மற்றும் அவர்கள் சார்பானவர்களின் மோசடிகள் பற்றி விசாரிக்க முன்பாகவே மஹிந்தவுக்கு அந்த செய்திகள் காதில் எட்டிவிடுகின்றது.ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும் உள்ளனர் அமைச்சர் ராஜித சேனாரட்னா கூறியுள்ளார்.
அமைச்ரவை தீர்மானங்களை தெரிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி இரகசியமாக எடுக்கும் நடவடிக்கைகள், ஒரு சிலரது தனிப்பட்ட விபரங்கள் தொடர்பில் ஆராயும் போது அவை எந்த வழியிலேனும் மஹிந்த ராஜபக்ஷவை சென்றடைந்து விடுகின்றன. ஆரம்பத்தில் இருந்து இவ்வாறு இரகசியங்களை ஒருசிலர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்து வருகின்றனர்.
ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும் உள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் ஒருசிலர் குற்றவாளிகளுக்கு எதிராக ஏதேனும் நகர்வுகளை எடுக்கும் போது அதை வெளிப்படுத்தி உண்மைகளை மறைத்து விடுகின்றனர்.
அதேபோல் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்புடைய விவகாரம் தொடர்பில் இன்னும் அரசாங்கம் வாய்திறக்கவில்லை. நிதி மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு டுபாய் வங்கிக் கணக்குகளில் யார்? யார் நிதியை பதுக்கி வைத்துள்ளனர் என்ற விபரத்தை பெறுவதற்கு அனுமதி பெற்றார்.
ஆனால் அவர் அவ்வாறு செயற்பட்டு ஒருமணி நேரத்தில் மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு தமது சொத்துக்களை விசாரிக்கவும் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை எடுப்பதாக கூறுவது உண்மையா என வினவுகின்றார்.