பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா ?கமல் அதிர்ச்சி

சென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான்.

பட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

விலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா? பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில்,

ஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • support@eelanatham.net
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…