அமெரிக்க குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது பெண்கள் பலரும் அடுக்கடுக்காக பாலியல் புகார்களை கூறி அவை ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மற்றொரு முன்னாள் மாடல் அழகி, தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி இங்கிலாந்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார், டொனால்டு டிரம்ப் (70). இவர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். டொனால்டு டிரம்ப் கடந்த 2005ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அப்போது அவர், தான், பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது ஒருவர் எதையும் செய்யலாம் என கூறி உள்ளார். இது தொடர்பாக கடந்த வாரம், ஒரு வீடியோ வெளியானது அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. அவர் மன்னிப்பு கேட்டபோதும், அவரது சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிராக புயல் வீசுகிறது.
[டொனால்ட் ட்ரம்ப் ஒரு பிளே பாய்.. பாலியல் சில்மிஷங்களை அம்பலப்படுத்திய பெண்கள்!] இந்நிலையில், தற்போது 49 வயதாகும், கிர்சேபோம் என்ற முன்னாள் மாடல் அழகி, ஒரு பேட்டியில், டொனால்ட் ட்ரம்ப் எப்போதுமே காம எண்ணத்தில் இருக்க கூடியவர் என்பதை போட்டு உடைத்துள்ளார். ஒரே மேஜையில் 1993ல் வேனிட்டி ஃபேர் நிகழ்ச்சியின்போது, வெள்ளை மாளிகை ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில், கோடீஸ்வரர் டொனால்ட் டிரம்ப்புடன் ஒரே வட்ட மேசையில் அமர நேரிட்டது வாழ்க்கையில் மறக்க முடியாத அவதி என்கிறார் இவர்.
மார்பக பேச்சு பெண்களின் மார்பகங்கள் பற்றிதான் முழுக்க பேசியபடியே இருந்தாராம், டிரம்ப். சிறு மார்பகங்கள் மற்றும் பெரிய மார்பகங்களின் வேறுபாடுகள் குறித்தும், அதில் எந்த வகை மார்பகங்கள் எப்படியெல்லாம் ஆண்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது குறித்தும், ஹஸ்கி குரலில், 'விளக்கம்' கொடுத்தாராம் டிரம்ப். உடல்தான் எல்லாமுமே மேலும், குண்டான பெண்களை பெண்கள் என்றே கூறக்கூடாது என்றும், ஒல்லியாக, செக்சியாக இல்லாத பெண்கள் பெண்களாக பிறக்க தகுதியில்லாதவர்கள் என்றும் டிரம்ப் வர்ணித்துள்ளார். சுமார் 45 நிமிட நேரம், டிரம்பின் போதை ததும்பும் வார்த்தைகளை கேட்டு அங்கே உட்கார முடியாமல் கண்ணீருடன் வேறு மேஜைக்கு ஓடியுள்ளார்,
இப்போது, இரு பெண் குழந்தைகளுக்கு தாயாக உள்ள கிர்ஸ்போம். அமெரிக்கா அவ்வளவுதான் டொனால்ட் ட்ரம்ப் அதிபரானால், அமெரிக்கா நாசமாக போய்விடும் என்றும் கிர்ஸ்போம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அவரது வெளியுறவு கொள்கைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிவரும் நிலையில், பெண்களின் எதிர்ப்பும் டிரம்புக்கு எதிராக புயலாக வீசுகிறது. பெண் பாவம் பொல்லாதது என்பார்கள். டிரம்ப் நிலைமையை நவம்பர் மாத தேர்தல் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.