பனீர்ச்செல்வம் பதில்முதல்வர்
முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரிடமிருந்த காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும், கடந்த செவ்வாய்க்கிழமை முதல், பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா பதவி வகிக்கிறார்.
ஜெயலலிதா பரிந்துரைப்படிதான், பன்னீர்செல்வத்திற்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தகவலை முறைப்படி அறிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன. இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்
சென்னையில் வியாழக்கிழமையன்று தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விபத்துகள் நடக்கும்போது ஓட்டுனரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறை சரியாகப் பின்பற்றப்படாத காரணத்தால்தான் இம்மாதிரி விபத்துகள் தொடர்ந்து நடப்பதாக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை குடிநீர் வடிகால் வாரியம், காவல்துறை, போக்குவரத்துத் துறையின் அலட்சியமே இதற்குக் காரணம் என செய்திகளிலிருந்து அறிய வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆகவே இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டுமென கோருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
தண்ணீர் லாரிகளுக்கான விதிகள், ஒரு நாளைக்கு எத்தனை முறை அவை தண்ணீர் ஏற்றிச் செல்லலாம், தண்ணீர் லாரி தொடர்பான விபத்துகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்தவர்கள் குறித்த விவரம், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இம்மாதிரியான விபத்துகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.
மாநில போக்குவரத்துத் துறை, காவல்துறை, பிற நிர்வாக அதிகாரிகள் விதிமுறைகளைச் சரியாக பின்பற்றாத காரணத்தினாலேயே சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் பெரும் அபாயத்தை எதிர்கொள்வதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.