Super User

Super User

வடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு

நேற்று முன்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டது.

குறித்த சம்பவத்தின் போது ஒரு மோட்டார் கார், 3 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வள்ளம் இரண்டு மற்றும் அதிவலு கொண்ட இயந்திரம் இரண்டும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சந்தேக நபர்களை 7 நாட்களிற்கு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் 23 கிலோ கேரள கஞ்சாவை நேற்று மீட்டனர்.

இன்றைய தினம் கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன, கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் மீட்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டதுடன், நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை பாராட்டியிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

குறித்த நடவடிக்கையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன அவர்களால் நியமிக்கப்பட்ட மது ஒழிப்பு விசேட குழுவுடன் பளை பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராயபக்ச உள்ளிட்ட உயரதிகாரிகளின் வழி நடத்தலில் பளை பொலிஸாரால் பல இலட்சம் பெறுதியான கேரளா கஞ்சாக்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

எமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு மக்கள்

சொந்த நிலங்கள் மீண்டும் கிடைக்கும் வரைக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனா்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பன்னிரண்டாவது நாளாக தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா்.

இரவில் அதிகளவான பனி, பகலில் அதிக வெயில் என காலநிலையின் தாக்கத்திற்கு மத்தியிலும் மக்கள் தமது சொந்த இடத்திற்கு வெல்வதில் உறுதியாக உள்ளனர்.

யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களை கடந்த போதும் தங்களின் சொந்த விவசாய நிலங்கள் இல்லாது இருப்பது அவா்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தங்களின் சொந்த நிலங்களை தவிர தங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை என்பதில் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் மிகவும் உறுதியாக உள்ளனா்.

அத்தோடு சொந்த நிலங்கள் இன்மையால் மீள்குடியேற்றத்திற்கு பின்னரான அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பல உதவி திட்டங்களையும் தாம் இழந்து நிற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தமது நிலமே தமக்கு வேண்டும் என உறுதியாக உள்ள மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகி ன்றனர்.


முஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டமையைப் போன்று, சகல அதிகாரங்களையும் வழங்கும் வகையில் யாப்பில் மாற்றம் கொண்டுவருவதாகவும், கட்சியின் அனைத்து அதிகாரமும் கொண்ட செயலாளராக மன்சூர் எ காதரை நியமிக்கவுள்ளதாகவும் தாருஸ்ஸலாத்தில் நேற்றிரவு நடைபெற்ற கட்டாய அதியுயர்பீடக் கூட்டத்தின் போது ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தரும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்றைய இந்த மாநாடு தீர்க்கமான ஒன்றாக அமையவுள்ளது. இந்த மாநாட்டில் முன்வைக்கவுள்ள முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் நேற்றைய, கட்டாய அதியுயர்பீடக் கூட்டத்தின் போது ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதேவேளை, கட்சியின் தவிசாளர் பதவியை ஹசன் அலியை ஏற்றுக்கொள்ளுமாறு, மு.காவின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட அதியுயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதான வேண்டுகோளை விடுத்திருந்ததாகவும் அதனை ஏற்றுக்கொள்ள ஹசன் அலி மறுத்துவிட்டதாகவும் தெரியவருகின்றது. கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் கூறி, தவிசாளர் பதவியிலிருந்து கடந்த 4ஆம் திகதி, பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தெரு நாய் - எருத்துமாடு மோசடி! வழக்கு வாபஸ்

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.

தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்

ச‌ல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இதனிடையே ச‌ல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.

தற்போது ச‌ல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரும் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.

அந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

வவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய் மயங்கி வீழ்ந்தார்

வடக்கில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கடத்தப்பட்டு காணாமற் போன உறவுகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்க மான பதிலைத் தரவேண்டுமென வலியுறுத்தி நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகி ன்றது.

குறித்த போராட்டமானது வடக்கில் காணாமற் போனோர் பாதுகாவலர் சங்கதினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் வடக்கில் யுத்த காலத்தில் காணாமற் போன நபர்களின் உறவுகளால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் நேற்றுமாலை மயக்கமடை ந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 14 பேர் நேற்று மூன்றாவது நாளாகவும், வவுனியா அஞ்சலகத்துக்கு முன்பாக, உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களில் சிலரின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாக, நேற்றுக்காலை பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர் தெரிவி த்திருந்தார்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர் நேற்றுமாலை மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை

தமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.

நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.

கனடா இளைஞர் பிரித்தானியாவில் படுகொலை

கனடாவில் இருந்து வருகைத்தந்த தமிழர் ஒருவர் பிரித்தானியாவில் கிரேட் லின்ஃபோர்டு பகுதியில் வைத்து படுகொலை செய்ய ப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

32 வயதான சுரேன் சிவானந்தன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் அடையாளம் காட்டியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த படுகொலை வழக்கு தொடர்பில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதில் 37 வயதான ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், கிரோராஜ் யோகராஜா (30) என்பவரும் கைது செய்யப்பட்டுள விசாரிக்கப்பட்டு வருகின்றார். கைது செய்யப்பட்டுள்ள நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வெள்ளி அதிகாலை 4 மணியளவில் கிரேட் லின்ஃபோர்டு பகுதியில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நிலை யில் சடலம் ஒன்றை அந்நாட்டு பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


http://www.bbc.co.uk/news/uk-england-beds-bucks-herts-38731930


http://www.itv.com/news/anglia/update/2017-01-24/three-charged-with-murder-after-mk-death/

எமது நிலம் எமக்கே! கேப்பாபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம்

மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு வருவதனை முன்னிட்டு கேப்பாப்புலவு மக்கள் அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுத்துள்ளனர்.

ஆனால் மைத்திரிபால முல்லைத்தீவுக்கு வரவில்லை என்றாலும் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து இருந்தனர்.

முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும் அவர்கள் போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்து. முதற்கட்டமாக 53 குடும்பங்களுக்குரிய 243 ஏக்கர் காணியை தி இன்றைய தினம் விடுவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் மக்கள் எதிர்ப்பினால் மைத்திரிபால வரவில்லை.

எனினும், கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் வாழ்ந்து வரும் தங்களின் சொந்தக் காணிகள் விடுக்கப்படவில்லை என்றும் மாறாக வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் காணிகள்தான் விடுவிக்கப்படும் பகுதியில் உள்ளன என்றும் கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கும் சில உறுதிக் காணிகள் கேப்பாப்புலவுப் பகுதியில் உள்ளதோடு அவையும் விடுவிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு

முல்லைத்தீவில் இசிங்களப்படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட  243 ஏக்கர் காணி  முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதியால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் பவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. இந்த காணிகளுக்கான அனுமதிகள் பயனாளிகளுக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதோடு காணி அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்கப்பெறாத முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளை தேர்ந்த 1,350 பேருக்குச் சொந்தமான காணி அனுமதிப்பத்திரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…