Super User

Super User

இளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை: சிராந்தி

எனது ஆண் பிள்ளைகளுக்கு நிறைய பெண்தோழிகள் இருப்பதை நினைத்து பெருமைப்படுகின்றேன். இளவயதில் அப்படி இருப்பது அவசியம் என கூறியுள்ளார் சிங்களத்தின் முன்னாள் முதற்பெண்மணி,

அண்மையில் சமகால அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாத யாத்திரையின்போது நாம லுடன், நடிகைகள் தொடர்ந்து பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஷிரந்தி, குறி த்த நடிகைகளை தொலைபேசி ஊடாக எச்சரித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த விடயம் குறித்து ஊடகம் எழுப்பிய கேள்விக்கு ஷிரந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான் என்றும் யாரையும் திட்டியதில்லை. வேண்டுமானால் எனது பிள்ளைகளை கேட்டுப் பாருங்கள். இந்த வயதில் பெண் பிள்ளைகள் நண்பர்களாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு பெண்கள் நண்பர்களாக இருக்க வேண்டும். பெண்களுக்கு ஆண்கள் நண்பர்களாக இருக்க வேண்டும். எங்களுக்கு அது குறித்து தெரியும்.

எனது பிள்ளைகள் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று நான் தீர்மானிக்க மாட்டேன். பெண்கள் வீட்டிற்கு வந்தாலும் நான் சிறந்த முறையில் வரவேற்பேன். மூன்று பிள்ளைகளும் யாரை திருமணம் செய்கின்றார்கள் என்பது தொடர்பில் என்னிடம் இன்னமும் கூறவில்லை.

நான் என்றுமே பலவந்தப்படுத்த மாட்டேன். அவர்கள் புத்திசாலி பிள்ளைகள். நான் என் பிள்ளைகள் மீது கைகளை நீட்டியதில்லை.

என்னைப் போன்றே எனது கணவரும் பிள்ளைகளை திறந்த மனதுடன் பார்க்கின்றார். வேண்டியவர்களை திருமணம் செய்து கொள்ளுமாறே அவரும் கூறுகின்றார் என ஷிரந்தி ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது! மங்கள‌

இலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் மோசமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மிக வும் மோசமானது என பொது அமைப்புக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தெரிவிக்கும் குற்ற ச்சாட்டுக்கள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமையவே புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை மேற்பார்வை செய்யும் பணியில் தாம் ஈடு பட்டுள்ளதால், இதனை உறுதியாகக் கூற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டதிட்டங்களை உள்ளடக்கி சர்வதேச தரத்திலும் முன்னையதை விட மிகவும் உறுதியாகவும் கடைப்பிடிக்கக்கூடியதாக புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியி ட்டுள்ளார்.

அண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடரும் கைதுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் சமரவீர, கடும் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியி ருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மிகவும் மோசமாக நடைமுறை ப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவித்து ள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஒரு தசாப்தகால ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மனநிலை மாற்றத்தை உடன டியாக மாற்றியமைக்க முடியாது என்றும் குறிப்பிட்ட அமைச்சர் சமரவீர, கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த அதிகாரிகளும், அதிகார வர்க்கத்தினருமே தொடர்ந்தும் பதவிகளில் இருப்பதால் ஆட்சி மாறினா லும் சில விடயங்களை மாற்ற முடியாதிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஒரு இரவில் இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவது சிரமமான விடயம் என்று கூறிய அமை ச்சர், படிப்படியாகவே மாற்றியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆஸி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்!

பசிபிக் தீவுகளில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் தடுப்பு மையங்களில் உள்ள அகதிகள், அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல்
ஏற்கனவே தனது அகதிகள் பரிசீலனை மையங்களில் உள்ள அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும் "ஒரு முறை ஒப்பந்தம்" என டார்ன்புல் இதனை விவரித்துள்ளார்.

அகதிகள் எண்ணிக்கை குறித்தும், எப்போது நடைபெறும் என்ற கால அட்டவணை குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.
பப்புவா நியு கினியா மற்றும் நவ்ருவில் இருக்கும் ஆஸ்திரேலிய முகாம்களில் உள்ள அகதிகள், இந்த மீள்குடியேற்ற ஒப்பந்தம் குறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித உரிமை ஆர்வலர்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர்; இருப்பினும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதை ஒப்புக்கொள்வாரா என்பது உடனடியாக தெரியவில்லை.

எனது தோல்விக்கு FBI இயக்குனரே காரணம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது அதிர்ச்சிகரமான தோல்விக்கு, எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியின் மீது ஹிலரி குற்றம் சுமத்தியுள்ளார்.

தனது மின்னஞ்சல் பயன்பாடு குறித்து தேர்தலுக்கு சற்று முன்னதாக வந்த கோமியின் புதிய விசாரணை அறிவிப்பு, தனது பிரச்சாரத்தின் வேகத்தை குறைத்தது விட்டது என கட்சியின் நிதி வழங்கியவர்களிடம் ஹிலரி தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் நான்காவது நாளாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நியூயார்க்கில் உள்ள யூனியன் சதுக்கத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலிஸார் தடுத்து நிறுத்தினர்;

டிரம்ப் எதிர்ப்பாளர்கள்
அந்நகரில், டிரம்ப் டவர் என அழைக்கப்படும் டிரம்பிற்கு சொந்தமான கட்டடம், டிரம்பின் வீடு மற்றும் அவரின் வர்த்தக தலைமையகம் ஆகியவற்றை நோக்கி போராட்டக்கார்ரகள் பேரணி நடத்தினர்.

வென்றார் டொனால்ட் ட்ரும்ப்

ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் என்று ஏபி செய்தி முகமை தகவல்கள் தெரிவித்துள்ளன.

பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது.
ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி இருந்த மாநிலங்களில் பெற்ற வெற்றி டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியை சாத்தியமாக்கியது.

கிளினொச்சியில் மீழமைக்கப்பட்ட சந்தை திறப்பு

கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி தீ விபத்தினால் எரிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை மறுநாள் பதினேழாம் திகதி வந்து பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு ஆவன செய்வதாகக் கூறிச்சென்றதன் பிரகாரமும் கரைச்சிப் பிரதேச சபையினரால் வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலும் தீவிபத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு செப்டம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் திகதி ஒன்பது மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஒன்பது மில்லியனைக் கொண்டு நாற்ப்பத்தி ஐந்து தற்காலிக கடைகள் கரச்சிப் பிரதேச சபையினரால் அமைக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் வடமாகாண முதமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் , வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை , அரியரத்தினம் ,தவநாதன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் , உள்ளுராச்சி திணைக்கள உத்தியோகத்தர்கள் ,கரச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

யாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார் மறுப்பு

யழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
செவ்வாய்க் கிழமை இரவு 8 மணியளவில் அந்திராணி வாய்க்கால் வீதியில் இளைஞர்கள் மூவர் துவிச்சக்கர வண்டியில் வேலை முடித்து வீடு திரு ம்பிக்கொண்டிருந்தபோது, இலக்கத்தகடுகளை கறுப்பு துணியினால் மறைத்திருந்ததுடன், முகங்க ளை யும் கறுப்புத் துணிகளால் மூடி தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர், குறித்த இளைஞர்கள் மீது கைக்கோடரி போன்ற ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் நடாத்தி யிருந்தனர்.

இதன்போது இளைஞர்களில் இருவர் காயமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்ததனைத் தொடர்ந்து, மற்றைய இளைஞனை உதைந்து விழுத்திய வாள்வெட்டுக் குழுவினர் அவர் வைத்திருந்த கையடக்கத் தொலைபேசியை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை வீதியால் சென்ற வாள்வெட்டுக்குழுவினர், சங்கரத்தை பகுதியில் வீதியால் செல்பவர்களை நோக்கி வாளை விசுக்கியவாறு சென்றிருந்ததாகவும் எனினும் எவரும் வாள்வெ ட்டுக்கு இலக்காகவில்லை எனவும் அப் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

அந்திரானி வாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சித்தங்கேணி சந்தியில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போது, குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாட்டை மேற்கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தொலைபேசி மூலம் இச் சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்திய நிலையிலேயே வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ட்ரம்ப் முன்னிலையில், ஹிலாரி ஆதரவாளர்கள் சோகத்தில்

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பல கணிப்புகளையும் விட சிறப்பான முறையில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு வேட்பளர்களுக்கும் இடையிலான ஆதரவில் ஊசல் நிலையில் உள்ள முக்கிய மாநிலங்களான ஃ புளோரிடா மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேர்தல்துவங்கியது, முடிவுகள் நாளையில் இருந்து..

அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க உள்ள அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அனைத்து 50 மாநிலங்களும், நிர்வாகத் தலைநகரான வாஷிங்டன் டிசி பகுதியும், ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் தங்கள் வாக்குப்பதிவை செலுத்தவுள்ளன.

நாட்டின் மேற்கு கடற்கரை பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பாக, கடும் போட்டி நிலவும் முக்கிய மாநிலங்களான வர்ஜினியா மற்றும் ஜார்ஜியா ஆகியவற்றில் நள்ளிரவில் (ஜிஎம்டி நேரப்படி) முதல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் போட்டி நிலவும் சில முக்கியமான மாநிலங்களின் ஊடாக ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு முக்கிய அதிபர் வேட்பாளர்களும் கடும் பிரசாரம் செய்துள்ள சூழலில், திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.

பழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட் பாதுகாப்பு

புதிதாக வெளியிட உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் அதிநவீன தொழில்நுட்பம் இருக்கும் என்றும், இதன்மூலம், செயற்கைக்கோள் மூலமாகவும், பணம் பதுக்கப்படும் இடத்தை கண்டறியலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செவ்வாய்க்கிழமை நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லாத காசாகிவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த பணத்திற்கு பதிலாக நாளை மறுநாள், முதல் வங்கிகளிலும், போஸ்ட் ஆபீஸ்களிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 500 மற்றும் 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட உள்ளன. இந்த ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாம்.

இது, செயற்கைக்கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை எதிரொலிக்க கூடியது. எனவே செயற்கைக்கோள் மூலமாக மொத்தமாக சேமிக்கப்படும் பணத்தை கண்டுபிடித்துவிடலாமாம்.

பூமிக்கு அடியில் 120 மீட்டர் வரை கொண்டு சென்று பதுக்கி வைத்தாலும் கூட காட்டி கொடுத்துவிடும் என்கிறார்கள். இந்த தகவல் வதந்தியா, உண்மையா என்பதை நாளை வியாழக்கிழமை வங்கி திறந்ததும் நாமே போய் வாங்கி பார்த்துவிடலாம். அதுவரை பொறுமையாக இருப்போம்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…