தாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்

தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தாயக உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஒருமித்து கோஷங்களை எழுப்பினர்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக இளைஞர்களினால் வலியுறுத்தி கூறப்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெளியிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர்.

கருணா எனப்படும் முரளிதரன் கைது

சிங்கள அரசுடன் சேர்ந்து ஒஒட்டுக்குழுவாக இஇயங்கிவந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவில்   இன்றையதினம் ஆஜராகியநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த ஆட்சியின்போது பிரதி அமைச்சராக பதவி வகித்தகாலத்தில்   அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த  குற்றச்சாட்டு தொடர்பிலும் ஆட்சி மாறிய நிலையில் அவர் பயன்படுத்திய வாகனங்களை மீளவும் அரசிடம் ஒப்படைக்க தவறியமை குறித்து   வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்றையதினம் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசார ணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டநிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்

கடந்த யுத்த காலத்தில் 45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்? தமிழ் மக்கள் மாத்திரமல்ல.  45 முஸ்லிம்களும் மாவீரர்களாகியுள்ளனர். ஆகவே தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களாக இருந்து இந்த மண்ணின் விடுதலைக்காக தியாகத்தை மேற் கொண்டிருக்கின்றார்கள்.  

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஒருவர் மரணித்த பின் அவருக்கு அஞசலி செலுத்த முடியும். ஆனால் மாவீரர்களுக்கு கட்டாயம் அஞ்சலி செலுத்த வேண்டும்.

 தமிழ் மக்களுக்காக தமது உயிரை துச்சமாக நினைத்து அவர்கள் போராடியவர்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது நமது கடமையாகும்.பல உயிர்கள் நியாயமான விடுதலைக்காக தங்களை தியாகம் செய்து இருக்கின்றன.

 ஆனால் இங்கு ஆட்சி செய்த அரசாங்கங்கள் தான் தியாகங்களை சரியாக மதிக்க வில்லை. போர் எண்பது ஒரு நாடு இன்னுமொரு நாட்டின் மீது செய்வதுதான் போராகும்.

 ஆனால் உள்நாட்டில் மக்கள் உரிமைக்காக போராடுவது போராக கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் மாத்திரமல்ல பல நாடுகளில் நடைபெற்றுள்ளது.

 நாங்கள் தமிழர்கள் தமிழர் யார் என்பதனை உலகுக்கு காட்டியுள்ளார்கள். ஒரு தாய் இன்னொரு தாயிடம் எங்கே உன் மகன் எனக் கேட்ட போது அந்த தாய் புலி கிடந்த குகை இது என் மகன் போர்க்களத்தில் நிற்பான் என கூறிய அந்த வீரத்தாய்மார் இந்த வீர வித்துக்களை ஈன்று இன்று மண்ணுக்கு வித்துடல்களாக ஆக்கி எமது எதிர்காலத்திற்காக மாபெரும் வித்திட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

தென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் உயிரிழப்பு

தென் த‌மிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தை தங்கராசா - வசந்தகுமார் (வயது48) அவுஸ்திரேலியாவில் உயிரிழந்ததாக மட்டக்களப்பிலுள்ள அவரது மனைவிக்கு உயவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் NO;152 Rock State, bathurst, new South wel 2795 என்ற முகவரியில் வசித்து வந்த தனது கணவர் இறந்து விட்டதாக ஒக்டோபர் 28 அதிகாலை அவுஸ்திரேலியாவில் உள்ள உறவினர் ஒருவரின் தொலைபேசியூடாக தகவல் கிடைத்ததாக வாழைச்சேனை கிண்ணையடியை சேர்ந்த உயிரிழந்தவரின் மனைவி ரஞ்சிதமலர் தெரிவித்தார்.


அவுஸ்திரேலியாவில் தனது ஒரு மகளும் கணவரும் வசித்து வந்ததாகவும், நான்கு மகள்களுடன் தான் வாழைச்சேனை கிண்ணையடியில் வசித்து வரும் நிலையில் தனது கணவர் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை தருவதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்தார்.
 ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தை தங்கராசா - வசந்தகுமார் (வயது48) அவுஸ்திரேலியாவில் உயிரிழந்ததாக மட்டக்களப்பிலுள்ள அவரது மனைவிக்கு உயவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழீழத்திலும் ஆர்ப்பாட்டம்

வடக்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்ட பேரணியினைத் தொடர்ந்து கிழக்கிலும் இன்று மாணவர்களால் ஆர்ப்பாட்டம் இடம் பெறுகின்றது. கல்லடி விபுலானந்தர் அழகியல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது

மட்டக்களைப்பில் பல்வேறு இடங்களில் விபச்சாரவிடுதிகள் இயங்குகின்றன, இவை சிகை அலங்காரன், முக அலங்காரம் என்று பல்வேறு பெயர்களில் இயங்குகின்றன. இந்த விபச்சார நிலையங்களில் பள்ளி மாணவிகளும் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக காவல்துறையினர் தேடுதல்களை நடத்துவந்துள்ளனர்.இன்று காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் சிவகீதா கைது செய்யப்பட்டுள்ளார்.


பிள்ளையான் முதலைமைச்சராக இருந்த காலகட்டத்தில் மட்டக்களைப்பில் மேயராக இருந்தவர் சிவகீதா
இவருடன் இவரது கணவர் உட்பட ஏழு பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…